பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!மரபு விக்கி இருந்துபிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்! விநாயகரைத் துதித்துவிட்டே அனைத்து வேலைகளையும் ஆரம்பிப்பது எல்லாருக்குமே வழக்கம். மூலமுதல்வன் என்றும் சொல்லப்படுவது உண்டு. நாம எழுதறப்போ கூட பிள்ளையார் சுழின்னு போட்டுத் தான் எழுதுவோம், இல்லையா? பிள்ளையார் சுழி எப்படிப் போடணும்னு தெரியும் இல்லையா? 2 மாதிரிப் போட்டுக்கீழே 2 கோடு போடணும். இது "ஓம்"
"விநாயகனே வெவ்வினையை வேரறுக்க
என்று ஒரு தமிழ்ப் பாடல் இருக்கிறது. இதன் அர்த்தம் என்னன்னா நம்மளோட வினை எல்லாத்தையும், அதாவது நாம் செய்யற, செய்யப் போற பாவங்கள் எல்லாத்தையும் வேரோடு அறுத்து விடுவான் விநாயகன் என்று முதல் வரிக்கு அர்த்தம். 2வது வரிக்கு விநாயகன் நம்முடைய வேட்கை தணிவிப்பான் என்றால் நம்முடைய நியாயமான வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பான் என்று பொருள் கொள்ள வேண்டும். அடுத்து என்ன சொல்கிறார்கள் என்றால்,
"விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்" இந்த உலகமே அவருடைய தொந்திக்குள் அதாவது பேழை வயிற்றுக்குள்ளே அடங்கி இருக்கிறதுன்னு அர்த்தம். அதான் விநாயகர் வயிறு மிகவும்
ஆகையால் அந்த விநாயகனை வணங்கிக் கும்பிடு, உன்னோட எல்லா வேலையும் நல்லா நடக்கும். அதான் "தன்மையிலே கண்ணிற்படுமின் கனிந்து!"ன்னு சொல்றாங்க. "கனிந்து"ங்கிற வார்த்தையோட முழு அர்த்தம் விநாயகனின் சக்தியை நாம் நல்லாத் தெரிந்து கொண்டு, மனம் கனிந்துன்னு இந்த இடத்திலே அர்த்தம் பண்ணிக்கணும்.அடுத்து இன்னொரு முறையிலே ஸ்லோகம் சொல்லிக் கூட விநாயகரை வழிபடலாம்.
"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சர்வ விக்ன உப சாந்தயே!"
மஹாவிஷ்ணுவிற்கு நிகரானவரும்,வெள்ளை உடை அணிந்தவரும்,ரொம்பவே மகிழ்ச்சியான முகத்தைக்கொண்டவருமான அந்த விநாயகரைக்கும்பிடுகிறேன். என்னுடைய காரியங்களில் உள்ள விக்னங்களை நிவர்த்தி செய்துவேலைகளை முடித்துக் கொடுக்கட்டும்." என்று வேண்டிக் கொண்டு தான் பெரியவங்க எல்லாம் அவங்க ஜபம், தபம்,பூஜை, புனஸ்காரம் எல்லாம் செய்வாங்க இல்லையா? அதான் மேற்படி ஸ்லோகத்தின் கருத்து. அடுத்து நாம் விநாயகர் எப்படி வந்தார்னு பார்க்கலாம்.
--Geetha Sambasivam 04:42, 24 ஆகஸ்ட் 2011 (UTC) |

