பால் வடை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

திருமதி.வசந்தி குகேஷ்

                                                                                       
தேவையான பொருட்கள் :


பச்சரிசி – 2 ஆழாக்கு

பால் – 1/2 லிட்டர்
சக்கரை (பொடித்தது) – 1 கப்
எண்ணெய் – 1/2 லிட்டர்

செய்முறை :

1) பச்சரிசியை பாலில் அரை பதமாக வேக வைத்துக் கொள்ளவும்.

2) ஆட்டுரலில் இட்டு நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும்.

3) தேவையென்றால் சிறிது பால் தெளித்து அரைத்துக் கொள்ளலாம்.வடை தட்டும் பதத்திற்கு பக்குவமாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

4) எண்ணையை காய வைத்து மாவை உருட்டி எடுத்து, வாழை இலையில் வைத்து லேசாக தட்டி நடுவில் ஓட்டை போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

5) பொரித்தெடுத்த வடையின் மீது லேசாக நெய் தடவி, அதன் மீது பொடித்த சக்கரையை முழுவதும் பரவலாக படும்படி இரு பக்கமும் தூவவும்.

சுவையான பால் வடை தயார். சூடாகச் சாப்பிட சுவை கூடும்!






--பவள சங்கரி திருநாவுக்கரசு. 18:21, 11 ஆகஸ்ட் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=பால்_வடை&oldid=7854" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 12 ஆகஸ்ட் 2011, 17:22 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,190 முறைகள் அணுகப்பட்டது.