பால் கூட்டு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

எழுதியவர்:விசாலம் ராமன்



பெரிய தர்பூஜா பழத்தில் அதன் பிங்க் பகுதி வெட்டியபின் அதன் தோலுடன் சேர்ந்திருக்கும் வெண்மைப்பாகம் ருசியில்
பூஷிணிக்காய் போல் இருக்கும். இதைச் சிறு துண்டுகளாய் வெட்டி பின் அடுப்பில் தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும் பின் மிக்சியில் பாதி மூடித்தேங்காய் திறுவலைப் பாதி தேக்கரண்டி அரிசியுடன் நன்றாக அரைக்கவும்.


ரெடியான வெந்த தர்பூஜா துண்டுகளுடன் அரை டம்ளர் பாலுடன் அரைத்த விழுதைக் கலக்கவும். இலுப்பச்சட்டியில் தேங்காய் எண்ணெய் 2 தேக்கர்ண்டி விட்டு கடுகு போட்டு அது வெடிக்க ஆரம்பித்தவுடன் 3 பச்சை மிளகாயைக்கீறி
அதனுடன் சேர்த்து இலேசாக வதக்கி அந்தக்கலவையில் சேர்க்கவும். பின் 2 ஸ்பூன் சீனி அதில் போடடு அடுப்பில் வைத்து எல்லாம் சேர்ந்து வந்தவுடன் இறக்கவும்.


இறக்கியபின் 3 துளிகள் தேங்காய் எண்ணெய் விடவும்.


பின்குறிப்பு:

இனிப்பு பிடித்தால் சர்க்கரையின் அளவைக்கூட்டலாம்.
உறைப்பு பிடித்தால் பச்சை மிளகாயைக்கூட்டலாம் வெந்தநிலக்கடலை காராமணியும் இத்துடன் சேர்க்கலாம்
கருவேப்பலையும் போடலாம்.
இது ருசியில் கேரளா ஓலன் போல இருக்கும். இதன் ருசியே இலேசான இனிப்புடன் உப்பு உறைப்பு எல்லாம் இருக்கும் நம் வாழ்க்கைப்போல் {கசப்பு இருக்காது}. செய்து பாருங்கள்!

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=பால்_கூட்டு&oldid=1185" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 31 ஜனவரி 2010, 18:17 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 5,026 முறைகள் அணுகப்பட்டது.