பாதாம் கேக்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

உமா சண்முகம் 


தேவையான பொருட்கள்

மைதா மாவு -200கிராம்

பாதாம் பருப்பு -25கிராம்

பேக்கிங் பவுடர் -2டீஸ்பூன்

முட்டை -2

வெண்ணெய் -150கிராம்

பாதாம் எஸென்ஸ் -சில துளிகள்

உலர்ந்த பழங்கள் -50கிராம்

முந்திரிப்பருப்பு -25கிராம்

கேக் மசாலா பவுடர் -1/2டீஸ்பூன்

பால் -1டேபில் ஸ்பூன்

பொடித்த சர்க்கரை -200கிராம்


செய்முறை : 


1.பாதாம் பருப்பை சுடான நீரில் ஊற வைத்து தோலுரித்து பால் விட்டு நன்கு

அரைத்துக் கொள்ளவும்.

2.மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு சலிக்கவும்.

3.வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து லேசாகும்வரை குழைக்கவும்.

4.முட்டைகளை உடைத்து ஊற்றி நுரைக்க அடிக்கவும்.

5.மாவுடன் வெண்ணெய் சர்க்கரைகுழைத்த கலவை முட்டை இவற்றை மெதுவாக

ஊற்றி கலக்கவும்.கலக்கும் போதே பாதாம் எஸன்ஸ் கெக் மசாலாப் பவுடர் பாதாம்

பருப்பு அரைத்தது முந்திரிப்பருப்பு துண்டுகள் மாவில் புரட்டி எடுத்த உலர்ந்த பழத்

துண்டுகள் இவற்றைக் கலக்கவும்.

6.கேக் கலவையை ட்ரேயில் ஊற்றி சூடாகிக் கொண்டிருக்கும் கேக் ஒவனில்

வைத்து பேக் செய்யவும்.









--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:28, 27 செப்டெம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=பாதாம்_கேக்&oldid=8397" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 19 அக்டோபர் 2011, 09:17 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 4,468 முறைகள் அணுகப்பட்டது.