பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோவில் - காஞ்சிபுரம்மரபு விக்கி இருந்துஅருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோவில் மூலவர் : பாடலாத்ரி நரசிம்மர் தல சிறப்பு: இங்கு மூலவர் சன்னதியின்கீழ் உள்ள விமானம் பிரணவ கோடி விமானம் எனப்படும். "பாடலம்' என்றால் "சிவப்பு' "அத்ரி' என்றால் "மலை'. நரசிம்மர் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்தால் "பாடலாத்ரி' என இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது. இது பல்லவர் கால குடைவரைக் கோயிலாகும்.தாயார், ஆண்டாள் சன்னதிகள் கிழக்கு நோக்கியும், விஷ்வக்ஸேனர், லட்சுமி நரசிம்மர் சன்னதிகள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. கருடன், ஆஞ்சநேயர் தனித்தனி சன்னதிகளும் உள்ளன கோயில் முகப்பில் பெருமாளின் தசாவதாரக்காட்சிகள் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 12 ஆழ்வார்களும் இத்தலத்தில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளனர். தல வரலாறு: ஜாபாலி மகரிஷி நரசிம்மரின் தரிசனம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் பிரதோஷ வேளையில் மகரிஷிக்கு தரிசனம் தந்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது. மூலவர் பாடலாத்ரி நரசிம்மர் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். வலது கையை அபயகரமாகவும் , இடது கை தொடை மீது வைத்த நிலையிலும் உள்ளது. மூன்று கண்களுடன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். உற்சவர் பிரகலாதவரதன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில், பிரணவகோடி விமானத்தின் கீழ் அருள்கின்றனர்.மூலவர் குகைக்கோயிலில் அருள்பாலிப்பதால் அவரை வலம் வர வேண்டுமென்றால் சிறிய குன்றினையும் சேர்த்து வலம் வர வேண்டும். சிறப்பம்சம்: திருவிழா: திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 05:34, 7 செப்டெம்பர் 2011 (UTC) நன்றி - தின மலர் |
