பச்சடி வகைகள்- புத்தாண்டு சிறப்புப்பச்சடிமரபு விக்கி இருந்துபுது வருடத்திற்கான வேப்பம்பூப் பச்சடி.
முதல் முறை:
புளிக்கரைசலில் உப்புச் சேர்த்துக் கொதிக்கவிடவும், புளி வாசனை போகக் கொதித்ததும், அதில் வெல்லத்தைச் சேர்த்து வெல்ல வாசனை போய்ப் பச்சடி கெட்டியாகும் வரை விடவும். கீழே இறக்கி வைத்து, நெய்யில் வறுத்த வேப்பம்பூவையும், ஏலக்காய்த் தூளையும் சேர்த்துக் கலக்கவும்.
மாங்காய்த் துண்டங்கள் ஒரு கிண்ணம், உப்பு, வேக வைக்க நீர் தேவையான அளவு, வெல்லம் ஒரு கிண்ணம், ஏலப்பொடி, வேப்பம்பூ,, வறுக்க நெய். அரிசி மாவு தேவையானால்.
மாங்காய்த் துண்டங்களை நீரில் போட்டு வேக வைக்கவும். உப்புச் சேர்க்கவும். நன்கு வெந்ததும், வெல்லம் சேர்க்கவும். வெல்ல வாசனை போக வெந்ததும், கெட்டியாக இல்லை எனில் கொஞ்சம் அரிசிமாவைக் கரைத்து அதில் விடவும். கீழே இறக்கி ஏலப்பொடியையும், நெய்யில் வறுத்த வேப்பம்பூவையும் சேர்க்கவும்.
அதோடு வேப்பம்பூ உடலுக்கும் நல்லது. பித்தம், அஜீரணம், வாய்வுக் கோளாறு போன்றவற்றை நீக்கும். அதை அப்படியே நெய்யில் வறுத்தும் சாப்பிடலாம் என்றாலும் வருடப் பிறப்பின் போது இப்படிச் சாப்பிடுவதன் மூலம் நம் மனம் புது வருஷத்தின் கஷ்ட, நஷ்டங்களை எதிர்கொள்ளும் வலிமையைப் பெறும் என்பது ஒரு நம்பிக்கை. --Geetha Sambasivam 07:37, 14 ஏப்ரல் 2011 (UTC)
|