நாள் கிழமையைக் கண்டுபிடித்தவன் தமிழனா? எகிப்தியனா?

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தமிழ் இலக்கியத்தில் சுவை மிகு காட்சிகள்.


ச.சுவாமிநாந்தன்,, எம்.ஏ., (பிரித்தானியா)


நாள் கிழமையைக் கண்டுபிடித்தவன் தமிழனா? எகிப்தியனா?


ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள், ஒரு மாதத்திற்கு சுமார் 30 நாட்கள் என்று நமக்கு வகைப்படுத்திக் கொடுத்தது எகிப்தியர்கள் என்று மேலைநாட்டார் கூறுவர். ஏனெனில் எகிப்திய பிரமிடுகளிலும் அங்கே கிடைத்த எழுத்துக்களிலும் தான் இதற்கான பழமையான ஆதாரங்கள் உள்ளன என்று அவர்கள் கூறுகிறார்கள். இதே போல ஞாயிறு முதல் சனி வரையுள்ள ஏழு கிழமைகளையும் எகிப்தியர்கள் தான் கண்டு பிடித்ததாகவும் கூறுவர். ஆனால் இதில் ஒரு சிறிதும் உண்மை இல்லை என்பதை வடமொழி, தமிழ் மொழி இலக்கியங்களைப் படித்தோர் அறிவர்.


இன்றைக்கு ஏறத்தாழ 1500 ஆண்டுகளூக்கு முன்பு வாழ்ந்த, "நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த" ஞானசம்பந்தன் பாடிய ஒரு தேவாரப்பாடலில்,
"ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழன் வெள்ளி, சனி பாம்பு இரண்டும் உடனே
--(கோளறு திருப்பதிகம்)
என்ற வரிகள் வருகின்றன. இதில் மிகவும் அழகாக ஞாயிறு முதல் சனி வரை கிழமைகள் அடுக்கப்பட்டுள்ளன. இந்திய இலக்கியத்தில் இப்படி கிழமைகளை முறையாக கூறும் ஒரே இடம் இதுதான் என்றால் அது மிகையல்ல. இன்று மேலைநாட்டு காலண்டர்கள், பின்பற்றும் அதே வரிசையில் ஞானசம்பந்தர் பாடியுள்ளார். சனிக்கிழமைக்கும் பின்னர் வரும் "பாம்பு இரண்டும் உடனே" என்பது ராகு, கேது என்னும் நிழல் கிரகங்களை (சாயா கிரகங்கள்) குறிக்கும்.


ஞானசம்பந்தருக்கு ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் எகிப்தியர்கள். அப்படி இருக்கையில் தமிழன்தான் கிழமைகளைக் கண்டுபிடித்தான் என்று எப்படிக் கூற முடியும்?


இதோ ஆதாரங்கள்:-


(1) தேவாரப்பாடலில் தான் இப்படிக்கிழமைகள் முறையாகக் கூறப்பட்டுள்ளன.


(2) ரிக் வேதத்தில் கூட ஆண்டுக்கு 360+5 நாட்கள், 12 மாதங்கள் என்ற குறிப்பு உள்ளது. கதிர்காமம் முதல் காத்மாண்டு வரையும் துவாரகா முதல் டாக்கா வரையிலும் ஒரே பண்பாடு நிலவியதை நாம் அறிவோம். சூரியனையும் சந்திரனையும் இணைத்துப் பேசுவது இந்திய இலக்கிய மரபாகும். புறநானூற்றுப்பாடல், முதல் (புறம் 228, மதுரக்காஞ்சி 193-196, அகநானூறு 204) சிலப்பதிகார வாழ்த்துப்பகுதி வரை ஏராளமான இடங்களில் இதைக் காணலாம். இதே போல ரிக்வேதத்திலுள்ள புருஷ சூக்தம் முதல் காளிதாசன் படைத்த ரகுவம்சம், விக்ரம ஊர்வசீயம் வரை பல இலக்கியங்களிலும் சூரியனுக்கு அடுத்தாற்போல சந்திரனை வரிசைப்படுத்தியிருப்பதைக் காணலாம். உலகில் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் இத்தகைய விஷயங்களை இந்த எண்ணிக்கையில் காணமுடிவதில்லை. தமிழ், வடமொழிக் கல்வெட்டுக்களிலும் கூட "சூரிய-சந்திரன் உள்ளவரை இது அழியாது" என்ற வரிகளைக் காண்கிறோம்.


(3) கிழமை வரிசையில் வியாழனுக்கு அடுத்தாற்போல வெள்ளியை வைப்பதும் உலகில் வடமொழி, தென்மொழி இலக்கியங்களில் மட்டுமே காணக்கிடைக்கின்றது. வியாழனை "தேவகுரு" என்றும் வெள்ளியை "அசுர குரு" என்றும் நமது இலக்கியம் வரிசைப் படுத்தியுள்ளது. மேலும் எகிப்திய, சுமேரிய, பாபிலோனிய, கிரேக்க, ரோமானிய தெய்வங்கள் இன்று மியூசியங்களில் மட்டுமே உள்ளன. ஆனால் நவக்கிரகங்களோவெனில் இன்றும் கோவில்களில் வழிபடப் படுகின்றன. ஆகவே நாம்தான் இதைக் கண்டுபிடித்தோம் என்றால் மிகையாகாது.


--Geetha Sambasivam 02:45, 13 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 13 நவம்பர் 2011, 02:45 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,207 முறைகள் அணுகப்பட்டது.