நாக்பூரின் மார்பத் திருவிழா

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 '
'
நாக்பூரின் மார்பத் உத்சவம்


மார்பத்2.jpg
மார்பத்1.jpg

நாக்பூரின் மார்பத் ஊர்வல உத்சவம் கடந்த 150 வருடஙகளாக நடந்துவருகிறது. 1885ம் வருடம்  இந்திய நேஷனல் காங்க்ரஸ் அமைப்பு வெள்ளையர் ஆத்திக்கத்திற்கு எதிராக போர்க்கொடி எழுப்பியது.  அதன் முக்கிய தலைவரான காலஞ்சென்ற பாலகங்காதர திலகரால் வெள்ளையருக்கு எதிராக மஹாத்மா காந்தியின் அஹிம்சை போராட்டத்தில் மக்களை ஒற்றுமை படுத்தி ஊக்குவிப்பதற்காக  மஹாராஷ்ட்ர மாநிலம் முழுவதும் கணேசோஸ்தவ (வினாயகர் உத்ஸவ மண்டல்) மண்டல்கள் உருவாக்கப்பட்டன. மஹாத்மா காந்தியின் ” வெள்ளையனே வெளியேறு ” என்ற போராட்டத்தின்  எதிரொலியாக நாக்பூரில் தரானே தேலி சமாஜ் என்ற குழுவினரால் “மார்பத் ஊர்வல திருவிழா”  துவங்கப்பட்டது. 1885ம் வருடம் அப்பாஜி மற்றும் பதஞ்ஜி கோப்படே என்ற ச்கோதரர்களால் பிவலி
மார்பத் என்ற மஞ்சள் நிறமுள்ள 4 அடி உயரமுள்ள உருவச்சிலையை உருவாக்கி இந்த மார்பத் ஊர்வல திருவிழாவை ஆரம்பித்து வைத்தார்கள். இந்தத் திருவிழா வெள்ளையர்களால் நாக்பூரில் குடியிருக்கும் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியஙளுக்கு எதிராக துவஙகப்பட்டது என்றும் சரித்திரம் கூறுகிறது.


1920 முதல் இந்த உருவச்சிலைகைன் உயரம் 20 அடியாக உயர்த்தப்பட்டது. இதன் பின்னணியில் புராண ரீதியாக ஒருகதை புழக்கத்திலிருக்கிறது.   ஸ்ரீகிருஷ்ணபகவான் துவாரகையில் யசோதையின்  மகனாக வளரும் சமயத்தில் அவனைக் கொல்வதற்காக கம்சனால் ஏவிவிடப்பட்ட பூதனை என்ற  அரக்கியின் உருவமாக பிவ்லி மார்பத் (மஞ்சள் நிறமுள்ள உருவச்சிலை) மற்றும் காலி மார்பத் (கறுப்பு நிற உருவச்சிலை) என்ற பெண் உருவச்சிலைகளை உருவாக்கி ஊர்வலமாக எடுத்துச் சென்று எரியவிடுவது வழக்கமாக இருந்தது என்றும் கூறுகின்றனர் .  இதன் பின்னணியில் இன்னொரு கதையும் இருக்கிறது. அந்தக் காலத்தில் நாக்பூரை ஆண்டு வந்த  போஸ்லே மகராஜாவின் மனவி அரசி பிக்காபாய் வெள்ளையர்களின் ஆதிக்கத்துக்கு உடந்தையாக இருந்ததாகவும் அந்த அரசிக்கு எதிராக இந்தக் காலிமார்பத் ஊர்வலத்  திருவிழாவை மக்கள் துவங்கியதாக ஒரு சிலர் கூறுகிறார்கள்.  2007ம் ஆண்டு நாக்பூரில் பரவிய கோழிகாய்ச்சல், 2008ம் ஆண்டு சிக்கென் குனியா 2010 ம் ஆண்டு  ஸ்வைன் ஃப்ளூ போன்ற கடும் நோய்களிருந்து நாக்பூர் மக்களை இந்த மார்பத் திருவிழா ஊர்வலம்  காப்பாற்றியதாக நாக்புர் மக்கள் நம்புகிறார்கள்

இருமார்பத்.jpg




சமீப காலமாக இந்த ஊர்வலத்தின் பின்னணியில் லஞ்ச ஒழிப்பு, விலைவாசி உயர்வு, தீவிரவாதம், கறுப்புப்பணம், வரதஷிணை கொடுமை, பஞ்சம், அன்னா ஹஜாரேயின் லோக்பால் பில் போன்ற கருத்துகளை பிரதிபலிக்கும் உருவச்சிலைகள் மற்றும் போஸ்டர்கள் ஊர்வலத்தில் எடுத்துச்சென்று மக்களின் விழிப்புணர்வை அதிகப் படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டு செயல் படுத்தப்படுகிறது.  இந்த வருட ஊர்வலத்தில் மும்பை ஜெயிலில் இருக்கும் பாகிஸ்தானின் தீவிரவாதியான கசாபின் உருவச்சிலையும் சௌதி அராபியாவில் பிடிபட்ட தீவிரவாதியியான ஜுன்டலின் உருவச்சிலையும்  ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு எரிக்கப்பட்டது.  இந்தத் திருவிழா ஊர்வலத்தில் கொண்டு செல்லப்படும் பிவ்லா மார்பத் (மஞ்சள் உருவச்சிலை) மற்றும்  காலி மார்பத் (கறுப்பு உருவச்சிலை) மிக சக்திவாய்ந்த்து என்று நாக்பூர் மக்கள் நம்புகிறார்கள். உருவச்சிலைக்கு ப்ரார்த்தனைகளும் பிறந்த குழந்தைகளை உருவச்சிலயின் முன்பில் கிடத்தி அதன் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள்.  ஒவ்வொரு வருடமும் இந்த 20 அடி உயரமுள்ள காலி மார்பத் (கறுப்பு உருவச்சிலை) நேரு புட்லாவிலுள்ள  ஹனுமான் மந்திர் தேவஸ்தான் கமிட்டீ என்ற அமைப்பினாலும் பிவ்லி மார்பத் (மஞ்சள் உருவச்சிலை)  தரானே தேலி சமாஜ் ஜகன்னாத் புத்வாரி என்ற அமைப்பினாலும் உருவாக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்  செல்லப்படுகிறது. இந்த  இரு மார்பத் ஊர்வலங்கள் கிழக்கு நாக்பூரின் முக்கிய இடஙளான கஞ்சாகெட்,  மஸ்காசாத், இட்வாரி, காந்திபுட்லா, மஹல் பல்டாபுரா வழியாக சென்று ஹரிஹர் மந்திர் என்ற இடத்தில்  காலி மார்பத்தும், நாயக் தலாவ் என்ற இடத்தில் பிவ்லி மார்பத்தும் எரிக்கபடுகிறது.



நாக்பூர் மார்பத்.jpg



தகவல்கள் அளித்தவர்:

நீலகண்டன் (செம்பூர் நீலு)
மும்பை



--Geetha Sambasivam 07:47, 21 ஆகஸ்ட் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 21 ஆகஸ்ட் 2012, 07:57 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,948 முறைகள் அணுகப்பட்டது.