நவராத்திரி நாயகியர் 9மரபு விக்கி இருந்து
காத்யாயினி: உலகாளும் அன்னை தன் மகளாய்ப் பிறக்கவேண்டும் எனவேண்டினார் காத்யாயன மாமுனிவர். அவர் எண்ணம் ஈடேற அவர் மகளாய்ப் பூவுலகில் அவதரித்தாள் அன்னை. காத்யாயன மாமுனியின் மகள் என்பதால் காத்யாயினி என வழங்கப் படுகின்றாள். கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் மகிழும்படிய்க் கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள். இவளுக்கான தோத்திரம்
ஐந்தாம் நாள் கோலம் பாவைகள். இன்றைய அலங்காரமாக "காளிகா தேவி"யையோ, அல்லது சுகாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் சும்பாசுரனின் தூதுவன் அனுப்பிய தகவலைச் செவி மடுக்கும் கோலத்தில் அமர்ந்த துர்கையாகவோ அலங்கரிக்கலாம். ஆறு வயதுள்ள பெண் குழந்தையைக் "காளிகா" வாகப் பாவித்து வழிபடுதல் நல்லது. பகை நீங்கவும், இடையறாது தொல்லைகள் கொடுத்துவந்த எதிரிகள் அடங்கவும் இவளை வணங்குதல் நல்லது. இன்றும் சிவந்த நிறமுள்ள மலர்களே. முக்கியமாய்ச் செவ்வரளிப் பூ விசேஷமானது. இன்றைய நிவேதனம் பால் சாதம், குழைய வடித்த சாதத்தில் சுண்டக் காய்ச்சிய பசும்பாலையும் சர்க்கரையையும் சேர்த்து, ஏலம், முந்திரிகளால் அலங்கரித்துக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
இன்றைய சுண்டல் கடலைப்பருப்புச் சுண்டல்.
கடலைப்பருப்பு இரண்டு கிண்ணம் எடுத்துக்கொண்டு களைந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் வைக்காமல் அடி கனமான உருளி அல்லது வாணலியில் தேவையான அளவு நீரை ஊற்றிக் கடலைப்பருப்பைக் குழைய வேக வைக்கவும். உப்புச் சேர்க்கவும். அதிகப்படி நீரை வடித்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை தாளிக்கவும். வெந்த கடலைப்பருப்பைச் சேர்த்துக்கொண்டு ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி அல்லது மிளகாய்ப் பொடி சேர்க்கவும். பொடி வாசனை போக வதக்கிக்கொண்டு அரை ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இறக்கும்போது தேங்காய் துருவலும்,நறுக்கிய பச்சைக் கொத்துமல்லியும் சேர்த்துப் பரிமாறவும்.
துர்காஷ்டகம்: தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
லலிதா நவரத்ன மாலையின் இன்றைய ரத்தினம் மாணிக்கம்
காணக்கிடையா கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
--Geetha Sambasivam 09:07, 29 நவம்பர் 2010 (UTC) |

