நவராத்திரி நாயகியர் 11மரபு விக்கி இருந்து
கூஷ்மாண்டா: வெள்ளிக்கிழமையின் தேவி இவள். கூஷ்மம் என்றால் முட்டை, அண்டம் என்றால் பிரபஞ்சம். பிரபஞ்சத்தை உருவாக்கிய கூஷ்மம் என்னும் முட்டை தோன்றியது இந்தத் தேவியிடம் இருந்தே. பூஷணிக்காயையும் கூஷ்மாண்டம் என்று சொல்லுவார்கள். திருஷ்டியைப் போக்கப் பூஷணிக்காயில் சிவப்புக் குங்குமத்தைத் தடவி நடுரோட்டில் போட்டு எல்லார் காலையும் உடைக்கிறோம். தேவி அப்படிச் செய்யச் சொல்லவில்லை. பூஷணிக்காயே உடைக்கவேண்டாம், அப்படியே உடைச்சாலும் திருஷ்டிப் பூஷணிக்காயை உடைச்சு ஒரு ஓரமாகவே போடலாம். இந்த திருஷ்டிப் பூஷணிக்காய் எப்படி தீவினைகளைப் போக்கிக் கண் திருஷ்டியைப் போக்குகிறதோ, அந்தத் தீவினைகளும், திருஷ்டியும் யாரையும் பாதிக்காமல் செய்கிறதோ அவ்வாறே அம்பிகை தன் பக்தர்களைத் தீவினைகள், தீயசக்திகள் அண்டவிடாமல் பாதுகாக்கின்றாள். சுக்கிரதசை, சுக்கிரதசை என்னும் அதிர்ஷ்டம் அடிக்க இந்தத் தேவியின் தயவு வேண்டும். அசுர குருவான சுக்கிரன் அள்ளித் தருவார் இவளை வணங்கினால். நவராத்திரி வெள்ளிக்கிழமைக்குரிய தேவியான இவள் தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காத்து இனிமையான நல்வாழ்வை அளிப்பாள். இந்த நவராத்திரி அனைவர் உள்ளத்திலும், இல்லத்திலும் மகிழ்ச்சியையும் ஒளியையும் பரப்பட்டும் என அன்னையை வேண்டிக் கொள்கின்றேன். பகலும் இரவும் சந்திக்கும் அற்புத வேளையில் தன் இடக்கால் விரலால் ஈசன் வரைந்த கோலம் ஸப்த ஒலிக்கோலம். அல்லது ஸந்தியா தாண்டவம். இந்த ஸந்தியா தாண்டவத்தில் இருந்து தோன்றியவளே கூஷ்மாண்டா ஆவாள். ஏழாம் நாளான இன்று திட்டாணிக் கோலம் போடவேண்டும். இன்றைய அலங்காரமாக தங்க சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும் சாம்பவியாக அலங்கரிக்கலாம். தாமரை மலரில் வீணை வாசிக்கும் கோலத்தில் அமர்ந்திருப்பாள் இவள். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கு உரியதாகவும், இடையில் மூன்று நாட்கள் மஹாலக்ஷ்மிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியது எனவும் சொல்லுவார்கள். ஆகவே இன்றிலிருந்து வெண்ணிற மலர்களாலேயே அர்ச்சித்தல் நன்று. வெண்தாமரைப் பூ, முல்லை, மல்லிகை போன்ற மலர்கள் ஏற்றவை. எட்டு வயதுள்ள பெண் குழந்தையை சாம்பவியாக வழிபடவேண்டும். இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களும் இவளிடமிருந்தே தோன்றியவை. இவளாலேயே மழை பொழிந்து நீர்வளம், நிலவளம் ஏற்படுகிறது என்பதால் இன்று அம்பிகையை சாகம்பரியாகவும் வழிபடுவார்கள் மிகச் சிலர்.
இன்றைய நிவேதனம் வெண்பொங்கல். நன்கு குழைய வேகவைத்த வெண்பொங்கலைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். வெண்பொங்கலுக்குப் பச்சரிசி இரண்டு கிண்ணம், ஒரு கிண்ணம் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் களைந்து ஒரு கிண்ணம் பால், மீதி அளவுக்கு நீருடன் குழைய வேக வைக்கவும். உப்புச் சேர்க்கவும். வாணலியில் நெய் ஊற்றிக் கொண்டு மிளகு, சீரகம் ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு இஞ்சி, கருகப்பிலை, முந்திரிப்பருப்பு சேர்த்து வறுத்துப் போடவும். இன்றைய சுண்டல் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டல்.
வெள்ளைக் கொண்டைக்கடலையையும் முதல் நாளே ஊற வைத்துக் குழைய வேக வைத்துச் சுண்டல் செய்யவேண்டும். மொச்சைச் சுண்டல் செய்முறையிலேயே செய்யலாம்.
இனி துர்காஷ்டகம்.
ராகுதேவனின் பெரும்பூஜை ஏற்றவள்
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
லலிதா நவரத்னமாலையின் இன்றைய ரத்னம் கோமேதகம்
பூமேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாப் பயனும் குன்றா வரமும் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
--Geetha Sambasivam 09:27, 29 நவம்பர் 2010 (UTC) |


