நட்சத்திரத்தினைச்சாரந்த பழமொழிகள்
1 பரணி தரணியை ஆளுவான்
பொருள்:-பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை
ஆளும் திறமை உடையவராக இருப்பார்கள்
2 மகத்துப்பெண் ஜெகத்தினை ஆளுவாள்
பொருள்:-மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்
ஆளும் திறமையை உடையவராய் இருப்பாள்
3 சித்திரைக்கு அப்பன் தெருவிலே
பொருள்:-சித்திரை நட்சத்திரம் உடைய பிள்ளைகள்
தம் த்ந்தைக்கு சிரமமாக் இருப்பார்கள்
''4 மூலத்தின் மாமியார் மூலையிலே,ஆண் 'மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மலம்
பொருள்:-மூல்ம் நட்சத்திரத்தில் பிற்ந்த்வர்களை
இப்படி குறிப்பிடுவார்கள்,
5அவிட்டம் தவிட்டு பானை எல்லாம் பொன்
பொருள்:- அவிட்டம் நட்சத்திரம் உடையவர்கள்
வீட்டின் தவிட்டு பானை எல்லாம் பொன்னாக
வாய்ப்பு ! அவ்வளவு அதிர்ஷ்டம் என்பார்கள்!
(ஆனால் இந்த முற்போக்கு எண்ணங்கள் உடைய காலகட்டத்தில்
இந்த நட்சத்திர பழமொழிகள் எடுபடுமா!)
சாரதா சுப்பிரமணியன்
தேதி - 09/04.2011.
--