தொன்​மம்,​​ நாடோ​டிப் பாடல்​கள் வடி​விலும் உண்டு!

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கா.மு.​ சிதம்​ப​ரம்



தமிழ்ச் செவ்​வி​யல் நூல்​கள் பல​வற்​றில் இராமன் பற்​றிய குறிப்​பு​கள்
காணப்​ப​டு​வ​தால்,​​ கம்​ப​னுக்கு முன்பே வேறு யாரா​லா​வது இராம​காதை எழு​தப்​பட்​டி​ருக்​கி​றதா இல்​லையா?​


"ஆம்" என்​பதே இவ்​வி​னா​வுக்​கு​ரிய விடை.​


அதற்கு மூன்று கார​ணங்​க​ளைக் கூற​லாம்.​


"வால்​மீ​கி​யின் வாயி​லாக இலக்​கிய வடி​வம் பெறு​வ​தற்கு முன்பே இக்​க​தைத் தொகுதி தொன்ம வடி​வி​லும்,​​ நாடோ​டிப் பாடல்​கள் வடி​வி​லும் இந்​தி​யா​வின்
எல்​லாப் பகு​தி​க​ளி​லும் பரவி இருந்​த​தாக மானு​ட​வி​ய​லா​ல​ரி​டை​யே​யும்,​​ சமூ​க​வி​ய​லா​ல​ரி​டை​யே​யும் ஒரு கருத்து நிலவி வரு​கி​றது ​(இரா​ம​கா​தை​யும் இரா​மா​ய​ணங்​க​ளும் -​ டாக்​டர் அ.அ.மண​வா​ளன் -​ பக்.1).​


"தமி​ழில் அக​வல் வடி​வில் ஒரு இராமா​யண நூல் இருந்​துள்​ளது.​ அவற்​றில் ஐந்து செய்​யுள்​கள் மட்​டும் இப்​போது கிடைக்​கின்​றன.​ இது​த​விர,​​ சமண இராமா​ய​ணம் ஒன்​றும் இருந்​துள்​ளது.​ கம்​ப​ரது இராமா​ய​ணம் தோன்​றிய பிறகு
அவை​யெல்​லாம் புகழ் மங்கி மறைந்​தன என்று "புதிய நோக்​கில் தமிழ் இலக்​கிய வர​லாறு" என்​கிற நூலில் டாக்​டர் தமி​ழண்​ணல் பதிவு செய்​துள்​ளார்.​


உ​ல​கி​லேயே பாலி மொழி​யில் "தச​ரத ஜாத​கம்" என்ற இரா​ம​கா​தை​
முதன்​முத​லில் தோன்​றி​யது.​


பின்​னர் வால்​மீகி சம்ஸ்​கி​ருத மொழி​யில் இயற்​றி​னார்.​


அதன் பின்​னர் பிராக்​கி​ரு​தம்,​​ திபெத்​திய மொழி ஆகி​ய​வற்​றில் இராமா​ய​ணம் இயற்​றப்​பட்​டது.​


இவற்​றுக்​குப் பின்​னர்​தான் தமி​ழில் இராமா​ய​ணம் இயற்​றப்​பட்​டது.​


இராமா​ய​ணம் இந்​திய மொழி​க​ளில் மட்​டு​மன்றி,​​ தாய்​லாந்து,​​ மலே​சியா,​​ இலாவோஸ்,​​ பிலிப்​பின்ஸ்,​​ ஜப்​பான்,​​ பர்​மி​யம்,​​ பார​சீ​கம் ஆகிய மொழி​க​ளி​லும் இயற்​றப்​பட்​டுள்​ளது.​


தி​பெத்,​​ இந்​தோ​னே​ஷியா,​​ ஜப்​பான் ஆகிய மொழி​க​ளில் இயற்​றப்​பட்ட
இராமா​ய​ணங்​கள் கம்​ப​ரா​மா​ய​ணத்​துக்​குப் பிற்​பட்​டவை அல்ல.​ எனவே,​​
கம்​ப​ரா​மா​ய​ணத்​துக்கு முன்பே ஒரு இராமா​ய​ணம் தமி​ழில் உறு​தி​யாக
இருந்​தி​ருக்க வேண்​டும்.​


த​மிழ் இலக்​கிய வளர்ச்​சியை உற்​று​நோக்​கி​னால் ஓர் உண்மை புலப்​ப​டும்.​


முத​லில் தமிழ்ப் புல​வர்​கள் தங்​கள் கருத்​து​களை அக​வற்​பா​வில் வெளி​யிட்​ட​னர்.​


பின்​னர் வெண்பா வாயி​லாக உரைத்​த​னர்.​


அடுத்த கால​கட்​டங்​க​ளில்


விருத்​தப்பா
துறை​தா​ழிசை
கண்ணி
சிந்து
கீர்த்​தனை
வில்​லுப்​பாட்டு
புதுக்​க​விதை
ஹைக்கூ
என்று மன்​னர்​கள்,​​ மக்​கள்,​​ செல்​வந்​தர்​கள் ஆகி​யோ​ரது இரச​னைக்கு ஏற்​ப​வும்,​​ படைப்​பா​ளி​க​ளுக்கு யாப்​பி​லக்​க​ணத்​தின் மீதி​ருந்த அச்​சத்​திற்கு ஏற்​ப​வும் கருத்தை வெளி​யி​டும் வடி​வங்​கள் மாறி​வந்​துள்​ளனஎ​டுத்​து​காட்​டாக
மகா​பா​ர​தக் கதை அக​வற்பா,​​ வெண்பா,​​ விருத்​தம்,​​ புதுக்​க​விதை ஆகிய
வடி​வங்​க​ளில் இயற்​றப்​பட்​டுள்​ளது.​


அதே போன்று இராமா​ய​ணக்​க​தை​யும் எல்லா வடி​வங்​க​ளி​லும்
இயற்​றப்​பட்​டி​ருக்க வேண்​டும்.​ வெண்​பா​வில் இயற்​றப்​பட்ட இராமா​ய​ணம்
மட்​டும் கிடைக்​க​வில்லை.​ அத​னால் அப்​படி ஒரு நூலே இல்லை என்ற
முடி​வுக்கு வரு​வது சரி​யல்ல.​


யாப்பு வடி​வங்​க​ளில் அக​வற்​பா​வும்,​​ வெண்​பா​வும் சங்க காலத்​துக்கு
முற்​பட்​டவை.​ டாக்​டர் தமி​ழண்​ணல் குறிப்​பி​டும்,​​ தற்​போது ஐந்து பாடல்​களே எஞ்​சி​யி​ருக்​கும்,​​ அக​வற்​பா​வா​லான இராமா​ய​ணம்,​​ ஒருக்​கால் சங்க காலத்​துக்கு முற்​பட்​ட​தாக இருக்க வேண்​டும்.​


வெண்பா யாப்​பில் ஆக்​கப்​பட்ட இராமா​ய​ணம் தமி​ழில் இருந்​தது என்​ப​தற்​கான ஆதா​ரங்​கள் உள்​ளன.​


சென்னை கம்​பன் கழ​கம் வெளி​யிட்​டுள்ள இராமா​ய​ணம் நூலில்,​​
மிகைப்​பா​டல்​கள் என்று ஆயி​ரத்து இரு​நூற்​றுத் தொண்​ணூறு பாடல்​கள்
குறிப்​பி​டப்​பட்​டுள்​ளன.​ அவற்​றுள் மூன்று பாடல்​கள் மட்​டுமே
வெண்​பா​வால் இயற்​றப்​பட்​டுள்​ளன.​


அவற்​றுள் ஒரு பாடல்,​​

"கலங்கா மதி​யும் கதி​ரோன் புர​விப்
பொலன்கா மணித்​தே​ரும் போகா இலங்கா
புரத்​தானை வானோர் புரத்​து​ஏற விட்ட
சரத்​தானை நெஞ்சே தரி

என்​ப​தா​கும்.​


இது ஒரு காப்​புச் செய்​யுள்.​


காப்​புச் செய்​யுள் நூலா​சி​ரி​ய​ரால் மட்​டுமே இயற்​றப்​பட வேண்​டும்;​ ஒரு நூலைத் தொடங்​கும் முன் முதல் பாட​லாக அமை​ய​வேண்​டும் என்​பது மரபு.​ இப்​பா​டல் வெண்​பாக்​க​ளால் இயற்​றப்​பட்ட இராமா​ய​ணத்​தின் காப்​புச் செய்​யு​ளாக இருக்க வேண்​டும்.​


அது எவ்​வாறோ கம்​ப​ரா​மா​ய​ணச் சுவ​டி​யு​டன் கலந்து,​​ வெண்​பா​வா​லான
இராமா​ய​ணம் மறைந்​தும்,​​ தான் மறை​யா​மல் இருக்​கி​றது.​


வெண்​பா​வா​லான இந்​தக் காப்​புச் செய்​யுள் சங்க காலத்​தைச் சேர்ந்​தது.​ சங்க காலத்​தில் காப்​புச் செய்​யுளை வெண்​பா​வால் இயற்​று​வ​து​தான் மர​பாக இருந்​தது.​ இளங்​கோ​வ​டி​க​ளும் அக்​கால மரபை மீறாது வாழ்த்​துப் பாடலை
வெண்​பாக்​க​ளால் இயற்​றி​யுள்​ளது குறிப்​பி​டத்​தக்​கது.​


இ​து​கா​றும் கூறி​ய​வற்​றால்,​​ கம்​ப​னுக்கு முன்பே இராமா​ய​ணக் கருத்​து​கள் தொன்ம வடி​வி​லும்,​​ நாடோ​டிப் பாடல்​கள் வடி​வி​லும் தமிழ் நாட்​டில் வழங்கி ​ வந்​தி​ருக்​கின்​றன.​ அக​வற்​பா​வால் இயற்​றப்​பட்ட இராமா​ய​ணம் ஒன்று இருந்​தது.​ வெண்​பா​வா​லான இராமா​ய​ணம் ஒன்​றும் இருந்​தி​ருக்க வேண்​டும்.​ இவற்​றுள் ஏதே​னும் ஒன்​றின் வாயி​லாக அல்​லது அனைத்​தின் வாயி​லா​கத்​தான்,​​ தாம் அறிந்த செய்​தி​க​ளைச் சங்​கப்​பு​ல​வர்​கள் தமது பாடல்​க​ளில்
குறிப்​பிட்​டி​ருக்​கி​றார்​கள் என்​பது தெளிவு.​

--Ksubashini 11:45, 9 ஜூலை 2010 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 9 ஜூலை 2010, 11:45 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,741 முறைகள் அணுகப்பட்டது.