தாகூர் உ.வே.சா மீது எழுதிய வங்காளிக் கவிதை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
வங்காளி மூலம்

ஆதிஜூகேர்  ஆந்தாரே  தாலபத்ரே  ச்சிலோ 
த்ராவிட  தேசேர்  புராதன  கீர்த்தி, 
ஸேஇ  மஹத்நிதி,  ஹே  தேசிகோத்தம 
தோமார்  த்வாரா நா  கி  பாஹிர்ஹயில்? 
ஸே   காலேர்  அகஸ்த்யேர்  மதஏஸே  தோமார்மாகே
ஸிம்ஹாஸனே  ரேகே  திலே  நாகிதுமிஸ  ஸம்மானே?

ஆர்  பாஞ்ச  மஹா  காவ்யேர்  மாஜ்ஜே 
சிந்தாமணி,  நூபுரகாதா,  மணிமேகலா  இத்யாதி 
ஸம்சோதன  கரே  தாஹார்  பத   ஜூகலே 
ஸமர்ப்பணகரிலே  நா  கிதுமி? 
ஸங்கே  ஸங்கே  ஸங்ககால  ஸாஹித்யகே 
ஜ்யோத்ஸ்னாய்  ஃபுடித  நித்ய  மல்லிகார்மத 
சோபித  கரிலே  நாகிதுமி?  தேமாகரிப்ரணாம்


தமிழாக்கம்

"ஆதி(முந்தைய) யுகத்து இருளில் பனையோலைச் சுவடிகளில் இருந்தது திராவிட நாட்டின் புராதன (பழைய) கீர்த்தி - அந்தப் பெருநிதி, பேராசானே உன்னால் அன்றோ வெளிப்பட்டது? அந்தக் காலத்து அகஸ்தியனைப் போல நீயன்றோ வந்து  உன் அன்னையினைச் சிம்மாசனத்தில் பெரு மதிப்புடன் வீற்றிருக்க வைத்தாய்? அம்மட்டோ ஐம்பெருங் காப்பியங்களுள் சிந்தாமணி, சிலப்பதிகாரம் மணிமேகலை முதலானவற்றை (ஆய்ந்து பதிப்பித்து) அந்த அன்னையின் இணையடியில் சமர்ப்பித்தவன் நீ அன்றோ? அவற்றுடன் சங்க இலக்கியத்தையும் நிலவில் மலர்ந்த

முல்லை என ஒளிர வைத்தவனும் நீஅன்றோ? உன்னை வணங்கு கிறேன்." 
த.நா.சேனாபதி 
(மஞ்சரி முன்னாள் ஆசிரியர்) 


சுப்பிரமணிய பாரதியார் ரவீந்திர நாத் தாகூர் ஆகிய இரு மகாகவிகளும் ஐயரவர்கள் அகத்திய முனிவருக்கு ஒப்பானவர் என்று பாராட்டியது குறிப்பிடத் தக்கது.

பங்களிப்பாளர்கள்

Themozhi

இப்பக்கம் கடைசியாக 18 பெப்ரவரி 2016, 04:40 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,268 முறைகள் அணுகப்பட்டது.