திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 16
தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட-6
முனைவர் கி.லோகநாதன் 2012
31.0
சைவத்தில் தெய்வ புராணங்கள்
தலபுராணங்கள் அல்லது கோயிற் புராணங்கள் போன்றவற்றிற்கு அடுத்தபடியாக தெய்வ புராணங்களே விளங்குகின்றன. இவையும் பேரளவில் இருப்பதால் இங்கு குறிப்பாக ஒரு சிலக் கூறுகளையே எடுத்துரைப்போம். முதலில் நாம் கருத வேண்டியது திருமாலியத்திற்குப் புறம்பாக, சைவத்தில் அவதாரக் கொள்கை இல்லை எனவே தெய்வங்களைப் பற்றியக் கருத்தும் வேறுபடுகின்றது. பிறப்பிலியும் இறப்பிலியுமாகிய இறைவன, வாக்கு மனாதீதக் கோசரமாய் நின்றவாரே மந்திரங்களை முடுக்கி தன்னையேத் தான் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி காட்டியருளி ஆன்மாக்களையும் பிற அனைத்தையும் ஆட்கொண்டு பல திருவிளையாடல்களை நடத்துகின்றான் என்றும் இத்தகைய திருவிளையாடல்களே சிவஞானிகளின் ஆழ்கனவுகளில் ஞானக் காட்சிகளில் வெளிப்பட, அவையே புராணங்களாகப் பாடப்படுகின்றன என்றும் கொளப்படுகின்றது. இதனால் தெய்வ புராணங்கள் அனைத்தும் திருவிளையாடல் புராணங்களாகவேத் திகழ்கின்றன.
31.1
கந்த புராணத்தின் தனிச் சிறப்பு
வைணவர்கட்கு எப்படி இராமாதாரமோ அதுபோலவே சைவர்கட்கு கந்தபுராணமாகும். இது வடமொழி ஸ்கந்த புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒர் புராணம் என்று பரவலாக கூறப்பட்டு வருகின்றது எனினும், அதன் மூலங்கள் சுமேருத் தமிழிற்கே செல்கின்றது என்பதுதான் உண்மை. அங்கு ஏண்மெருகர் என்ற ஓர் தெய்வம் தொடர்பான பல புராணக் கதைகள் உண்டு, மேலும் ‘முரு’ என்று சொல் தூய ஒளி என்ற கருத்தில் அங்கு பயில்கின்றது. காண்க:
Temple Hymn 10
2(136)
eden muru sa-ta me su-ti ( plain (with) heavy clouds, taking the me’s from its midst)
Ta. eetil muru saaytta mey cooti ( Plain that is brilliant and in the interior of which burns the true Radiance)
ஏதில் முரு சாய்த்த மெய் சோதி ( ஒளி மிக்க பெருவெளி நடுவில் முரு (எனும்) மெய் சோதி)
ஆக ‘முரு’ பரவெளியில் தோன்றும் மெய் சோதி யாகும் இதுவே பலவாறு வளர்ந்து வளர்ந்து கதை வடிவம் பெற்று கந்தபுராணம் உற்பத்தி காண்டத்தின் பொருளாக வந்துள்ளது என்று தெரிகின்றது. 12 ஆம் நூற்றாண்டு காஞ்சி கச்சியப்ப சிவாசாரியாரின் கந்தபுராணம், உற்பத்தி காண்டத்தில் சிவபெருமான் பார்வதி தேவியை மணக்க, காம வேட்கையொடு அவளை நோக்க அதுபொழுது நெற்றிக் கண்ணிலிருந்து அளப்பரும் கனலின் ஒளியின் பிழம்பே ஆறுமுகக் கந்தவேளாக சரவணப் பொய்கையில் குளிர்ந்து அம்மையின் அணைப்பில் ஆறுமுகங்கோடு கூடிய திருமகனாக எழுந்தான் என்பது கதை. இந்த அளப்பரியு வீரியத்து ஞானவொளியே திருமுகனின் வேலாகவும் தோன்றுகிறது. அசுரர்களை வீழ்த்துவது என்றெல்லாம் வருவது, அஞ்ஞான இருளைப் போக்குவது என்றுமாகும்.
31.2
தேவராத்தில் தெய்வ புராணங்கள்
திருமுறைகளிலும் அவற்றைச் சார்ந்து எழுந்துள்ள ஏனைய சைவ இலக்கியங்களிலும் மிகப் பரவலாக தெய்வப் புராணக்கள் போற்றபப்டுகின்றன. சிவனடியார்கள் இப்புராணக்கதைகளில் பல ஆழமான ஞானக் கருக்களைக் கண்டு அவற்றைப் போற்றி மகிழ்ந்துள்ளனர். இவ்வாறே மூவர் முதலிகள் காரைக்ககல் பேயார் போன்றோரும் மகிழ்ந்துள்ளதை இங்கு சிறிது காண்போம். சிவனது திருவிளையாடல்களை, அவன் பல அற்புதங்களைச் செய்வதாகக் கூறும் புராணங்களை ஆழ உன்னி ஆங்கு இறைவனே வெளிப்படுத்தும் உண்மைகளை உணர்வது திருநெறியே ஆவது என்று கருத்துதலும் உண்டு, இங்கு காட்டாக சில புராணங்களை இவர்கள் கண்டவாறு தருகின்றோம்.
அப்பர்
திருமுறை பொது 4: 14:
1.
பருவரை ஒன்று சுற்றி அரவங் கைவிட்ட
இமையோர் இரிந்து பயமாய்த்
திருநெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு
சுடுவான் எழுந்து விசைபோய்ப்
பெருகிட மற்று இதற்கொர் பிதிகாரம் ஒன்றை
அருளாய்ப் பிரானே எனலும்
அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட
அவன் அண்டரண்டர் அரசே
உரை:
மெய்ஞானத்தின் ஓர் வடிவாகிய மேருமலையை மத்தாகக் கொண்டு, வாசுகி எனும் குண்டலினிப் பாம்பையே நாணாகக் கொண்டு, பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைய முடிவில் ஆலகால விசமே வெளிவர அதனைக் கண்டு அஞ்சி தேவாதி தேவர்கல்ள் அனைவரும் அபயம் என்று நீலமேனி திருமாலை அடைந்தனர். திதியின் தெய்வமாகிய திருமாலால் அதனைக் கட்டுப்படுத்துவது முடியாது போக சிவபெருமானை அடுத்து வேண்ட , பெருமானும் அந்த கரிய வண்ணத்தைக் கிழித்துக்கொண்டு திருமால் உள்ளிருந்து வெளிப்பட்டு செவ்வான் வடிவில் அனைத்தையும் சுட்டு எரித்து இல்லாது போக்கும் நெருப்பு வடிவில் விண்ணெல்லாம் நிரைந்து நிற்க, தேவர்களும் தாம் செய்த பிழைக்கு பிதிகாரமாகிய கழுவாய் மிக வேண்ட, இறைவன் அருள் மேலீட்டால யாவராலும் கட்டுப்படுத்த முடியாத அந்த நஞ்சை அஞ்சாது தானுண்டு தன் தொண்டையில் இருத்தி தான் அதனால் எரியாது இருப்பதைக் காட்டினன். அதனால் இந்த ஆலகால அழிப்புத் திறன் வல்ல எரியுருவின் சிவபெருமானே அண்டரண்டர் அனைவருக்கும் தலைவன் எனக் காட்டியருளினான் என்றவாறு.
1.
paruvarai onRu cuRRi aravang kaividda
imaiyoor irintu payamaakak
tirumaal niRattai aduvaan vicumbu
cuduvaan ezuntu vicai pooyp
perukida maRRu itaRkoor pitikaaram onRai
aruLaay piranee enalum
aruLkodu maavidattai eriyaamal uNda
avan aNdaraNdar aracee
When the Devas and Asuras churned the ocean of milk using the hill of metaphysical illuminations as the rod and Vasuki the KundalinI snake as the rope , the devas fled in great fear on seeing the emergence of the most potent Poison and sought refuge with Tirumaal, the Black One. But He was unable to contain it but at that point from within him emerged BEING as the all consuming FIRE and spread the whole vast sky filling it full. And when the devas sought repentance for their misdeeds, out of GRACE, that becomes of BEING, He swallowed it but keeping it all at His throat escaped being burnt by it. Thereby HE also showed that CIVA who is capable of the Form of FIRE that can destroy everything is the Supreme Lord of the whole Cosmos that contains within itself all the universes.
Commentary:
There are many Hermeneutic Semiotic principles at work here and we have to attend to them to get at the meanings . The devas and asuras are actually people but moved by the good and evil forces within the mind. The HILL stands for metaphysical illuminations , the axiomatic TRUTHS to attain which all human beings strive so hard, perhaps unconsciously . No body wants to live by untruths. This is the Primordial Intention for which they CHURN the Ocean of Milk which stands for the World of Knowledge. The Snake stands for the kundaliNi sakthi, the Power or Energy they expend in such efforts. While their intentions may be all right but unknown to themselves they also unwittingly bring out into the open the Intense Poison , the Poison of Hatred that presses human beings to seek knowledge that would destroy those whom they hate and despise. They may invent weapons of war immensely destructive, fan the fire of hatred through propagamda that leads to terrorism wars of all kinds and battles and civil disturbances in which people are killed mercilessly properties are destroyed.
Once unleashed the poison of Intense Hatred becomes something UNCONTROLLABLE as the whole situation becomes intensely irrational and hence beyond dialogic confrontations and settlements. Tirumaal, the Black One, BEING as the ONE who keeps the world in peace and happiness becomes powerless in the face of this irrational madness in which only uncontrollable hatred that become intense sway the moods and issue forth in immensely destructive wars and terrorism of all kinds.
Thus BEING as the Black One departs and shows Himself as the consuming FIRE, the most Powerful Destructive Form of Rudra, destroying in that process the peace establishing and maintaining the Black or Blue Form. There is NOTHING that BEING as Rudra cannot contain or control but becoming merciful towards the devas who beseech Him, He swallows the poison of hatred but retains it in His throat so that He is NOT infected by it and continues to be the LOVING ONE, He who continuously engraces the world with HIS boundless kindness. There cannot the irrational hatred as the elememt of BEING.
Thus this Mythology informs us about historical processes where human folly which allows the irrational hatred to condition their existence -- the ideologies religious fanaticism inhuman aristocracies racialism and so forth -- are met with and controlled by BEING. In the face of such a poison of intense hatred , BEING does NOT remain the Peace maintaining Tirumaal, the Black One but becomes the FIRE that consumes all which is a metaphorical allusion to intense warfare in which countless number of people are killed but which at the same time has the effect of making people rational and peace loving again. Such wars , no matter how destructive they are, is the only solution for overcoming the poison of hatred that has become uncontrollable and beyond any rational approach to contain it and divert or transform it.
அப்பர் பதிகம் 4:77
1.(746)
கடும்பகல் நட்டமாடிக் கையிலோர் கபாலமேந்தி
இடும்பலிக்கு இல் வந்தேறும் உழிதரும் இறைவனீரே
நெடும்பொறை மலையர் பாவை நேரிழை நெறிமென்கூந்தற்
கொடுங்குழை புகுந்தவன்றும் கோவணம் அரையதோ
உரை:
இரவு நேரம் மாத்திரம் என்றில்லாது ஆதவன் உதித்து கனல் பரப்பும் கடும்பகல் வேளையிலும் அயர்விலாது நடனமாடிக் கொண்டே கையில் பிச்சாப் பாத்திரமாக கபாலத்தையே எந்தி, தவறாது எல்லா இல்லங்களும் சென்று பலிக்கு கையேந்தி அவர்கள் கொடுப்பதை ஏற்று அதன்வழி அவர்கட்கு பக்குவ முதிர்ச்சி தரும் இறைவனீரே, கோவணம் உடுத்தி பிச்சாண்டியாகத் திரியும் எம் பெருமானே! நெடிய பொறுமையே தனது குணமாகக் கொண்டிருக்கும் இமாசல மன்னனின் திருமகளாகிய பார்வதியை, நேரிழைகள் பலவணிந்து, நெறிபடுத்தப்பட்ட மெல்லிய காமக் கிளர்ச்சியைத் தரும் மென்கூந்தல் படர நல்ல வட்ட குழைகளைக் காதில் அணிந்த அவளைத் தழுவ அவள் இல்லம் புகுந்த அன்றும், இந்த கோவணம் தான் அரையில் அணிவீரோ? மாட்டீர் என்பதாம்.
திருஞானசம்பந்தர் 3:25
1.
மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்து தேவன் குடித் தேவர் தேவெய்திய
அருந் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே
உரை:
ஆழமான தத்துவ உண்மைகள் நலமே தெரிந்து மகிழ முயலும் அருந்தவத்தோர், அதன் பொருட்டு தேவர் தேவனாகிய இறைவன், திருந்து தேவன் குடி திருக்கோயிலிற் போன்று எடுக்கும் பல்வேறு வடிவங்களையே தொழுதும் ஆழச் சிந்தித்தும் நிற்பர். ஏனெனில் இவ்வாறான தவத்தில் வெளிப்படும் ஞானத்தெளிவுகளே உடல் நோய் உளநோய் போன்றவற்றைக் கடியும் மருந்தாகும். மேலும் சிவஞானத் தெளிவிற்கு இட்டுச் செல்லும் மந்திரங்களும் ஆகும். இந்த ஞானத்தெளிவுகள் அகத்தே உண்மை அன்பினை வளர்ப்பதால், ஞானவான்கள் இன்னும் இன்னும் வேட்டு புரிந்துகொள்ள கேட்கப்படும் புண்ணிய வினைகளும் ஆகின்றன.
சுந்தரர் பதிகம் 7:4
2.
பிடித்தாட்டி ஓர் நாகத்தைப் பூண்டதென்னே
பிறங்குஞ் சடைமேல் பிறை சூடிற்றென்னே
பொடித்தான் கொண்டு மெய்ம்முற்றும் பூசிற்றென்னே
புகர் ஏறுகந்தேறல் புரிந்ததென்னே
மடிதோட்டந் துவல் திரை யெற்றியிட
வளர் சங்கம் அங்காத்து முத்தஞ் சொரிய
அடித்தார் கடலங்கரை மேல் மகோதை
அணியார் பொழில் அஞ்சைக் களத்து அப்பனே
உரை:
வலிய அலைகள் சுருண்டு ஓடிவந்து அடியிலும் சென்று தோண்டுமா திரைகள் மோதி அலைத்திட, அதனால் சங்குகள் அங்காத்து முத்துக்களை சொரிகின்றன. இப்படி அலைகள் வந்து பொருந்தி அலைக்கும் கடலங்கரை மேல் மகோதை என்னும் நகரில் விளங்கும் அழகுமிக்க பொழில் சூழ்ந்த அஞ்சைக்களம் என்னும் கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அப்பனே! உனது திருவேடங்களைப் பற்றி சில விண்ணப்பங்கள். பிடித்து ஆட்டி ஓர் பாம்பினை கழுத்தில் பொன்னரவமாக பூண்டது ஏன்? முழுமதியை அல்லாது உமது ஒளிமிக்க சடைமேல் பிறைமதியை சூடியுள்ளது ஏன்? சாம்பற் பொடிகொண்டு உனது உடல் எங்கும் பூசி நிற்பது ஏன்? மேலும் புகர் எருதினையே வாகனமாகக் கொண்டு ஏறி மகிழ்தலை ஏன் செய்கின்றாய்? இவ்வேடங்களால் நீ உணர்த்த விரும்பும் ஆழுண்மைகள் தாம் என்ன?
காரைக்கால் பேயாரின் மூத்தத் திருப்பதிகம்
1.
கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பல் குழிவயிற்றுப்
பங்கி சிவந்து இரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக்கால் ஒர் பெண்பேய்
தங்கி அலறி உலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தனல் ஆடும் எங்கள் அப்பன் இடம் திரு ஆலங்காடே
அ-உ (திரு வி. க)
திரங்கி - சுருண்டு, சுருங்கி. குண்டு - உருண்டை; குழி எனினுமாம் . பங்கி - மயிர். பரடு - கால்கணு. கணைக்கால் -- முழங்காலின் கீழது, பரட்டுக்கு மேலது, திரண்டிருப்பது. உலறு -- கோபக் குறிப்புடன் கூவும் ( உலறல் - சினக் குறிப்புத் தோன்ற ஒலித்தல்)
உரை ( கி. லோகநாதன்)
அனைத்தையும் அழிக்கும் திருநோக்கின் சங்காரத் தாண்டவமாடும் எங்கள் அப்பனது இடம் யாதெனில், முலைகள் சுருங்கி திரங்கியவாறும், நரம்புகள் புடைத்தெழுந்து அழகினைக் கெடுத்தவாறும்,. குழி விழுந்த கண்களோடும், கூரிய வெண்பற்களோடும், ஆழ்ந்து அடங்கிய குழி வயிற்றோடும் , தலைமுடி கட்டவிழ்ந்து கிடந்தவாறும், பற்களில் கீறிபற்கள் இரண்டும் விலங்கினது போல நீண்டவாறும், கணைகால் தசையினை இழந்து நீண்டு கிடந்தவாறும் ஓர் பெண் பேய் தங்கி அலறியும் உலறியும் அச்சமூட்டி திரிகின்ற ஆலங்காடு ஆகும். அக்காட்டில் அழிக்க வேண்டிய அனைத்தையும் அழிக்கும் திருநோக்குடன் என் அப்பன் விரிந்த சடை எல்லா திக்குகளிலும் சென்றாட , அருள் நோக்கின் அங்கங் குளிர நெருப்பினை வீசி அயராது ஆடுகின்றான்! என்னே அவன் திருவருள்!
31.3
மேலே காட்டப்பட்ட பாடல்கள் இந்த நாயன்மார்கள் எவ்வாறு சிவபெருமானை பல்வேறு வடிவங்களில் அல்லது வேடங்களில், அவற்றைக் கொண்டு ஆடிய பல திருவிளையாடல்களை ஆழச் சிந்தித்து பொருள் கண்டு ஞானத் தெளிவுகள் பெற்று உய்ந்தார்கள் என்பதை நலமே விளக்குகின்றன. இந்த துறையைத் தான் Hermeneutic Semiotics என்று அழைதுள்ளேன். ஆழமான ஞானக் கனவுகளை பெயர்த்து பொருள் அறிவதுபோன்ற ஓர் அறிவியல் துறையாகும் இது. இதனைப் பற்றி எல்லாம் வரப்போகும் படலங்களில் தீர விசாரிக்க இருக்கின்றோம்.
32,0
மணிவாசகரின் சிவபுராணம்
எட்டாம் திருமுறையாகிய திருவாசகமும் திருகோவையாரும் தமிழச் சமயச் சிந்தனைக்கே பேரொளியாகச் சுடரும் பண்பினது, இவற்றைப் போற்றிப் பாடாத சைவப்பெரியார்கள் யாரும் இல்லை. நெஞ்சைக் கரைய வைத்து அருளே இல்லாத கயவனையும் அருளுடையோனாக மாற்றும் திறத்தது. அதில் முதல் அகவலாகவும் முதல் பாடலாகவும் அமைவது ‘சிவபுராணம்’ என்னும் அகவலாகும். பிற ‘கீர்த்தி அகவல்” போன்ற அகவல்கள சிவபெருமானது திருவிளையாடல்களை வெகுவாக விரித்து பாடியிருக்க, அவை ‘புராணம்” என்று கூறப்படாதிருக்க, சிவபெருமானது தற்சிறப்புப் பண்புகளை, இயல்புகளை சிவஞானத்தை பலவாறு பாடும் இப்பாடல் ஏன் ‘சிவபுராணம்’ என்று படுகின்றது என்பது ஆய்வுக்குறிய ஒன்றாகும். பொதுவாக சிவபெருமான எவ்வாறு தன்னை வெளிப்படுத்தி தனது இயல்புகளை அடியார்கள் அறியுமாறு செய்கின்றான் என்பதே இந்த அகவலின் உட்கிடக்கை என்று தெரிகின்றது.
32.1
இதில் மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகவும் பிற நூற்களில் அதிகம் பாடப்படாத ஒன்றாகவும் விளங்குவது சைவத்தின் கூர்தல் அறமே யாகும் கீழ் வரும் வரிகள் அதனை உணர்த்துகின்றன.
26
புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணன்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
30
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள கண்டின்று வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள
ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே!
இங்கு தன்நிலையில் தனக்கு நேர்வதாக மணிவாசகர், ஐரோப்பியர்கள் கூறும் கூர்தல் அறம் போன்ற ஒன்றை ஆனால் சற்று வேறுபட்ட முறையில் கூறிச் செல்வதைக் காண்க. இது தொல்காப்பியம் மரபியலில் வரும் ஓர் சூத்திரத்தோடு ஒப்பிட்டு காண வருவதுமாகும்.
1526
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே ஆற்ரொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்ரொடு செவியே
ஆறறி வதுவே அவற்ரொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
இங்கு ஒரே ஓர் உயிர் இவ்வாறெல்லாம் ஒன்றறிவுயிராக பின் இரண்டறிவுயிராக எல்லாம் கூருகின்றது என்ற கருத்து தெளிவாக இல்லை, ஒரே காலத்தில் உயிர்கள் இவ்வாறெல்லாம் ஐம்புலன்களால் பிறகு மனத்தால் அறிந்து கொண்டு வாழ்கின்றன என்றுதான் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் மணிவாசகரின் சிவபுராணத்தில், தன் மேல் ஏற்றி ஒரே ஓர் ஆன்மா இவ்வாறெல்லாம் பிறப்பெடுத்து கூர்ந்து கூர்ந்து முடிவில் இறைவனது திருவடியை அணைந்து வீடுபேறு உற்று பிறப்பினையே அறுத்து மீண்டும் பிறவாமை மகிழ்கின்றது என்றும் எல்லாம் இறைவனது அருளாலேயே நடக்கின்றதென்றும் மிகத் தெளிவாக விளக்கப்படுகின்றது.
32.2
சைவத்தின் கூர்தல் அறம் சிவபுராணமாகவே, சிவபெருமானது திருவிளையாடல்களாகவே மணிவாசகர் மற்றும் திருமூலர் அருட்பிரகாச வள்ளலார் போன்ற இன்னும் பல சிவஞானிகளும் கொண்டுள்ளனர். இது ஐரொப்பியர் கூறும் கூர்தல் அறத்தோடு ஒருபுடை ஒத்துவருவதெனினும், அடிப்படையில் வேறாகும். ஐரோப்பியர்களிடையே மீண்டும் பிறவாமை எனும் வீடுபேறு கொள்கை இல்லை, இறைவனே காந்தம் இரும்பை வலிப்பது போல, ஆன்மாக்களை அகத்தே ஒங்காரமாய் நின்று ஈர்த்து தன்பால் வலிக்கவே தான் ஆன்மாக்கள் கூருகின்றன, அறிவுத் திறன்களில் குணத்தில் ஞானத் தெளிவில் இறையுணர்வில் கூர்ந்து கூர்ந்து மேம்பட்டு முடிவில் இறைவனது திருவடிகளை அனைந்து வீடுபேறு இறையருளால் உற்று மீண்டும் பிறவா பெருந்நிலை தலைப்படுகின்றன என்று விளக்கப்டுகின்றது. இதனாலேயே இது சிவபுராணமாக, சிவன் தன்னையேத் தான் வெளிப்படுத்தி அருளும் ஒர் செயலாக மணிவாகசரால் கருதப் பட்டதாக தெரிகின்றது.
தொடரும்
திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 17
33.0
சைவத்தில் திருத்தொண்டர் புராணம்
சேக்கிழார் பெருமானின் பெரும்புரட்சியாகிய ‘திருத்தொண்டர் புராணம்’ எனும் பெரியப் புராணத்தைக் கொண்டிருக்கின்ற சிறப்பாலும் அதுபோன்ற ஒன்று வைணத்தில் சமணத்தில் மற்றும் புத்தத்தில் இல்லாமையாலும், சுமேரு காலத்திலிருந்து வரும் திருத்தொண்டர் மரபை, இடையே மறந்தாலும், பிறகு அதனை மீட்டிய பெருமை சைவத்திற்கே உண்டு போலும். பேரசர்களையும் ஆழ்வார்கள் போன்ற ஞானிகளையும் பாடுவதோடு, சாதாரண குடிமக்களையும் அவர்கள் தம் சிவத்தொண்டு கருதி திருத்தொண்டர்களாக பாடிய ஓர் சிறப்பு சாதி வெறி தலைத்தூக்கி நின்ற காலத்தில் எழுந்தது அதுவும் சோழ வேந்தனின் நல்லாதரவோடு, இறைவனது அருட்செயலே தான். இந்த புரட்சிக்கு அடிகோலிய சுந்தரர் தான் பெரிய புராணத்தின் காவிய நாயகன். இவர் பாடிய ‘திருத்தொண்டர்த்தொகை’ நம்பி ஆண்டார் நம்பியின் ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ போன்ற பாடல்களே சேக்க்கிழழருக்கு மூலங்களாகின.
33.1
சைவ சமயத்தில் சாதி பேதங்கள் போற்றபடாது என்பதையும் அதற்கு காரணம் இறைவன் எல்லார் அகத்திலும் இருக்கின்றான், வீடு பேறு ஈட்டித் தரக்கூடிய சிவஞானம் எல்லார் அகத்திலும் அன்றே இருக்கின்றது தக்க உத்திகள் வழி அது ஒவ்வோர் அகத்தும் சுடர்ந்தெரியச் செய்ய முடியும் ஆகவே இவ்வகையில் அனைவரும் ஒன்றே என்ற கோட்பாடு தமிழர்களின் சைவ சமயத்தில் உண்டு. தமிழர்களின் திருமாலியத்தில் பரபத்தியின் காரணமாக சாதிபேதங்கள் கண்டிக்கப்பட, சைவத்திலோ சிவஞானத்தின் அடிப்படையில் சாதி பேதங்களும் வேதத்தின் வர்ணாச்சிரம கோட்பாடும் வன்மையாகக் கண்டிக்கபடுகின்றன. ‘ ஒன்றே குலமும் ஒருவனேத் தேவனும்’ என்ற திருமூலரின் முழக்கமும் அப்பர் பெருமானின் ‘ கோத்திரமுங் குலமுங் கொண்டு என் செய்வீர்” என்ற கண்டனமும் இதையே வற்புறுத்துகின்றது. இதன் காவிய நல வெளிப்பாடே சேக்கிழார் பெருமானின் பெரிய புராணம் ஆகும். இந்த புராணம் பேரளவில் ஆராயப்பட்டுள்ளதாலும் ஆய்வு நூல்கள் பல வந்துள்ளதாலும் இங்கு மிகச் சுருக்கமாகவே கருதப்படுகின்றது.
3.2
சுந்தரரின் திருத்தொண்டர்த் தொகை
சைவர்கட்கு சாதிபேதம் இல்லை என்ற பெரும்புரட்சியை செய்தவர் சுந்தரரே யாகும் அவர் பாடிய திருத்தொண்டர்த் தொகை இதனால் பெரும் சிறப்பினையுடைய ஓர் பதிமாகின்றது. அதிலிருந்து முதற்பாடலை மாத்திரம் இங்கு தருகின்றோம்.
சுந்தரர் பதிகம் 7: 39
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே
Tillaivaaz antaNartam adiyaarkkum adiyeen
tiruniila kaNdattu kuyavanaark kadiyeen
illaiyee ennaata iyaRpakaikkum adiyeen
iLaiyaanRan kudimaaRan adiyaarkkum adiyeen
vellumaa mikavalla meypporuLuk kadiyeen
viripozilcuuz kunRaiyaar viRaNmiNdaR kadiyeen
allimen mullaiyanrtaar amarniit kadiyeen
arruuran aaruuril ammanuk kaaLee
மும்மலக் குணங்களைச் செற்று உயர்ந்து செந்தன்மை பூண்டொழுகும் திறத்து தில்லையம்பதில் வாழ்கின்ற அந்தணர்களுக்கு மட்டுமிலாது அவர்கள் அடியாருக்கும் அடியேன்; திருநீலகண்டம் என இயற்பெயர் பூண்டு சிவபக்தியில் சிறந்த குயவனாருக்கும் அடியேன்; வள்ளல் தன்மையில் சிறந்து சிவனடியார்கட்கு தன் துணைவி உட்பட கேட்டதெலாம் வழங்கிய இயற்பகை நாயனாருக்கு அடியேன்; அதேப்போன்ற இளையான்குடி மாறனாருக்கும் அவர் தம் அடியார்க்கும் அடியேன்; வீரத்தில் மிகச் சிறந்த எல்லாப் போர்களிலும் வெற்றியேக் கண்டுவந்த மெய்ப்பொருள் நாயனாருக்கும் அடியேன்; விரிந்த பொழில்கள் நிறைந்த குன்றிலிருந்து வரும் வீரர் விறல் மிண்ட கண்டருக்கும் அடியேன்; யாண்டும் அல்லி முல்லைபோன்ற பூக்களாலான மாலை சூடியே விளங்கிய அமர்நீதியாருக்கும் அடியேன், ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான்.
I, who remains as the person in eternal bondage to the BEING who has disclosed Himself as the Great One in Aruur, is also in service to those in service to the Pure Individuals full of grace and who live in Tillai; also to Tiruniila KaNdam the potter who was steadfast in his devotion to Civa; also to Iyarpakai who never ever said " I do not have " ; also even to those in service to Ilaiyan kudi maaRan who was also like that; also the always victorious king Meyp PoruL Naayanaar, the great warrior; also to ViRaminDa Kandar hailing from the hills of large gardens and also to the gentle Amarniiti who is remembered as the one wearing a garland of jasmine and lotus flowers
Tillaivaaz antaNartam adiyaarkkum adiyeen: I am in service even those who are in service to the Great Ones who live in Tillai
33.3
கண்ணப்பரின் தனிச் சிறப்பு
குலங் கோத்திரம் என்றெல்லாம் கருதாது சிவபத்தி ஒன்றையே அளவுகோலாகக் கொண்டு சுந்தரர் பாடிய திருத்தொண்டர்த் தொகைக்கு முன்னோடியாக விளங்கியது அவருக்கு முன்பே அநேகமாக 7ஆம் அல்லது 8ஆம் நூற்றாண்டினராக கருதப் படத் தக்க நக்கீரர் பாடிய திருகண்ணபர் தேவர் திருமறமும் அதேப் பெயரில் கல்லாட தேவ நாயனார் பாடிய அகவலுமாகும். சுருக்கமும் சிறப்புங் கருதி அந்த அகவல் இங்கே தரப்படுகின்றது.
கல்லாடரின் திருகண்ணப்ப தேவர் திருமறம்
1
பரிவின் தன்மை உருவுகொண் டனையவன்
போழ்வார் போர்த்த காழகச் செருப்பினன்
குருதி புலராச் சுருது எஃகம்
அரையிற் கட்டிய உடைதொற் கச்சௌயன்
தோல்நெடும் பையிற் குறுமயிர் திணித்து
வாரில் வீக்கிய வரிக்கைக் கட்டியுள்
உழுவைக் கூனுகிர் கேழல்வெண் மருப்பு
மாறுபடத் தொடுத்த மாலைஉத் தரியன்
நீலப் பீலி நெற்றி சூழ்ந்த
கானக் குஞ்சிக் கவடி புல்லினன்
10
முடுகு நாறு குடிலை யாக்கையன்
வேங்கை வென்று வாகை சூடிய
சங்கரன் றன்னினத் தலைவன் ஓங்கிய
வில்லும் அம்பும் நல்லன தாங்கி
எற்றுக் கல்வனங் காற்ரில் இயங்கிக்
கணையில் வீழ்த்துக் கருமா அறுத்துக்
கோலின் ஏற்றிக் கொழுந்தீக் காய்ச்சி
நாவில் வைத்த நாட் போனகமும்
தன்றலைச் சொருகிய தண்பள்ளித் தாமமும்
வாய்க்கல சத்து மஞ்சன நீரும்
20
கொண்டு கானப் பேருறை கண்ணுதல்
முடியிற் பூசை அடியால் நீக்கி
நீங்காக் குணத்துக்
காசரிக் கன்றவன் நேசங் காட்ட
முக்கண் அப்பனுக் கொருகணில் உதிரம்
தக்கி ணத்திடை இழிதர அக்கணம்
அழுது விழுந்து தொழுதெழுந் தரற்றிப்
புண்னருந் தாற்றப் போகா தென்று
தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப
ஒழிந்தது மற்றை ஒண்திரு நயனம்
30
பொழிந்த கண்ணீர்க் கலுழி பொங்க
அற்ற தென்று மற்ரக் கண்ணையும்
பகழித் தலையால் அகழி ஆண்டகை
ஒருகை யாலும் இருகை பிடித்து
ஒல்லை தம்புண் ஒழிந்தது பாராய்
நல்லை நல்லை எனப்பெறும்
திருவேட் டுவர்தந் திருவடிக் கைதொழ
கருவேட் டுழல்வினைக் காரியங் கெடுமே
என்றவாறு செல்கின்றது இவ்வகவல். இங்கு வேடராகிய கண்னப்பர் ஓர் பன்றியை வேட்டையாடிக் கொன்று அதன் தசையினை சுட்டு தன் நாவினால் சுவைத்த பின் தனக்கு மிகவும் பிடித்த அவ்வுணவினை இறைவனுக்கு படைத்து மகிழ்வது, தொழுத் சிவலிங்கத்தின் கண்களில் அடுத்தடுத்து குருதி வழிய, தன் கண்களையே அடுத்தடுத்து அம்பின் நுதியால் தன் முகத்திலிருந்து அகற்றி இறைவனக்கு படைத்த மறமும் இங்கு பாடப்படுகின்றது.
33.4
கண்கள் இரண்டையும் முகத்திலிருந்து அகற்றி சிவலிங்கத்திற்கு அப்புதல் என்பது ஞானக் கனவில் தான் வரும். இது இறைவன் யாதோவொரு நாடகம் நடத்தி கண்ணப்பரின் ஊனக் கண்கள் இரண்டையும் ஒருவாறு செயல் இழக்கச் செய்து ஞானக் கண்ணைத் திறந்து ஞானவுலகத் தரிசனம் மகிழுமாறு முக்கண்ணாகிய இறைவன் அருள்பாலிதுள்ளான் என்பதையே இக்கதை காட்டுகின்றது போலும்.
இப்படி ஞானக் கனவுகளாக புராணங்களை புரிந்துகொள்ள பிற்கால சித்தர்கள் பலர் முயன்றிருக்கின்றார்கள். அவை எல்லாம் பிறகு ஆராயப்படும்
புராண இலக்கியம் முற்றும்