தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு!மரபு விக்கி இருந்துச.சுவாமிநாதன் M.A.,(பிரித்தானியா)
"அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
ஏறக்குறைய 25 இடங்களில் இமயத்தைப் புகழ்ந்து பாடுகின்றனர் சங்கப்புலவர்கள். அது மட்டுமல்ல. பரணர் என்ற புலவர் இமயமலைக்காட்சிகளை தத்ரூபமாக வருணிக்கிறார். அதிலுள்ள புகழ்பெற்ற "பொற்கோடு" என்ற சிகரத்தையும் பல புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். "காஞ்சன சிருங்கம்" என்று வடமொழியில் கூறப்படும் இது மருவி, "கஞ்சன் ஜங்கா" என்று இன்று அழைக்கப்படுகிறது.
"பொன்னுடை நெடுங்கோட்டு இமயத்தன்ன"
"ஆரியர் அலறத்தாக்கி, பேர் இசைத்
"கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை
இதில் "கடவுள் நிலை இய கல்லோங்கு நெடுவரை" என்பது காளிதாசனின் "தேவதாத்மா ஹிமாலய:" என்ற வரியை பிரதிபலிப்பதாக உள்ளது. குமரி முதல் இமயம் வரை உள்ள பகுதிகளை பரணர் அறிந்திருந்தார். குமட்டூர் கண்ணனார் என்ற புலவரும் (ப.பத்து 11) இதே கருத்தைப் பாடியுள்ளார். இமயமலையிலுள்ள அன்னப்பறவைகளையும் பரணர் (நற்.356) வருணிக்கிறார்.
உலகிலேயே அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்றான சிரபுஞ்சியும் (மேகாலயா, இந்தியா) இமயமலைத்தொடரில் தான் உள்ளது. இதை அறிந்துதானோ என்னவோ சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாராட்டும் ஆலத்தூர் கிழார் இவ்வாறு கூறுகிறார்:-
"சான்றோர் செய்த நன்றுண்டாயின்
"இந்த உலகத்தில் சான்றோர் செய்த நன்மை இருக்குமாயின், இமயமலையில் திரண்டு இனிய ஓசையை உண்டாக்கிவரும் பெரிய மேகம் பெய்த நுட்பமான மழைத்துளிகளை விடப் பலகாலம் வாழ்வாயாக" என்று ஆலத்தூர் கிழார் வாழ்த்துகிறார்.
கடல் பற்றி பரணர் கூறும் கருத்தும் அற்புதமானது. கடலில் மேகங்கள் எவ்வளவு உண்டானாலும் நீர் அளவு குறையாது. கடலில் எவ்வளவு நதிகள் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டினாலும் கடல் நிரம்பி வழியாது.
பலரும் சிந்தித்துப் பார்க்காத புவியியல் உண்மை இது. பல்லாயிரக் கணக்கான ஆறுகள் ஒவ்வொரு நிமிடமும் பலகோடி கனஅடிநீரைக் கொட்டியபோதிலும் கடல் நிறைவதில்லை. அதே போல கடலிலிருந்து எவ்வளவு மழைமேகம் திரண்டாலும் கடல் குறைவதில்லை. இது இயற்கை நியதி. தமிழர்கள் எந்த அளவுக்கு பூமியை உற்றுக் கண்காணித்தனர் என்பதற்கு இது ஒரு சான்று.
கப்பலைத் தாக்கி அழிக்கும் மீன் வகைகள் பற்றியும் பரணர் குறிப்பிடுகிறார்.
"தனம் தரு நன்கலம் சிதையத்தாக்கும்
பிண்டன் என்பவனின் படை, தங்கம் கொண்டு வரும் கப்பலைத் தாக்கி அழிக்கும் இரால் மீன் கூட்டம் போன்றது என்று இதற்கு உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர். ஒருவகைக் கடற்புழுக்கள் (Tereda Navalis) கப்பலின் அடியில் ஒட்டிக்கொண்டு கப்பலையே அரித்து அழித்துவிடும் என்று தற்கால விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பரணர் குறிப்பிடும் 'இறவின் குப்பை' இத்தகைய வகை கடற்புழுக்களா என்பது ஆராய வேண்டிய தகவலாகும்.
--Geetha Sambasivam 11:47, 6 நவம்பர் 2011 (UTC) |