தக்காளி தோசைமரபு விக்கி இருந்துதக்காளி தோசைக்குத் தேவையான பொருட்கள்:
கால்கிலோ பச்சரிசி, இரண்டு டேபிள் ஸ்பூன் துபருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து. களைந்து கல்லரித்துச் சேர்த்து நனைத்து ஊற வைக்கவும்.
கால் கிலோ தக்காளி, தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், வெங்காயம் பெரியது பொடியாக நறுக்கியது ஒன்று. கருகப்பிலை, கொத்துமல்லி. பச்சை மிளகாய் நான்கு, இஞ்சி ஒரு துண்டு, மிளகு அரை டீஸ்பூன், ஜீரகம் ஒரு டீஸ்பூன். உப்பு தேவையான அளவு. பெருங்காயம் தேவையானால் கொஞ்சம் போல்.
ஊற வைத்த அரிசி, பருப்பு வகைகளைப் பச்சைமிளகாய், இஞ்சி, மிளகு, ஜீரகம் சேர்த்து உப்புப் போட்டு அரைக்கவும். கெட்டியாக இருக்கட்டும். கொஞ்சம் கொர கொரவென அரைபட்டதும் தக்காளியைச் சேர்த்து அரைக்கவும். தக்காளி நன்கு அரைபட வேண்டுமெனில் முதலிலேயே போட்டுக்கொள்ளவும். பின்னர் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொஞ்சம் அரைத்துக் கொண்டு, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து ஒரே சுற்று சுற்றிவிட்டு எடுத்துவிடவும். பின்னர் கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துத் தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக வார்த்துத் தேங்காய், கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்த சட்டினியோடு பரிமாறவும்.
சட்னி அரைக்க. பச்சைமிளகாய் நான்கு, இஞ்சி ஒரு துண்டு, கொத்துமல்லி சின்னதாய் ஒரு கட்டு, தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், உப்பு. அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கடுகு தாளிக்கவும்.
--Geetha Sambasivam 09:08, 3 நவம்பர் 2012 (UTC) |