டிஜேவு தயாரித்தல்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

மின்னாக்கப்பணியில் ஒரு முக்கிய படி, படங்களாக உள்ள புத்தகத்தை மென்புத்தகமாக்குவது. இதற்கு டிஜேவு என்ற கோப்பு ஒழுங்கு சிறிய கோப்பாக மாற்றுவதால் பயனுள்ளது. இங்கே உள்ள நகர்படம் மூலம் அதை எப்படி செய்வது என பார்க்கலாம்.

விண்டோஸுக்கான குறிப்புக்கள்: (லீனக்ஸூக்கு இதையே வைன் மூலம் நிறுவுங்கள். மற்றபடி படிகள் அதே!)

இங்கிருந்து மென்பொருளை தரவிறக்கி நிறுவுக: http://djvu.org/files/DjVuSolo3.1-noncom.exe

2.1 எம்.பி.
மென்பொருளை துவக்கவும்.

மென்புத்தகத்துக்கான முதல் பக்கத்தை (ebook_1stpage.djv) முதலில் திறக்கவும்.

அடுத்து புத்தக பக்கங்களின் படங்கள் அடங்கிய  கோப்பிலிருந்து எல்லா படங்களையும் சேர்க்கவும். இதற்கு எடிட் (edit) மெனுவில் அபென்ட் பேஜஸ் (append pages) தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் பெட்டியில் தகுந்த அடைவுக்குப்போய் அனைத்து படக் கோப்புக்களையும் தேர்வு செய்க. (முதலில் கோப்புகள் ஏதும் தென்படாமல் இருக்கலாம். கீழே files of type பெட்டியில் All supported images files என தேர்ந்தெடுத்தால் படகோப்புக்களை பார்க்கலாம். ) அனைத்தும் இணைக்கப்பட சற்று நேரமாகும்- உங்கள் கணினியை பொருத்து. கடைசியாக மென்புத்தக கடைசி பக்கம் (ebook_last_page.djvu) இணைக்கப்பட வேண்டும். அடுத்து பைல் மெனுவில் என்கோட் அஸ் டிஜேவு (encode as Djvu) என தேர்வு செய்க. தொடரும் வழிகாட்டியில் டிபிஐ 300 அல்லது 400 அமைக்கவும். போட்டோக்கள் என தேர்வு செய்க. மற்ற மதிப்புகள் முன்னுள்ளவையே இருக்கலாம். தகுந்த பெயர் கொடுக்கவும். சேமிக்கும் போது படங்கள் உள்ள அடைவிலேயே சேமிக்கவும். இப்போது மொத்த அடைவையே எஃப்டிபி மூலம் ஏற்றிவிடலாம். இப்போது நகர் படத்தை காணுங்கள்.



பங்களிப்பாளர்கள்

Drtv மற்றும் Vinodh

"https://marabuwiki.org/index.php?title=டிஜேவு_தயாரித்தல்&oldid=675" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 5 ஜனவரி 2010, 15:51 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 5,876 முறைகள் அணுகப்பட்டது.