ஜெகநாதன் திருக்கோவில் - தஞ்சாவூர்மரபு விக்கி இருந்துஅருள்மிகு ஜெகநாதன் திருக்கோவில்
மூலவர் : ஜெகநாதன், விண்ணகரப்பெருமாள், நாதநாதன்.
பாடியவர்கள்: மங்களாசாஸனம் திருமங்கையாழ்வார் உம்பருலகேழும் கடலேழும் மலையேழும் ஒழியாமைமுனநாள் -திருமங்கையாழ்வார்
இத்தல இறைவன் மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சிதருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் மந்தார விமானம் எனப்படுகிறது. நந்தி, சிபிசக்கரவர்த்தி ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர். நந்தி சாபம் விலகிய தலம்: நந்திதேவர் வைகுண்டத்தில் பெருமாளை காணச் சென்றார். அப்போது காவலுக்கு நின்றவர்களை உதாசீனப்படுத்தி விட்டு, கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால் அவர்கள் கோபம் கொண்டு,""எங்களை அவமதித்ததால் உன் உடம்பு உஷ்ணத்தினால் எரியும்,என சாபமிட்டனர். நடந்த விஷயத்தை சிவனிடம் கூறினார் நந்தி. அதற்கு அவர்,""பூமியில் திருமகள் தவம் செய்துகொண்டிருக்கும் செண்பகாரண்ய தலத்திற்கு நீயும் சென்று தவம் செய்து சாபம் விமோசனம் பெறுவாய்,என்றார். நந்தியும் அவ்வாறே தவம் செய்ய, மகிழ்ந்த பெருமாள் அவருக்கு சாப விமோசனம் தந்தார். தன்னைப் பார்க்கும் ஆர்வத்தில் தவறு செய்த நந்தியின் பெயரால், "நந்திபுர விண்ணகரம்' என தனது தலம் வழங்கப்படும்,என்று அருள்பாலித்தார். தலச்சிறப்பு: சந்திர தோஷ பரிகார ஸ்தலம். இத்தல பெருமாள் தன் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார். ஆரம்பகாலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலித்த பெருமாள், லட்சுமி மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார் என்று தலபுராணம் கூறுகிறது.சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில், மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர்.விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர், தீராத நோயால் சிரமப்படும் தன் அன்னை விரைவில் குணமாக இத்தலத்தில் வேண்டினார். பெருமாளின் அருளால் தன் அன்னை குணமானவுடன், ஒரு ராஜா அணிய வேண்டிய அனைத்து விதமான நகைகளை கொடுத்ததுடன், பல அரிய திருப்பணிகள் செய்தார்.
தல வரலாறு:
திருவிழா:
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:57, 15 ஜூன் 2011 (UTC) நன்றி - தின மலர்.
|
