ஜூபா! ஜூபா!மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
ஜூபா! ஜூபா! இன்றைய சுபதினம். ஜூலை, 8/9, 2011 தேசியம் (நேஷனாலிட்டி), தேசாபிமானம், தேசபக்தி என்ற வரிசையில் தேசாபிலாஷைகளை பற்றி எழுத இன்று உத்தரவாகியது.தேசாபிலாஷை என்ற சொல்லுக்கு பொருள் காண, 1947ல் இந்திய திருநாடு இரண்டுப்பட்டுப்போனதும், ஒரு ராணுவ தலையீட்டுக்குப் பிறகு, பங்களா தேஷ் ஜனித்ததும், ஐக்கிய அமெரிக்க நாடு இரண்டு படும் போல் இருந்த போது, அதிபர் அப்ரஹாம் லிங்கன் தேசியத்தின் ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியதும், கனடாவில் இரு மொழியபிமானம் இல்லறம் நடத்துவதும், பெர்லின் சுவர் உடைந்ததும் என் நினைவில் வலா வருகின்றன. சேருவதோ, பிரிவதோ, தேசாபிலாஷையின் இலக்கு அல்ல. அதன் இலக்கு தன்னுடைய தேசாபிமானத்தை புரிந்து கொண்டு, தேசியத்தை பாதுகாப்பது. ஜூலை, 8/9, 2011: தெற்கு சூடான் நாடு சுபஜெனனம். ஐ.நா.வின் 193வது நாடு; ஆஃப்பிரிக்காவிலிருந்து 54வது உறுப்பினர். வடக்கு, தெற்கு பிராந்தியங்களின் ஒரே அமைப்பாக இருந்த சூடானின் அதிபர் ஓமர் அல் பஷீரும், ஐ.நா. முதல்வர் பான் கீ மூன் அவர்களும் வருகை தந்ததும், முதலில் தெற்கு சூடானை சூடான் ஏற்றுக்கொண்ட சுபசூசகமும், புதிய நாட்டின் அதிபர் சல்வா கீர் அவர்களை மக்கள் கொண்டாடியதும் நன்நிமித்தங்களே.
இன்னம்பூரான் 09 07 2011
உசாத்துணை: http://www.bbc.co.uk/news/world-africa-14092375 http://news.bbcimg.co.uk/media/images/53953000/jpg/_53953313_012409953-1.jpg
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:49, 16 ஜூலை 2011 (UTC) |
