சௌசௌ மோர்க்கூட்டு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

எழுதியவர்: தமிழ்த்தேனீ



சௌசௌ என்னும் பங்களூர் கத்திரிக்காயில் மோர்க்கூட்டு செய்யலாம் தெரியுமோ


தேவையான பொருட்கள் :
காரம் தேவையான அளவு பச்சை மிளகாய் , கொஞ்சம் சீரகம்,
உப்பு, துருவிய தேங்காய் ,பெருங்காயம், உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை


செய்யும் வகை :

பச்சை மிளகாயையும் , சீரகத்தையும் , தேங்காயத்துருவலையும் கொஞ்சம் உப்பு போட்டு அரைப்பானில் அரைத்துக்கொள்ளவும். அந்த விழுதை எடுத்து வைத்துக்கொண்டு சீராக நறுக்கப்பட்ட சௌ சௌ எனப்படும் பங்களூர்க் கத்திரிக்காயை சற்றே குறைவாக தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரை வேக்காடு போதும்\ (நான் சொல்வது சமையலில், அல்ல) வேகவைப்பதில் சொல்கிறேன்.


இப்போது அந்த சௌ சௌ பங்களூர் கத்திரிக்காயுடன் அரைத்து வைத்த விழுதை போட்டு
நன்றாகக் கொதிக்கவிடவும். இரண்டும் கலந்து நன்றாக ஓரளவு சௌ சௌ காய்கள் தனியாக இருக்குமாறு வேக வைத்தால் போதும்அதிகமாக வேக வைத்தால் குழைந்துவிடும். இப்போது கொஞ்சம் கடுகு , உளுத்தம்பருப்பு பெருங்காயம் கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து தனியே வைத்துக்கொள்ளவும்.


இப்போது அடுப்பில் இருக்கும் சௌ சௌ கொதித்துக்கொண்டிருக்கும் பாத்திரத்தை எடுத்து கீழே வைத்துவிட்டு
வேண்டிய அளவு தயிரை எடுத்து அதிக நீர் சேர்க்காமல் (எளிதாக அரைப்பானின் சிறிய பாத்திரத்தில் இட்டு ஒரு முறை சுழற்றினால் கெட்டியான மோர்க்கலவை கிடைக்கும் அந்த மோர்க்கலவையை சௌ சௌ இருக்கும் பாத்திரத்தில் இட்டு நன்றாகக் கலக்கவும்.


இப்போது தாளித்து வைத்திருக்கும் கடுகு , உளுத்தம்பருப்பு பெருங்காயம் கருவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு
எல்லாம் சரியாக செய்தாயிற்றா இப்போது பெங்களூர் கத்திர்க்காய் மோர்க்கூட்டு தயார்.


(எதற்கும் ஒரு ஸ்பூனில் கொஞ்சம் எடுத்து வாயால் ஊதி சூடு தணித்து ருசி பார்க்கவும்) இல்லையென்றால் நாக்கு சுடும்
உப்பு காரம் எதாவ்து குறைவென்றால் போட்டு சரி செய்துவிடலாம்.

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=சௌசௌ_மோர்க்கூட்டு&oldid=1183" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 31 ஜனவரி 2010, 18:13 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,865 முறைகள் அணுகப்பட்டது.