சேப்பங்கிழங்கு கறி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சேப்பங்கிழங்கு கறி

  • எல்லா கிழங்கு வகைகளைப் போலவே பகலிலே உண்ணலாம். வாங்கும் போது கெட்டியாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். நிறைய மண் இருக்கும் - 2 -3 முறை நன்றாக அலம்ப வேண்டும்.
  • முழுகும் அளவு தண்ணீருடன் cooker-ல் வேக வைக்கவும். எடுத்து ஆறியவுடன், நீரை வடித்து விட்டு, தோலை நீக்க வேண்டும்.
  • சிறு சிறு துண்டுகளாக அரியவும்.


  1. அடி கெட்டியான கடாயில், 4 spoonகள் எண்ணெய் பரவலாக விடவும். சூடானதும், 1/2 spoon கடுகு சேர்த்து தாளித்து, 1/2 spoon மஞ்சள் பொடி, 1 spoon மிளகாய்ப்பொடி, பொடி உப்பு, கறிவேப்பிலை 10, 1 spoon தனியா பொடி (பிடிக்குமென்றால்) சேர்த்து, கலந்து, பின் அரிந்து வைத்துள்ள கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
  2. தணலை மெதுவாக வைத்து, நன்றாக சிவக்குமாறு செய்து, தோசைத்திருப்பி கொண்டு சில நிமிடங்களுக்கு ஒரு முறை திருப்பி விடவும்.
  3. நன்றாக roast ஆனதும், சூடாகப் பரிமாறவும்.


இதை கந்தரப்பத்தோடு சாப்பிட்டால், நிச்சயமாக உண்ட களைப்பிருக்கும் :))


-ஸ்வர்ணா lakshmi_ssri@yahoo.com

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=சேப்பங்கிழங்கு_கறி&oldid=1071" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 26 ஜனவரி 2010, 21:39 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,032 முறைகள் அணுகப்பட்டது.