சேக்கிழார் திருக்கோவில்மரபு விக்கி இருந்து
* அருள்மிகு சேக்கிழார் திருக்கோவில் மூலவர் : சேக்கிழார்
இக்கோயிலில் விநாயகர், உமாபதி சிவாச்சாரியார், பெரிய புராணம் அரங்கேற்றம் செய்ய உதவிய அனபாய சோழ மன்னன் ஆகியோருக்கு சிலைகள் இருக்கிறது.
தலபெருமை: விழாவின் நான்காம் நாளில், சேக்கிழார் இத்தலத்திற்கு எழுந்தருளி சிவபூஜை செய்கிறார். ஆறாம் நாளில் பெரிய புராணம் இயற்றிய வைபவமும், பின்பு சேக்கிழார் நடராஜருடன் சேர்ந்து வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. எட்டாம் நாளில் பெரியபுராணம் அரங்கேற்றமும், சேக்கிழாருக்கு குன்றத்தூர் முருகன் காட்சி தரும் வைபவமும் நடக்கிறது. அன்று முருகனுடன் சேக்கிழார் புறப்பாடாகிறார். பத்தாம் நாளில் சேக்கிழார், சிவனுடன் ஐக்கியமான வைபவம் நடக்கிறது. இவ்விழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும்.
தல வரலாறு: ஒருசமயம் சிவபக்தனான மன்னன், சமண மதத்தின் மீது நாட்டம் கொண்டு, சமண மத நூல்களை படித்து வந்தான். மன்னனை திருத்த எண்ணிய சேக்கிழார் அவனிடம், சிவன் அடியவர்களுக்கு காட்சி தந்த பெருமைகளைச் சொல்லும் நூல்களை படிக்கும்படி அறிவுறுத்தினார். சேக்கிழாரின் சொல் கேட்ட மன்னன், தனக்கு சிவனின் பெருமைகளை கூறும்படி கேட்டுக்கொண்டார். அவரிடம் சிவனருள் பெற்ற நாயன்மார்களின் வரலாறைக் கூறினார். மன்னன் மிகவும் மகிழ்ந்தான். நாயன்மார்களின் வரலாறை, காவியமாக எழுதும்படி சேக்கிழாரிடம் வேண்டிக் கேட்டான். அவரும் சம்மதிக்கவே பொன், பொருள் கொடுத்து சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தான். சேக்கிழார் நடராஜரை வழிபட, அசரீரியாக "உலகெலாம்' என்று சிவன் அடியெடுத்துக் கொடுத்தார். அதை வைத்து, "பெரியபுராணம்' என்னும் காவியத்தை இயற்றினார் சேக்கிழார். அதன்பின் சிதம்பரம் வந்த அனபாய சோழன், பெரியபுராணத்தை அரங்கேற்றம் செய்தான்.
திருவிழா:
திறக்கும் நேரம்:
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:20, 17 ஏப்ரல் 2011 (UTC) நன்றி - தின மலர். |
