சுவையான கேக் வகைகள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

உமா சண்முகம் 


கேக் செய்யும் பொழுது கவனிக்க வேண்டியவைகள்;-


1. கேக் அல்லது பிஸ்கெட் ரெடியானவுடனேயே ஓவனிலிருந்து எடுக்கக் கூடாது.சிறிது நேரம்

நேரம் அந்த சூட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.

2.ஃபேன் காற்றில் ஆற வைக்கக் கூடாது.

3.பழைய பேக்கிங் பவுடர் உபயோகித்தால் கேக் எழும்பாது.

4.கேக் கலவை கேக் செய்யும் பாத்திரத்தின் பாதி உயரத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

5.கேக் ரெடியானவுடனேயே சூடாக கவிழ்க்கக் கூடாது.

6.அடிக்கடி ஓவனை வெந்து விட்டதா என்று திறந்து பார்க்கக் கூடாது.

7.மாவில் வெண்ணெய் சர்க்கரை முட்டை சேர்ந்த கலவையை மெதுவாக ஊற்றி

விரல் நுனிகளாலேயே லேசாக கலக்கவேண்டும்.

8.வெண்ணெய் முட்டை போன்றவற்றை குளிர் சாதனப்பெட்டியில் வைத்திருந்தால்

ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வெளியே எடுத்து விடவும்.

9.கேக் கலவை மிருதுவாகவும் லேசாகவும் இருக்கவேண்டும்.ஒரு கரண்டியில்

இக் கலவையில் கொஞ்சமெடுத்து ஊற்றினால் மிருதுவாக வழிந்து விழ வேண்டும்.

கலவை கெட்டியாக இருந்தால் பால் ஊற்றிக் கொள்ளலாம்.

10டிரை ஃப்ருட்ஸ் எனப்படும் உலர்ந்த பழ வகைகளை கேக்கில் உபயோகிப்பதாக

இருந்தால்,கேக் கலவையுடன் சேர்ப்பதற்கு முன்பாக இவற்றின் மீது சிரிதளவு

உலர்ந்த மாவு சேர்த்துப் பிசறி சேர்க்க வேண்டும்.இதனால் ப்ழ வகைகள் கேக்கில்

ஊறி நிற்கும்.


சாக்லெட் ஆரஞ்ச் ஏஞ்சல் ஃபுட் கேக்


தேவையான பொருட்கள்;-


மைதா 1/2 கப்

கோக்கோ பவுடர் 1/4 கப்

வெண்ணிலா எஸ்சென்ஸ் -2 டீஸ்பூன்

சோள மாவு -2 மேஜைக் கரண்டி

உப்பு - 1 சிட்டிகை

முட்டையின் வெண் கரு -5

க்ரீம் ஆஃப் டார் டார் என்று சொல்லப்படும்

ஒருவித ஸ்டார்ச் பவுடர் -1/2 டீஸ்பூன்

சர்க்கரை -1/2 கப்

ஆரஞ்சு பழத் தோல்

துருவியது -சிறிதளவு அலங்கரிக்க


முதலில் ஒவனை சூடாக்கி ரெடியாக வைக்கவும்.


1.மைதா கோக்கோ சோள் மாவு கலந்து சலிக்கவும்

2.முட்டையின் வெள்ளை நுரைவரும் வரை அடிக்கவும்.

3.க்ரீம் ஆஃப் டார் டார் பவுடரையும் சேர்த்து அடிக்கவும்.ஸ்பூனால் எடுத்தால்

கீழே விழாமல் அப்படியே நிற்க வேண்டும்.

4.கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை சேர்த்துஅடிக்கவேண்டும்.

5.பிறகு தயாராக உள்ளமைதா சேர்த்த பிறகு கேக் பாத்திரத்தில் கொட்டி பேக்

செய்யவும்.

6.முட்டையின் வெள்ளையை மட்டுமே வைத்து செய்வதால் மிகவும் லேசாக

இருக்கும்.அக் கலவையில் பால் சேர்க்க கூடாது.

7.இதை ராயல் ஐசிங் கொண்டு அலங்கரிக்கலாம்.










--பவள சங்கரி திருநாவுக்கரசு. 15:52, 13 செப்டெம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=சுவையான_கேக்_வகைகள்&oldid=8211" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 13 செப்டெம்பர் 2011, 15:52 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,398 முறைகள் அணுகப்பட்டது.