சீனா! சில நாள் குறிப்புகள்...மரபு விக்கி இருந்துநா.கண்ணன்
முதலில் நேற்று பூரண பௌர்ணமி. அதுவும் வசந்த ருது பௌர்ணமி என்பது ராஸலீலை காலம்.
யாஞ்சி நகர வீதிலிருந்து வானில் எழும் முழு நிலா.
இக்காலக்கட்டத்தில் மூதாதையர் பூமிக்கு வந்து வாரிசுகளை வாழ்த்துவதாக ஐதீகம். அதற்காக முழுநிலா அப்பம் (மூன்கேக்) செய்யும் வழக்கமுண்டு. ஒருவகையில் ராஸலீலாவுடன் தொடர்புடைய எண்ணம்தான். ஏனென்றால் ராஸலீலையில் கண்ணன் (இறைவன்) கீழிறங்கி (அவதாரம்) வந்து ஆன்மாக்களுடன் (கோபியர்) கூடுகிறான். இங்கு பித்ருக்கள் வாழ்வோருக்கு வந்து ஆசீர்வாதம் செய்கின்றனர். அன்று சிறுவர்கள், இளைஞர்கள், தம்பதியர் தம் பெற்றோரின் அஸ்தி தலத்திற்குச் சென்று வழிபடுகின்றனர்.
முதலில் எல்லோருக்கும் ராஸலீலா வாழ்த்துகள்!
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:51, 10 நவம்பர் 2011 (UTC) |

