சிவப்பு வெல்வெட் கேக்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


மைதா – 1 1/2 கப்

சர்க்கரை – 1 1/2 கப்

எண்ணெய் – 1 1/2 கப்

சோடா உப்பு – 3/4 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி

முட்டை – 2

வெள்ளை வினிகர் – 1 தேக்கரண்டி

வெனிலா எஸென்ஸ் – 1 தேக்கரண்டி

கெட்டியான மோர் – 1 கப்

சிவப்பு ஃபுட் கலர் – 2 தேக்கரண்டி

க்ரீம் சீஸ் – தேவையான அளவு


செய்முறை


1. மைதா, பேக்கிங் பவுடர், மற்றும் சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து இருமுறை சலித்து வைத்துக் கொள்ளுங்கள்.

2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய், முட்டை, வினிகர், சர்க்கரை மற்றும் எசென்ஸ் எல்லாவற்றையும் கலந்து நன்றாக நுரைக்க அடிக்கவும்.

3. பின் சிவப்பு ஃபுட் கலரையும் சேர்த்து அடியுங்கள். பிறகு சலித்து வைத்துள்ள மைதா கலவையும் சிறிது சிறிதாக சேர்த்துக் கலக்குங்கள்.

4. பிறகு மோரையும் அதனுடன் கலக்குங்கள். இப்போது கேக் கலவை ரெடி. இதை கேக் பாத்திரத்தில் கொட்டி பேக் செய்யுங்கள்.

5. கேக் கலவையை இரண்டாகப் பிரித்து ஒரே அளவிலான இரண்டு தனித்தனிக் கேக்குகளாகவும் பேக் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதாவது பேக் ஆன இரண்டு கேக்குகளின் நடுவே க்ரீம் சீஸ்ஃபில்லிங்கைப் பரத்தி விட்டு அதை ஒரே கேக்காக செட் செய்யுங்கள்.

இதோ சிவப்பு வெல்வெட் கேக் ரெடி.

க்ரீம் சீஸ் தயாரிக்கும் விதம்

தயிரை ஒரு துணியில் வடிகட்டிக் கொள்ளுங்கள். தண்ணீர் வடிந்தவுடன் இந்த கெட்டித் தயிரை துணியிலிருந்து பிரித்து எடுத்து(2கப் தேவை) அத்துடன் 2கப் சர்க்கரை மற்றும் 1 தேக்கரண்டி வெனிலா எஸென்ஸும்சேர்த்து நுரைக்க அடித்துக் கொள்ளுங்கள். க்ரீம் சீஸ் ரெடி. இதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி வைத்து தேவையான போது உபயோகப் படுத்தலாம்.







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:17, 25 அக்டோபர் 2011 (UTC)

நன்றி - வல்லமை

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=சிவப்பு_வெல்வெட்_கேக்&oldid=8455" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 25 அக்டோபர் 2011, 02:17 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,570 முறைகள் அணுகப்பட்டது.