Civanjana KaRpam : The Eight Tantra : The True Vedas
சிவஞான கற்பம் : எட்டாம் தந்திரம்: எழுதாமறையியல்
The Vedas are known in Tamil ‘ezutaa maRai' meaning the scripture that does not allow itself to be verbalized and hence translated into any language whatsoever. While sometimes it is identified as Rig Yajur Sama and Atharva Vedas but I think this is a mistake arising from a misunderstanding of the essence of Vedam. I take the meaning of ‘ezutaa maRai” as a TEXT that is there always and which remains the source of scriptures but itself remaining untranslatable and nonverbalisable. Thus this True Vedam, the Cow of all scriptures that Tirumular speaks of(veetam pacu) explained in this chapter, in what sense the True Vedam remains forever nonverbalisable amd hemce NOT the four Vedas Rig etc.
மெய்யான வேதங்களை தமிழச் சான்றோர்கள் ‘எழுதா மறை' என்பர். இதன் பொருள் யாண்டும் எவ்வாற்றினும் சொற்படுத்த முடியா நிலையில் நின்று நிலவி ஞானம் கொளுத்தும் மந்திர வடிவத்து நூல் என்றே பொருள்படும் என்பதால், வடமொழியில் யாக்கப்பட்டுள்ள இருக்கு போன்றவை இந்த ‘எழுதா மறை' அல்ல. திருமூலர் ‘வேதம் பசு' என்கின்றார், அந்தரத்தில் மந்திர வடிவங்களாக நின்றவாறு அந்த தூரத்தினை எட்டுவார்க்கு ஞானம் போதித்தவாறு இருக்கும் ஒன்றே இந்த ‘ஞால் வேதம்' ( > நால் வேதம்) ஆகிய சுத்த வேதமாகும்.
சிவஞானகற்பத்தின் எட்டாம் தந்திரம் இதனை செவ்வே விளக்கும்.
8.1
தூரநூற் றருந்துரியக் காட்சித்துன் னிருள்போக்கி
ஆரணப் பேற்றினழகு தரும்
- இவ்வாறான தூர நூற்களை அகக்கண்ணில் எட்டுவார்க்கு, சிவப்பிரகாச விகாசத்து துரியக் காட்சி மெய்யாகும். அவை சிவஞானம் விளம்பி, அகத்துச் செறிந்திருக்கும் அஞ்ஞான இருளை யகற்றி தெய்வீகமான சுத்தமான அழகுகளை புசிக்கத் தரும்
tuuranuuR Rarunturiyak kaadcittun niruLpookki
aaraNap peeRRinazaku tarum.
The transcendent distance viewing that are given by the Distant Texts
Will destroy the darkness of IGNORANCE and install the beauties of the truly Divine
‘துரியக் காட்சி' என்பது ஐம்பொறிகளும் அவற்றோடு தொடக்குற்ற அந்தகரணங்களையும் கருவியாகக் கொண்டு அறிவினைத் துலக்கும் காட்சிகளுக்கு வேறாக, அவற்றை கழற்றிவிட்டு இன்னும் ஆழமாகச் செல்ல அதுபொழுது ஞானக்கண்ணிற்கு ஆகும் காட்சிகளாகும். இத்தகு காட்சிகள் விசுத்தி தலம் தொடங்கி மேலான ஆக்ஞா சக்கரம் முடிய குருபதத்திற்கு இட்டுச் செல்லும் தரிசனங்களாகும். விஞ்ஞானகாட்சிகளுக்கு மேலாகிய சிவஞானத்தையே வளர்க்கவல்ல சிவஞானக் காட்சிகள் எனினும் அமையும். விழிக்கனவும் படுக்கனவும் நுதல்விழியின் புராணக்காட்சியும் இன்னும் இதனைப் போன்ற விஞ்ஞான காட்சிகளுக்கும் மேலான சிவஞானக் காட்சிகளே இத் துரியக் காட்சிகள் ஆகும். இவையே ஒளிவடிவாகிய பராபரை தரிசனம் என்றும் அதன்வழி பரசிவ தரிசனத்திற்கு எதுவாகிய ஒன்றும் ஆகும்
By ‘ the transcendent distance viewing ‘ is meant the kinds of visions that become available when the senses and the cognitive utensils associated with them are disengaged and the anma reaches even deeper metaphysical grounds enjoying vision of the true depths. Such visions begin to be experiential from the Vicutti Cakra onwards and lead towards the Aknja Cakra developing the person as a true Guru on the way. Such visions are even deeper than those visions of the Third Eye such as dream seeing, the mythic seeking and so forth. These really deep visions in fact lead to further clarifications of Civanjanam, the ABSOLUTE understanding itself.
இத்தகைய துரியக்காட்சிகளையும் அவற்றோடு தொடர்புடைய விழிக்கனவும் படுக்கனவு ஆகியவற்றிற்கு , மூலகாரணமாக , முதலாக இருப்பதுவே தூரநூல் ஆகும். தவத்தின் வலியால் சுழுமுனை நாடி வழியாக ஆன்மாவை செலுத்த ஆங்காகும் அனுபவங்கள் இந்த தூரநூலை படிக்காது படிப்பதால் ஆகும் அறிவின் துலக்கங்கள்.
The Distant Texts are those, which are sources of transductive perception, such as dreaming and related experiences beyond the senses. When a person through mighty feats of yogas and tapas, travels through the Cuzi Munai Nadi (where both Natam and Bindu are active together), such experiences become possible. The Distant Texts are located here and readings of these without really reading facilitate such visions.
பிறவகைக் காட்சிகள் அகத்திலே செறியும் மாயை கன்மம் போன்ற மலங்களைப் போக்க, இத்தகைய துரியக் காட்சிகளே சிவஞானத்தோடு கூடிய சிறப்பால், அகத்தில் செறிந்திருக்கும் ஆணவயிருளைப் போக்க, பேறுகளிலெல்லாம் மேலான வீடுபேறான ஆரணபேற்றினை அனுபவித்து சுடரும் தெய்வீக நலத்தால் அனைவரையும் தன்பால் ஈர்த்து வசப்படுத்தும் அழகினைத் தருm என்றவாறு
The various other kinds of visions or darsanas may serve to dispel the ignorance caused by the dirts Maayai and Kanmam. But these distance visions, because connected with Civanjaanam, have the power to dispel the aaNava Malam itself. This enables such the soul to begin to enjoy Moksa itself and which because of the real divine qualities that come prevail, attract the people make them respect him immensely.
கடப்புரு காண் திறன் என்று முன்பு விளக்கப்பட்ட அத்திறத்திற்கு மூலமாக இருப்பதால், இதனை தூரநூல என்றது. இந்த தூரநூல் பரசிவனே கூறும் சொல்லாகும் என்பதால், அதுவே வீடுபேற்றினை நல்கக் கூடிய சிவஞான தரிசனமும் தர வல்லதாம்.
We call such metaphysical texts Transcendent Distant Texts only because they are the root causes of the Transductive Perceptions that we have already explained earlier. The words here are in fact those of BEING Himself and hence it is also capable of instructing on Civajnaanam that in fact would enable the soul enjoy Moksa.
இவ்வாறே கூறுகின்றார் திருமூலரும்.
So says also Tirumular.
2028.
ஏறு நெறியே மலத்தை எரித்தலால்
ஈறில் உரையால் இருளை யறுத்தலான்
மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக்
கூறு பரனே குருவாம் இயம்பிலே
eeRu neRiyee malattai erittalaal
iiRil uraiyaal iruLai yaRuittalaan
maaRil pasupaasam vaaddalaal viiduk
kuuRu paranee kuruvaam iyambilee
சுழிமுனை நாடியாகச் சென்று கற்றளிகளாக ஏறி ஏறி பக்குவத்தில் முதிர்ந்து , மறையெல்லாம் போக்கி மலத்தை எரித்து, முடிவில் இந்த துரநூற்களாகிய பஎஅசிவமே பகரும் யாண்டும் அழியாது நிற்கின்ற ஈறு இ; உரையாகிய இவற்றையே கற்று சிவஞானம் பெற, பசுக்களின் கண் யாண்டும் விடாது பற்றிகொண்டிருகின்ற ஆணவ மலத்தை விட்டு மேலே செல்லுதல் ஆகும் என்றவாறு. பரநூற்கள் வழியாக அகத்திலே பறபல சிவஞானத் தரிசனங்களைத் தரும் பரசிவனே, இதன் காரணமாக மெய்யான குருவும் ஆகின்றான் என்றவாறு.
Those who travel by the cuzi munai naadi, climb up cakras after cakras and become spiritually more and more developed. From the metaphysical illuminations they gain they burn off the Malam and the ignorance it breeds and finally reach a situation where they learn the deathless words of BEING himself. With this Njaanam shining brilliantly they dispel the Paacaas in the soul and become Pure and Clean - fit for Moka. Thus because of this BEING becomes the Real Guru - the so-called other guru-s are only secondary ones.
சூத்திரம் 8-2
தூரநூல் தொகுப்பே தோன்றாநல் வேதம்
ஆரசிந்திப் பாரனைவர்க்கும் பொது
- அனைவர் அகத்திலேயும் அழியாது நின்று சிவஞானத்தை உணர்த்திக் கொண்டே இருக்கும் இதுவே மெய்யான எழுதாக் கிளவியும் , பண்டைய மறையும் யாண்டும் அழியாது இலங்குகின்ற ஞால் (நால்) வேதமுமாகும். இங்கு ‘ஞால்' எனபது சிவஞானம் சுடர்கின்ற என்ற பொருளது, திரிந்து ‘நால்' என்றும் விளங்குகின்றது. மேலும் ‘வேதம்' என்பதும் தூய தமிழ் சொல்லாகும். சுமேருத் தமிழ் ‘சித்' என்பது ‘வித்' ஆகி, வித்தையாகிய ஞானத்தைக் கொண்டது ‘வேதம்' என்றாயிற்று. சிவஞானந்தான் ஆணவ வல்லிருளைப் போக்க வல்லது, யாது இந்த சிவஞானத்தை விரிக்கின்றதோ அதுவே ‘வேதம்' ஆயிற்று. இத்தகைய வேதம் அனைவருக்கும் பொதுவாக அனைவர் அகத்தேயும் அகலாது நிற்கின்றது
Sutra 8-2
Tuuranuul tokuppee toonRaanal veetam
Aaracintipaa ranaivarkkum potu.
A collection of such Distant Texts is in fact the true Vedas- the scriptures that do not allow being written down in any language. The original ‘njaal veetam' has been distorted into “naal veetam' which can also mean the Four Vedas where as a matter of fact the original meaning was' That which radiates the Njaanam” where the Njaanam is the Civanjaanam- that which dispels the aaNava Malam. Such a Veetam exists as available to all and in their mind itself.
இந்த எழுதாமறை. ஈறில் உரை என்பதால், மொழியாக்கப்பட்டு வடமொழியிலும் தமிழிலும் உலகத்துப் பிற மொழிகளிலும் இலங்கும் மறைநூற்கள் எல்லாம் இந்த மூல நூலின் பெயர்ப்புக்களாம் என்றது. ஆகவே அவை அனைத்தும் அழிந்து போகவல்ல இந்த யாண்டும் அழியாத மூல எழுதா மறையின் , தூரநூறகளின் ஓர் சில உணமைகளை தெரிப்பவையே யாகும். இவை முற்றாக ஞானத்தை உணர்த்தாது என்பதின் இவற்றை கடந்து செல்லவே தான் ஆன்மா இந்த தூர்நூற்களில் அழுந்தி சிவஞானம் மகிழும் என்றவாறு.
This Primordial Text that keeps on resisting being written down in any language whatsoever serves as the as the Primordial Text that is only translated into various earthly languages like Sk Tamil and so forth. But compared to the original, all such scriptures reflect only partially the Njaanam embodied in the collection of Distant Texts. So those who wish to enjoy the Njaanam, have to transcend and go beyond the scriptures so that the soul would delve into these primordial Distant Texts and studying them enjoy the Njaanam
இந்த பெயர்ப்புக்கள் எவ்வாறு அமைகின்றன வெனில் கூறுதும். ஆன்மா காலங்கடந்த துரியாதீத நிலையில் அழுந்தி அதுபொழுது இந்த ஈறில் உரையினை ஒருவாறு உணர்ந்து பிறகு எழுந்து காலவுணர்வுடனாகிய உலகு மீண்டு, மோனத்தில் அடைந்து மகிந்த ஞானத்தை வெளிபடுத்தலே இந்த பெயர்ப்புக்கள் ஆகும். இதனால் சத்தறிவாகிய சிவஞானத்தை காலவுணர்வோடு வரும் அசத்தறிவாக திரிக்கின்றது இத்தகைய பெயர்ப்புக்கள். ஆயினும் சத்தறிவை ஒருவாறு தன் புதையுருவாக வைத்திருப்பதால், இத்தகைய மறைநூற்களும் யாணடும் அழியா ஈரில் உரைகளாக கொள்ளப்படுகின்றன. ஆயினும் மெய்ஞானிகள் இவ்வாறான பிழைகளில் விழார்.
All scriptures and metaphysical treatises are TRANSLATIONS of the primordial Distant Texts that embody the Njaanam. Now such production take place only because some gifted individuals plunging into these Distant Texts through the practice of Deep Silence where they also enjoy the Njaanam but who pull themselves out from this and recalling the Njaanam express it in whatever world language they are familiar transforming the Understanding beyond Time into something temporal and hence something that is not absolute. Thus all scriptures are the same in having the SAME Distant Texts but different in being only partial translations of the Njaanam. Such scriptures have an enduring quality only because of this, However the real mystics will always know the truth that no scripture can embody the Njaanam.
இனி இதனை அனைவருக்கும் பொது என்பது, ஒவ்வொருவர் அகத்திலேயும் ஞானகுரவனாக இறைவன் எழுந்தருளி இதனை உரைத்துக் கொண்டே இருப்பதால் என்க. இந்த அகத்து உபதேசத்தை செவிமடுக்காதோர்கட்கு , அது புரியாத ஒன்றாகி விழுகின்றது. ஓரளவு புரிந்துகொள்வார்க்கு தெளிவற்ற மயக்க உணர்வாகி விடுகின்றது. இன்னும் பக்குவத்தில் முதிர்ந்து இவ்வுரையை செவிமடுப்பாரில் சிலர் , அளப்பருங் இறைவனின் இக்கருணையைக் கண்டு வியந்தவர்களாக தெய்வ வாரங்களால் தொழுகின்றனர். சிலர் அப்போதனைகளை ஒருவாறு உணர்ந்து இறையாணைகளாக்கி மக்கட்கு ஓர் சமயத்தையும் உருவாக்குகின்றனர். ஒரு சிலர் இதனையும் கடந்து சமயாதீதம் அடைந்து , சிவஞானத்தையே தூய்த்து மகிழ்வர்.
Now it is said these Distant Texts are common to all only because BEING, keeps on presenting these texts deep in the soul of all. But there are differences in how people respond to these inner spiritual discourses. For some they fall off only because they are incomprehensible. There are some who understand only intuitively and end up quite vague and unclear. There are some who understand the essences quite well and begin to worship BEING because of the immense kindness BEING shows in such disclosures. Such people may also end up creating religions where they transform such an understanding into the Words of God that ought to be obeyed by all and so forth. There are others who transcend such religions and enjoy in Deep Silence the Njaanam that BEING continuously discloses through these texts.
இவ்வாறு பல இடங்களில் கூறுகின்றார் நம் திருமூலர.
So will say our Tirumular in many places.
1567
உரையற்று உணர்வற்று உயிர்பரம் அற்று
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்கும் கடந்த
சொரூபத்து இருத்தினான் சொல்லற்றோமே
உரை:
நான் உரையற்ற சுத்த மோனத்தில் வீழ்ந்து அது இதுவெனும் சுட்டுணர்வு அற்று அதனால் ஆன்மா வேறு பரமாகிய இறைவன் வேறு என்ற உணர்வற்று, திரையில்லாத நீர்போல், எவ்வித சலனமும் இல்லாது சிவத்தொடு ஒன்றாகி அவனேத் தானாகி , எல்லை அற்ற சத்து அசத்து சித்து அசித்து என்ற பேதங்களை எல்லாங் கடந்து எனது சொருப்பத்தில் இருத்தினான் இறைவன. அதனால் வந்த இன்பத்தை சொல்ல முடியாது கிடக்கின்றேன்
uraiyaRRu uNarvaRRu uyirparam aRRu
tiraiyaRRa niirpool civamaatal tiirttuk
karaiyaRRa cattaati naankum kadanta
coruupattu iruttinaan collaRRoomee
Meaning:
I was incapable of speech, any differential and referential consciousness as well as any difference between self and BEING. I exhausted being the same as BEING by remaining absolutely calm like the wave-less deep waters. In that I also transcended the fundamental categorical divisions of cat, acat, cit and acit and in state I was given to understand my most authentic essence, understanding which I became dumbfounded,
1584.
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங்
கோணாத போகமுங் கூடாத கூட்டமுங்
நாணாத நாணமும் நாதாந்த போதமுங்
காணாய் என வந்து காட்டினன் நந்தியே
உரை:
இறைவன எனை ஆட்கொண்டு இனி உலகத்தில் எதனையும் காணவேண்டும் என்று நினக்காத கண்ணுடன், எதனையும் இனி கேட்டு தெளிய வேண்டும் என்ற வேட்கையையும் கெடுத்து, யாண்டும் மாறாத போகத்தோடு அவனோடு இரண்டற்று கிடப்பதின் கூட்டமும் இனி வேண்டியதிலை என்றவாறு ஒருமையைத் தந்து. அதுபொழுது எதற்கும் அஞ்சுதல் நாணுதல் என்னும் உணர்வெல்லாம் போக்கி ஓங்கார ஓசை தரும் சிவஞான போதத்தில் அழுத்தி , இவற்றை எல்லாம் கண்டு வீடுபேறு மகிழ்க என்று எனக்கு காட்டினான் காண.
1564.
kaaNaata kaNNudan keeLaata keeLviyuG
kooNaata pookamuG kuudaata kuuddamuG
naaNaata naaNamum naataanta pootamuG
kaaNaay ena vantu kaaddinaan nantiyee
Meaning
BEING came down and showed me many things of deep metaphysical significance. He made me see that eyes that do not wish to see the earthly any more, a mind that does not raise any more questions as there are no more doubts and uncertainties. He also asked me to see the bliss that does not change at all and the condition of not seeking anymore to be with BEING as the soul is already totally with Him. There was no more being ashamed and so forth and where the the understanding shines brilliantly with Njaanam that is taught by Aum, the Naataanta.
(
1585
மோனங்கை வந்தோர்க்கு முத்தியுங் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்து ஊமையா மொழி முற்றுங்காண்
மோனங்கை வந்துஐங் கருமமும் முந்துமே
உரை:
இறைவனோடு இரண்டற்ற ஒருமையில் விழுந்து மேலான மோனத்தில் வீழ்ந்தார்க்கு, மீண்டும் பிறப்பதை அறுப்பதாகிய முத்தி கைகூடும். அதனோடு எண் வகை சித்திகளும் புத்திகளும் அவர்கட்கு உரியதாக வந்து முன் நிற்கும். மேலும் காலக் கடப்பு செய்வதின் உரையாடுதல் என்பது முடியா ஊமைகளாகி மொழித் திறனைக் கடக்கவும் செய்வர். இனி இறைவனொடு இரண்டற்று அவனே தானாக நிற்பதின் இறைவனது பஞ்ச கிருத்தியஙகளும் இவர்கள் கிருத்தியங்களாகத் திகழும்
moonaGkai vantoorkku muttiyuG kaikuudum
monaGkai vantoorkkuc cittiyum munniRkum
moonaGkai vantu uumaiyaa mozi muRRuGkaaN
moonagKai vantu aiG karumamum muntumee
Meaning:
For those who become capable of practicing Deep Silence, even Moksa may be possible. Such individuals may also enjoy all the eight Siddhies, the magical powers. Now such individuals may also transcend temporality and become incapable of speech transcending the very condition of language. Such individuals , in view of being one-with BEING without any fissure may also show the five fold universal praxis in their own behavior.
1646.
ஞானத்தினால் பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்த தனி ஆலயந் தானாம்
மோனத்தன் ஆதலின் முத்தனாஞ் சித்தனாம்
ஏனைத் தவசி இவன் எனலாகுமே!
உரை:
சிவஞானி என்பார் சிவப்தத்தை சிவஞானத்தை நண்ணி வளர்த்து அடைய எண்ணுவர். இத்தகையோர் நல்லவோர் தலத்தில் எழுப்பப்பட்ட தனியோர் சிவாலயம் தானாக இருப்பர். மேலான மோனமே மொழியாகத் திகழ, இத்தகையோர் முத்தி அடைந்து பல சித்திகளை மகிழ்பவரும் ஆகும். மேலும் இவர்களை உண்மையாப தவசிகள் என்றும் கூறலாம்
njaanattinaal pata naNNunj civanjaani
taanattil vaitta tani aalayan taanaam
moonattan aatalin muttanaanj cittanaam
eenait tavaci ivan enalaakumee
Meaning:
The Civanjaani is one who seeks sivahood through seeking the Njaanam. Such an individual is in fact like temple built in a choice location. Since such a person is given over to Deep Silence as the way of being, he can also be said to be the Mukta and Siddha. It can also be said that such a person practices the true kinds penances.
திருமூலர் சுய அனுபவமாகிய இந்தப் பாடல்களின் மொத்தப் பொருளாவது: மொழி கடந்து , சத்தறிவு அசத்தறிவு என்ற விகற்பம் கடந்து பசு என்றும் பதி என்றும் பேதங்கள் விளைவதுங் கடந்து, திரையற்ற கடல்போல எவ்வித சலனமும் இல்லாத அமைதி அடைந்து , அகத்து மாசெல்லாம போக்கி சித்தமலங்கெடுத்து சிவமாக வேண்டும் என்ற வேட்கையும் அதனை அடைதல் மாத்திரையால் தீர்த்து, , எவ்வித வரம்பும் தடையும் இல்லாது, பலவாறு தோன்றிக் கொண்டே இருக்கும் சத்து அசத்டு சித்து அசித்து எனப்படும் பொருள் பாகுபாடுகளையும் கடந்து , மேலான் தற் சொரூபத்டில் இறைவன் எனை இருத்திட, நான் சொல்லிறந்த சுத்த மௌனியானோம் என்றவாறு.
Collectively what Tirumular says as his own experience can be summarized as : BEING placed me in a situation where transcending language and becoming capable of only Deep Silence, I transcended various distinctions like Sat Asat in terms of understanding and Cit and Acit in terms of onject categories. I also transcended the difference between self and BEING and because of which there came to be a tranquility like the waveless sea, absolutely calm with no ripples at all. I also overcame the fundamental desire to become absolutely Pure and Clean and with that enjoy sivahood, in fact by attaining it and enjoying it. Then BEING installed me in the most authentic essence of myself making me absolutely Pure and Clean capable of enjoying it all only in Deep Silence.
நாதாந்த போதத்திற்கு - இத்தகைய தூரநூற் போதத்திற்கும் அப்பாலாய்- காணாது கண்டு கேளா¡து கேட்டு இறைவனைக் கூடாது கூடி யாண்டும் குறையாது வளரும் சிவானந்தத்தை அனுபவித்து சொக்கி மயங்கி மகிழ்ந்திட எனை வந்து காண் என்று இறைவன் அழைத்துக்கொண்டே இருக்கின்றான், இந்த தூரநற்களின் வழியாக என்றும் கூறலாம்.
BWING keeps on calling thஎ souls from deep within saying: Transcend the mantras and the Distant Texts and be one with Me and SEE what has not been seen, ask what has not been asked and fuse with me without really fusing (and losing your identity) There is a metaphysical BLISS that grows continuously and to enjoy it to the full , seek out to see and Me and be with Me. BEING sends out such an invitation to all the souls through such distant texts.
இவ்வாறாக் மேலான மோன நிலை இயல்பாக வந்துற்ற நல்லோர்க்கு வீடுபேறும் உறுதியாகின்றது. இதனால் எல்லா வகை சித்திகளும் கைகூட பல திப்பியம்க்களை புரிய்ம் வல்லமையும் இவர்கட்கு வந்து சேரும். காலங் கடந்த சத்துலகில் ஒடுங்கிட சொல்லிறந்த சிவஞானமே ஞான்மாகிட, அதனால் ஆன்மா இறைவனோடு முற்றிலும் அபின்னமாக உடங்கியைந்து கிடக்க, பஞ்சகிருத்தியங்களின் அநந்நிய அறிவ சித்திக்கும் என்றவாறு. ஆன்மா செய்யும் செயலெல்லாம் இறைவனது ஐந்தொழில்களாகவே இருக்கும் என்றவாறு.
For those who are drawn naturally towards this state of Deep Silence, Moksa also becomes quite certain. This also enables them enjoy many Siddhies that would also enable them to effect something miraculous and so forth. Since they transcend temporality and plunge deep into the Timeless Realm of the Absolute, their understanding remains the Njaanam and which enables them to be one-with BEING without any fissure. This enables them to understand the five fold universal praxis as they are in themselves - non-interpretively. The actions they do also become the Praxis of BEING because of this oneness.
இவ்வாறு தூர நூற்களைக் கடந்து சிவஞானத்தினால் சிவபதம் மகிழும் சிவஞானி, சிவாஞானத்தை வரையாது கதிர்க்கும் தனியோர் பெருஞ் சிவாலயமாகச் சுடர்வன். மோனத்து மொழி வல்லவன் என்பதால், சிவஞானந் தரும் சித்திகளைப் பெற்ற சித்தனாக்வும், முத்தி நிலையுற்ற முத்தனாகவும் திகழ்வன். இவனே மெய் தவசி என, யார் இந்நெறியில் செல்கின்றார்களோ அவர்களே மெய்நெறி வழி உய்பவர்கள் ஆகும்.
Thus these individuals drawn to Civanjaanam by going into the Deep Structure of these distant texts , serve as special temples that radiate endlessly this Njaanam. Because they are capable of the language of Deep Silence, they also enjoy certain Siddhies that the Njaanam affords and because of which they become the Siddhas in addition to becoming the Muktas. Since their way is that which serves as the true penances and so forth, it serves as the True Path for all.
இவ்வாறு மோன நிலையில் தெளிவாகும் சிவஞானம் சாதி மதம் மொழி இனம் போன்ற எல்லா பேதங்களையும் கடந்து அனைவருக்கும் உரித்தாய், தத்தம் பக்குவத்திற்கு ஏற்ப அனைவராலும் பெயர்த்து மொழியாக்கப்படுவதாய், யாண்டும் இறைவனால் போதித்திக் கொண்டே இருத்தப்படும் ஓன்று என்பதால், ஆர்சிந்திப்பார் அனைவருக்கும் பொது என்றாயிற்று
Now in view of the fact that Njaanam dawns only in post linguistic Deep Silence , it remains available to all irrespective of all differences like religion language race and so forth. These Deep Texts remain in the depths of all and where BEING encourages understanding them and transcending them. Thus each person interprets them in his own way and compose many secondary texts. However as long as they are free to move ahead, they all can end up enjoying the Njaanam.
சூத்திரம் 8-3
ஆரணவறி வெல்லாம் அறிந்திடலா குமேயடங்கி
தூரநூ லனைத்துந் துன்ன
மேற் கூறியதையே இன்னும் சற்று விரித்துரைத்தவாறு.
குறைமதியாக இருக்கின்ற மானிட அறிவினை நிறைமதியாக்குந் திறன் உடையது யாதோ அதுவே ஆரணவறிவு என்றது. ஆரணம் என்றால் ‘தெய்வீகமான நிறைவு' என்று பொருள் படும். மெய்யான தவசி புறப்பற்றுக்களை எல்லாம் தொலைத்து சிவஞானப் பற்றே பற்றாகப் பற்றிக்கொண்டு அதனைப் பெறுவான் பொருட்டு, கடப் புரு காண் திறத்தை வளர்த்து தூரநூற்களாக அகத்தே கிடக்கும் அனைத்தையும் அகத்து ஞானயாத்திரை புரிந்து அவ்ற்றைப் பொருந்தி , தகுந்த உத்திகளை பெய்து அறிந்து சிவஞானத்தைப் பொருளாகப் பெற்று உயர, அறிவு நிறைமதியாகி ஆரணப் பேற்றினை நல்கும் என்றவாறு.
Sutra 8-3
aaraNavaRi vellaam aRintidalaa kumeeyadaGki
tuuranuuu lanaittun tunna
This sutra seeks to elaborate further what has been observed above.
By ‘aaraNavaRivu' is meant the understanding that removes the incompleteness and insufficiency of the existing understanding and makes it an integral whole, fully saturated. The word' aaraNam' means a divine saturation. Those who practice the genuine penances and so forth , manage to burn off the useless worldly attachments and come to have only the desire for Njaanam and exists only for attaining and enjoying it. So in order to attain it they develop their capacity for transductive perceptions, access all the Distant Texts deep within their soul, interpret them with appropriate utti-es and attain the Njaanam. As they develop and ascend with such accomplishments their understanding becomes fully saturated seeking nothing beyond itself.
இதனால் பல்வேறு மொழிகளால் இயன்ற மேலான வேதாகம நூற்களையும் அதனைப் போன்ற பிறவற்றையும் ஏணிப்படிகளாகக் கொண்டு ஏறி பிறகு அவற்றின்பால் மேலோங்கி நின்ற பற்றுகளையும் நீங்கி கடந்து செல்லவேண்டும் என்றது. இத்தகைய சிந்தனைப் பற்றுக்களை நீங்காவிடில், சிவஞானத்தில் பல்வேறு மொழிபெயர்ப்புக்களாகவே நிலவும் எல்லா ஞானமறைகளையும் விருப்பு வெறுப்பின்றி கற்று மேம்படும் உளநிலை தோன்றாதாம்.
துன்னல்: பொருந்தி அழுந்தி அதனால் வரும் ஞானதரிசனங்களைப் பெற்று மகிழ்வது.
So taking such scriptures - the different interpretations of the Distant Texts deep within one must use them as ladders and climb up the metaphysical realms, the pyramid and having reached the top then be willing to free oneself from these scriptures also. For otherwise the mind will not be free to explore ALL the scriptures in the world and in various languages in an objective manner.
Tunnal: to enjoin the distant texts and their interpretations, sink deep into them and enjoy the various metaphysical visions that unfold.
Sutra 8-4
எழுதாமறை யென்ப யாதெனின் இலங்கிடு
பழுதிலா தூரப்பனு வல்கள்
உரை:
ஈறிலா உரைகளாக , சிவஞானமே பொருளாக போதித்துக் கொண்டே நிற்கும் இவையே பழுதிலா தூரப் பனுவல்கள். இவையே எழுதாமறை என்பதொழிய , உலகரில் பலர் இதனைப் புரிந்துகொள்ளாது இதனை வடமொழியின் இயன்ற நூற்களின் மேலும் இன்னும் இத்தகைய பிற நூற்களின் மேலும் ஏற்றி அவையே மெய்யான மறை பிறவல்ல என்று மயங்குவர்.
Sutra 8-4
ezutaamaRai yenpa yaatenin ilaGkidu
pazutilaa tuurappanu valkaL
Meaning:
The ,meaning of the expression' ezutaa maRai' is the Distant Texts which remain there in deep space quite indestructible. These Distant Texts which are accessed and interpreted remain always there and where people of the world mistakenly identify their own translations with these Distant Texts. Different worldly scriptures are mistakenly identified with these Distant Texts and claimed to be absolutely authoritative and so forth
எழுதாமறை: எழுத்தினால் இய்னற எவ்வகை மொழியினாலும் இஃது இதுவென்றும் இது இற்று என்றும் கூறமுடியாது, குறிப்பினாலேயே அதுவும் சின்முத்திரை போன்ற மௌனமொழியாலேயே உணர்த்த வல்லதாய் இருக்கும். இதுவே சிவஞானத்தை அகத்தே செறியும்படி செய்யும். இதனையே ஓரெழுத்து ஒருமொழி என்றும் சூக்கும பஞ்சாக்கரம் என்றும் இன்னும் பலவாறும் கூறுவர்.
The descriptive phrase ‘ezutaa maRai' can mean the primordial; Logos Om and its various mantra derivatives like Na-Ma-Si-Vaa-Ya and so forth and which always resists being incorporated into a verbal language. These are the texts which do not generate referential consciousness which comes with temporality. They draw the individuals into Deep Silence and instruct them on Njaanam during such moments.
திருமூலரும் கீழ்கண்டவாறு கூறுவர்.
Tirumular also says so
935
தானே எழுகுணந் தண்சுடராய் நிற்கும்
தானே எழுகுணம் வேதமுமாய் நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவ னாமே
taanee ezukuNan taNcudaraay niRkum
taanee ezukuNam veetamumaay niRkum
taanee ezukuNam aavatum ootidil
taanee ezunta maRaiva naamee
940
மறைய வனாக மதித்த பிறவி
மறைய வனாக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத்து அது வாகுமே
maRaita vanaaka matitta piRavi
maRaiya vanaaka maittidak kaaNpar
maRaitavan anjcezuttu uLniRkap peRRa
maRaivan anjcezuttu atu vaakumee
இவற்றின் பொருள் :
உலகத்தில் வெளிப்பட்டு நிற்கும் எல்லா வகை குணங்களையும் , அருள் மேம்பாட்டை கொண்டு வர உழைகும் தண்மதியாகவும் , இத்தகைய எழுதா மறையாக சிவஞானங் கொளுத்தி சிவகுணம்ஹ்களை வெளிபடுத்தும் வேதமுமாய் நின்று அதன்வழி மறையவனாக நிறப்து இறைவனேயாம் என்றது.
ஊனக் கண்ணிற்கு வெளிப்படாது ஞானக் கண்ணிற்கே வெளிப்படும் மறையவன் இறைவன் என்று மதித்திடு உயிர்கட்கே தரிசனாமாகும் இறைவன் சூக்கும பஞ்சாக்கரத்திலிருந்தும் இன்னும் தூரமாய் உள்நின்று இந்த பஞ்சாக்கரங்களை செலுத்துவதோடு எழுதாமறையை உணர்த்தி சிவஞானம் போதிப்பன் என்பதுமாம்
The meaning of these verses:
BEING becomes the cool Moon in order to bring forth all the different guNas in the world as well as the dispositions where LOVE dominates. He also stands as the Vedas that do not allow being translated into languages keeps instructing the creatures on Njaanam . Because of this BEING stands as the Concealed Presence in the understanding.
Only for those souls who understand that BEING remains concealed for the fleshy eyes but quite visible for Metaphysical Eyes , discloses Himself in various forms. In addition to managing all with the subltle mantra syllables five, He also remains quite distant even from such mantras, where He instructs on Njaanam through the Real Vedas.
அடுத்து எழுதாமறை என்பது உண்மையில் தூர நூலென, அது யாதுமற்ற சுத்தவெளியில், சிவப்பிர்காச்த்தில் விளங்குவதாயினும் சிவஞானிகட்பால் எஞ்சி இருக்கின்ற மலத்தையும் போக்க சூக்கும பஞ்ச கிரித்தியஙக்ள இயற்றப்படுவதால், அது சூனிய பெருவெளியில் தானே எழுவதல்ல, அங்கும் இருக்கும் இறைவனால் செளிபடுத்தப்படுவது என்று கீழ்வரும் சூத்திரத்தால் உணர்த்துகின்றார் ஆசிரியர்.
Next the author of this text shows that it is only BEING who brings forth these Distant Texts that are in fact the ezutaamaRai, the True Vedas that do not allow linguistic translations. Even though such texts subsist as always there in the Empty Metaphysical Space , but because even here there are subtle five fold processes og BEING by which He dispels the Malam still lurking in the soul of the Civanjaananies, there is BEING here and it is He who brings forth these Fistant Texts, they do not come into being there on their own. The follwing sutra explains this truth
சூத்திரன் 8.5
எழுதாமறை யினெழிற் கிழவன் எல்லாமறிந்த
பழுதிலான் பரன்பரம் குரு
இதன் பொருள்:
ஈறில் உரை எழுதாமறை என்றெல்லாம் நவிலப்படுவதும் மகாசங்கார காலத்தில் ஒடுக்கப்பட்டு முடக்கப்படும் என்பதால், அதனைச் செய்வதும் மகாசங்கார காரணனாகிய முதலே, இந்த எழுதாமறையின் ஆதி என்றவாறு.
கிழவன்: அதனை தனதாக கிழமை பூண்டு நிற்பவன்
‘பழுதிலான்' என்பது அனைத்தையும் மகாசங்காரகாலத்து ஒடுக்கும் இறைவன , தன்னையும் அதனோடு தானே ஒடுக்கினாலும், அழியாது ஒன்றாக நிற்பன். இல்லையேல் உலகென்பது தோன்றாது ஒழியும் என்பதால், பழுதிலான் என்றது.
சங்கார காரணனாக அனைத்தையும் கடந்து நிற்பதால் பரன் என்றது
இந்த எழுதாமறையின் வழி சிவஞானம் போதிக்கபடுவதால், , அதுவே வீடுபேற்றிற்கு ஏதுவாக நிற்பதால் , அவனையே பரமகுரு என்றது.
Sitra 8.5
ezutaamaRai yineziR kizavan ellaamaRinta
pazutilaan paranparama kuru
Meaning:
The Distant Texts, the true Vedam said to be indestructible , non-writable and so forth, gets also withdrawn during the time of Total World Withdrawal, the Maka CaGkaram, Therefore the author has to be BEING who in fact is the Causal Agent of this Total Dissolution. Now here even though BEING may withdraw Himself so that there is only the primeval Darkneess, however He remains indestructible for the world continues as before, something that cannot the case unless BEING is still there though concealed
Kizavan: the owner, here BEING stands as its owner as He is the author of it all,
Now BEING is said to be Pazutilaam (indestructible) only because BEING who withdraws all may also withdraw himself, but He must be there in some form for the world to be reissued.
He is said to Paran, the Absolutely Transcendent only because as the One who dissolves all, He stands absolutely above all.
Now He is said to be the Parama Guru, the Final and Supreme Guru only because through the True Vedas , BEING instructs all on Njaanam that which confers Moksa.
இவ்வாறே கூறுவர் திருமூலரும்
2020
சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்காட்டி
சித்தும் அசித்துஞ் சிவப்ரத்தே சேர்த்து
சுத்தம் அசுத்தம் அறச் சுகமான சொல்
அத்தன் அருட்குருவான் அவன் கூறலே
இதன் பொருள்
பொருட்களை சத்தென்றும் அசத்தென்றும் சதசத்தென்றும் பிரித்தறிந்து ஆன்மாக்கள் அவற்றைக் காணுமாறும் அவற்றில் சத்தினையே பற்றிக் கொள்ள செய்கின்றவனும், சித்தும் அசித்துமாகிய அனைத்தையும் சிவபரமால்கி திருசிற்றம்பலத்தே ஒடுக்கி சேர்க்கின்றவனும், சுத்தமென்று அசுதமென்று பேதித்து காணும் போக்கினைக் கடக்கச் செய்து சிவஞானம் அருளி ஆன்மாக்கள் அனுபவித்து மகிழ உதவும் அந்தச் சொல்லினை -எழுதா மறையினை - சிவ பரம்பொருளே கூறாது கூறுவதால் , இறைவனே அதன் அருட்குருவாம் என்றது.
So will assert also Tirumular
2020
sattum asattunj satasattun taan kaaddi
sittum asittumk sivaparattee ceerttu
auttam asuttam aRac cukamaana col
attan aeudkuruvaana avan kuuRalee
Meaning:
It is BEING who leads the souls to classify the various objects as Sattu (the absolutely there) Asattu (only relatively there) Sattasattu (those which understand both the Sat and Asat) and among these chose only the Sattu It is also BEING who leads the souls to understand all the objects as Sit( conscious) and Asit( brutish) and which distinction is led to disappear in the Metaphysical Space of origin of all. There is also the ethical differentiations of things into Pure and Impure and where BEING leads through words to transcend above such ethiical judgments. So on account of all these it is BEING who is really the Loving Guru who really instructs the souls on Njaanam through these Distant Texts.
2
065
அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க
இசைத்திடு பாசப்பற்று ஈங்கு அறுமாறே
அசைத்து இருமாயை அணுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்ற அறிவிப்போன் இறையே
உரை:
என்றும் அழியா சத்தையும் உண்மைபோல் தோன்றி பொய்யாகி விழும் அசத்தையும் அறியும் சதசத்தாகிய ஆன்மா, பாசங்களால் கட்டுண்டு கிடக்க அவை அற்று நீங்கவேதான், இறைவன் சுத்த மாயை அசுத்தமாயை எனும் இருவகை மாயைகளையும் அசைத்து ஞானம் புகட்டி சுத்தமாக்குவானும் அதனை உள்நின்று ஆன்மாக்களுக்கு மந்திரமொழியில் அறிவிப்பானாகவும் பரசிவனே யாகும்.
இந்த தூரத்து மந்திரமொழியே எழுதாமறை என்றும் அதன் வழியேதான் இறைவன் எல்லா ஆன்மாக்களுக்கும் சிவஞானத்தை போததித்துகொண்டே இருக்கின்றான் என்பதுமாம்.
2065
Asattodu sattum asatsattu niiGka
Isaittidu paasappaRRu iiGku aRumaaRee
Asaittu irumaatai aNuttaanum aaGkee
Isaittaanum onRa aRivippoon iRaiyee
Meaning:
The Anma is that conscious entity that understandச் both the absolutistic illuminations as well those that are only relativistic. This is so only because the souls are bound by the various kinds of pasas, the fetters. BEING plays both the Cutta Maayai and Asutta Maayai and through various kinds of games informs the souls and by illuminating in various ways, dispels the ignorance and through that frees them from both kinds of understanding i.e the Sat and Asat. BEING also informs the souls of his various kinds of pedagogic plays through the Mantra Language.
Comments:
Thus this very distant Mantra language the author of which is BEING Himself is the true Vedas, the language that cannot be spoken or written and hence the true Ezutaa MaRai, the mystic TEXT that cannot be written down or even spoken
சிவஞான கற்பம் எட்டாம் தந்திரம் முற்றும்