சில்லி கோபி - கோபி மஞ்சூரியன்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக


பவள சங்கரி


தேவையான பொருள்கள்

Cf2.jpg


காலிஃப்ளவர் – மீடியம் (350 கிராம்)

பெரிய வெங்காயம் – 250 கிராம்.

தக்காளி – 150 கிராம்

குடை மிளகாய் - 1 சிறியது

சில்லி சாஸ் – 1 ஸ்பூன்

சோயா சாஸ் – 1 1/2 ஸ்பூன்

அஜினா மோட்டோ – சிறிதளவு

முட்டை - 1 (தேவையென்றால்)

இஞ்சி , பூண்டு விழுது - 1ஸ்பூன்

எண்ணை – 100 கிராம்.

ரெட் கலர் – 1 துளி

மைதா – 10 கிராம்

உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகாய் – தேவையானால்


செய்முறை:


1. காலிஃப்ளவரை சுத்தம் செய்து ஒவ்வொரு பூவாக பிரித்து எடுத்து தண்ணீர் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளவும்.

2. முட்டையை அடித்து அதில் மைதா, அஜினா மோட்டோ, உப்பு, சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள்வும்.

3. இஞ்சி பூண்டு கலவையுடன் மைதா கலவையையும் காலிஃப்ளவர் பூவையும் சேர்த்து பிரட்டி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

4. வாணலியில் எண்ணை வைத்து பொறித்து எடுக்கவும்.

இது சில்லி கோபி.

சிறிது பெரிய வெங்காயத்தை நேர்வாக்கில் அரிந்து எடுத்துக் கொண்டு, மீதி இருக்கும் வெங்காயத்தையும் தக்காளியையும் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். சிறிது எண்ணையை வாணலியில் ஊற்றி சூடான பின் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை அதில் போட்டு நன்றாக சிவக்கும் வரை வதக்கவும்.

பின்னர் அதனுடன் குடை மிளகாய் போட்டு வதக்கி, பொறித்த காலிஃப்ளவர் அரைத்த விழுது, அனைத்தையும் வாணலில் போட்டு நன்றாக வேக வைக்கவும். தேவையானால் சிறிது தண்ணீரும் காரத்திற்கு பச்சை மிளகாயை நேர்வாக்கில் அரிந்து சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவிற்கு ஸாஸ், உப்பு சேர்த்து நன்றாக வெந்தபின் இளம் சூட்டோடு எடுத்து பரிமாறலாம். இறுதியாக வெங்காயத்தாள் அல்லது கொத்தமல்லி சேர்க்கலாம். இதுவே கோபி மஞ்சூரியன்








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:32, 26 ஆகஸ்ட் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 26 ஆகஸ்ட் 2012, 15:11 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,726 முறைகள் அணுகப்பட்டது.