சித்தர் வழியில் சுரைக்காய்ச் சித்தர் 24 Aமரபு விக்கி இருந்துகண்களில் ஆக்ரோஷம் தெறிக்க சித்தர் அவனிடம் “ ஏண்டா.., கடவுளோட விக்ரகம் எல்லோருக்கும் தெய்வீகமாகத் தெரிஞ்சா உனக்கு பணமாகத் தெரியுதா?” “ஐயா.., நான் தெரியாமப் பண்ணிட்டேன். ஐயா, என்னை மன்னிச்சிடுங்கய்யா …” அவன் பெருங்குரலோடுகதற… அவன் மனைவி புரியாமல் அவனையும் சித்தரையும் வியப்பாய்ப் பார்த்தாள். “சொல்லு.. அந்த விக்கிரத்தை ஏன் அழிச்சே?” சித்தர் மேலும் கோபமான குரலில் கேட்க அவன் அழுகையோடு சொன்னான். “ ஐயா, நானும் என் நண்பனும் திருப்பதிக்கு போய்விட்டு வரும் போது புத்தூர் காட்டுலஒரு சாமி விக்ரகம்கிடைச்சதுங்க. என் நண்பன் அதை புத்தூர் சிவன் கோயில்ல கொடுத்திடலாம்னு சொன்னான். நாந்தாங்க அது ஐம்பொன் சிலை மாதிரி இருக்குன்னு அப்படியே விற்கப்போன மாட்டிக்குவோம்னு உருக்கி விற்கலாம்னு சொன்னேன். ஒருவழியா அவனும் சம்மதிச்சான். ஒருநாள் ராத்திரி நானும் அவனும் எங்கள் தோட்டத்தில பெரிசா தீ மூட்டி அந்த விக்கிரத்தை உருக்கலாம்னு போட்டோமுங்க. அப்போ குபீர்னு நெருப்பு வந்து எங்க மூஞ்சிலே அடிச்சிங்க.அவ்வளவுதான் நாங்கள் மயங்கி சரிஞ்சுட்டோம். மயக்கம் தெளிஞ்சு எழுந்து பார்த்தப்போ, தீ முழுசும் எரிஞ்சுட்டு இருந்தது. ஆனால் அந்த விக்ரகம் உருகினதுக்கு எந்த அடையாளமும் இல்லாம வெறும் கரித்துண்டுகள் மட்டும் இருந்தது. தங்கம்,வெள்ளின்னு எந்தப் பொருளும் இல்ல. கடவுள் அந்த அந்த சிலையை மாயமா மறைஞ்சிடுச்சிங்க ஐயா…, நான் சாமி விக்ரகத்தை உருக்கிப் பணம் சம்பாதிக்கணும்னு நினைச்ச பாவத்துக்குத் தான் கடவுள் உடம்பு முழுக்க எனக்கு ஆறாத புண்களாக் கொடுத்திட்டார்…” அவன் கண்கலங்க இப்போது சற்று சாந்தமான நிலையிலிருந்த சித்தர் மெல்ல புன்னகைத்தாவாறு ‘அங்கே பார் “ என்று கை நீட்டிக் காட்ட எதிரே…. அவன் உருக்க நினைத்த விக்ரகம் மலர் மாலைகள் சூட்டப்பட்டு தெய்வீகமாகக் காட்சியளித்தது. தடாலென அந்த விக்ரகத்திற்கு முன்பாக மண்டியிட்டு தன்னை மன்னித்துக் காப்பாற்றுபடி வேண்டினான். நடப்பதெல்லாம் நிஜமா? என்பது போல் அவன் மனைவி வியப்போடு பார்த்துக் கொண்டிருக்க, சித்தர் அவன் தோள்களைப் பற்றி எழுப்பிவிட்டுச் சொன்னார். “ நீ செய்த தவறை உணர்ந்து விட்டதால் மன்னிக்கப்பட்டாய் இப்போது உன் வீட்டுக்குப் போ…. நான் சொன்னது போல் தொடர்ந்து எட்டு நாட்கள் மூலிகைக் களிம்பை தடவி வா, உன் உடல் முழுவதும் குணமாகும்" என்று சொல்ல நம்பிக்கையோடு விடை பெற்றார்கள்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு முகம், கை, கால்களிலிருந்த புண்கள் முழுவதும் மறைந்து போயிருக்க,புன்னகை முகமாய் கணவனும், மனைவியும் சித்தரிடம் வந்து ஆசி வாங்கிக் கொண்டு புறப்பட்டார்கள். அப்போது எதிரே மிகவும் மெலிந்து, கறுத்து, எலும்புகள் புடைத்த நிலையில் ஒருவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவன் அதிர்ச்சியடைந்தான். அவன்தான் இவனோடு விக்ரகத்தை உருக்க முயன்ற நண்பன், ‘என்ன பார்க்கிற? உன் நண்பன் தான் நீ செஞ்ச தப்புக்கு மன்னிப்புக் கேட்டு அழுதே, ஈசன் மன்னிச்சிட்டாரு. அவரு இப்பதான் நான் பாத்துக்கறேன். நீ புறப்படு’’ என்று சித்தர் குரல் கொடுக்க, அவர்கள் இறுக்கமான ம்ன நிலையோடு நகர்ந்தார்கள்.சித்தர், மிகவும் பலவீனமாக முனகிக் கொண்டிருந்தவனிடம் நெருங்கி, என்ன…. இப்பதான் நீ செஞ்சது தப்புன்னு புரியுதா?" என்று கேட்டார்.
‘’ஆமாம் ஐயா, என்னை மன்னிச்சிடுங்கய்யா…’’ அவன் கைகளை உயர்த்தக்கூட வலுவிழந்த நிலையில் கண் கலங்கினான் அவனோடு வந்திருந்த அவன் தம்பியைப் பார்த்து சித்தர் கேட்டார். ‘’எத்தனை நாட்களாக இவர் இப்படி இருக்கிறார்?’’ மூன்று மாதங்களாக ஐயா….’’‘’ இவருக்கு ஏன் இப்படி ஆயிற்று ? ‘’ அவன் சொல்லத் தயங்க, சித்தரே நடந்த விஷயத்தைச் சொன்னார். நேரில் பார்த்தது போல் சித்தர் சொல்ல, பலவீனமானவன் தடுமாறியபடி எழுந்து சித்தரின் கால்களில் விழுந்தான்.
’’ என்னை மன்னிச்சிடுங்கய்யா, சாமி விக்ரகத்தைத் தீயிட்டு உருக்கணும்னு மகாபாவியா திட்டம் போட்டோம்.அதுக்குத் தண்டனை கிடைச்சிடுச்சி. என் உடலில் ஒவ்வொரு செல்லும் இறந்து போயிட்ட மாதிரி வலி உயிரை எடுக்குது. நீங்கதான் ஐயா என்னைக் காப்பாத்தணும்..’ அவன் கண்ணீரோடு கதற…. மெளனமாக சித்தர் எதிரேயிருக்கும் விக்ரகத்தை ஒரு நொடி சலனமில்லாமல் பார்த்தார். பிறகு புன்னகை பூத்தவராய், தனது காலில் விழுந்து கிடந்தவனின் தோள்களைப் பற்றித் தூக்கி நிறுத்தி விட்டுச் சொன்னார்.
கடவுள் உன்னை மன்னிச்சிட்டாரு.போ இனி எந்தப் பிரச்சனையும் இருக்காது. நீ வேகமாக ஓடிப்போ..அஞ்சு நிமிஷத்துல இந்த மலையிலிருந்து இறங்கி மலை அடிவாரத்திற்கு போயிடணும்."
சித்தர் சொல்ல அவன் கண்ணீரோடு கேட்டான். “ எப்படிய்யா என்னால ஓட முடியும்? நானே நிற்கக்கூட வலுவில்லா பலவீனத்தோட இருக்கேனே?’’ அவன் கேட்டு முடிப்பதற்குள் தன்னருகே இருந்த சுரைக்காய்க் குடுவையை எடுத்துக்கொடுத்த சித்தர், அதிலிருந்து துளசி தீர்த்தத்தைச் சிறிது அருந்திவிட்டு, மீதமிருந்த தீர்த்தம் சிறிதளவு எடுத்துக் கொடுத்து மூன்று நாட்களுக்குக் குடி, சீக்கிரம் இறங்கு " என்று சொல்ல அவன் சுரைக்காய்க் குடுவையிலிருந்த துளசி தீர்த்ததை சிறிதளவு அருந்தினான். அடுத்த நொடி அவனுடைய ஒவ்வொரு செல்களுக்குள்ளும் புத்துணர்ச்சி கிடைத்தது போல உணர்வு உண்டாக, அவனை அறியாமல்சரசரவென நடக்க ஆரம்பித்தான்.வரும்போது கைத் தாங்கலாகப் பிடித்து அழைத்து வந்த தம்பி “ இப்போது அண்ணன் இவ்வளவு ஆரோக்கியமாக நடந்து போகிறாரே !’’ என்று வியப்பாய்ப் பார்த்தபடி, சித்தரை நோக்கி நன்றியோடு வணங்கி நகர்ந்தான்.
சித்தர் ஏதோ உணர்ந்தவராக, சட்டென்று நகர்ந்து அந்த விக்ரகத்தின் முன்பாக அமர்ந்து தியானிக்க ஆரம்பித்தார். அடுத்து ஒரு சில நிமிடங்களில் அவர் கண் திறந்தபோது அவருக்கு முன்பாக இருந்த விக்ரகம் மறைந்து போய் அங்கே ஒரு சுரைக்காய் குடுவை இருந்தது. சுரைக்காய்ச் சித்தரை " இளைஞனின் புண்கள் குணமாகக் கொடுத்த மூலிகை களிம்பைச் சாப்பாட்டு அறைக்கு எடுத்துச் செல்லக்கூடாதென்று ஏன் சொன்னீர்கள் .. குருவே!" என்று சிஷ்யன் கேட்டான். "நான் கொடுத்த முலிகைக் களிம்பு அமானுஷ்ய சக்தி வாய்ந்தது. அந்த இளைஞன் சாமி விக்ரத்தை தீயிட்டுக் கொளுத்தமுயற்சித்தவன் என்பதால் தீயுள்ள சாப்பாட்டு அறைக்கு அந்த களிம்பை எடுத்துச் சென்றால், அது பயனற்றதாகி விடும். அதனால்தான் அந்தக் களிம்பைச் சாப்பாட்டு அறைக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்றேன். அதோடு அந்த இளைஞனைத் தன்னிடத்துக்கு வரவழைக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலும் வீட்டில் அதிகம் பயன்படுத்துகிற பகுதிக்குப் போகக்கூடாது என்ற நிபந்தனையைச் சொன்னேன், என்றார். இவைகள் உண்மையா என்றால், இவர் சமீப காலத்தில் வாழ்ந்த சித்தர் என்பதால், இப்போதும் அவர் வாழ்ந்த பகுதி மக்கள் அத்தனையும் உண்மை என்கிறார்கள். புத்தூரை அடுத்துள்ள சிவக்கோனை நீர் வீழ்ச்சிப் பகுதிக்குச் சென்றால் அங்கே இருக்கிற சுரைக்காய்ச் சித்தரின் ஆஸ்ரமம் அவரது அமானுஷ்ய சக்தியால் நிகழ்ந்தது என்ற உண்மையை உணர்த்தும் ............................................. [ நன்றி - நூல் குறிப்பு உதவி :- இறவா சித்தர்கள், சித்தமெல்லாம் சிவம்]
எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்
--Geetha Sambasivam 15:33, 26 மார்ச் 2011 (UTC) |

