சித்தர் வழியில் சட்டை முனி 13

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சட்டைமுனி எனும் இந்த சித்தர் சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்தவர்.சேணிய வகுப்பைச்சார்ந்தவர்.தாய்,ஆலய விழாக்களில் நடனமாடுபவர். தந்தை இசைக்கருவிகள் வாசிப்பவர். அந்த நாட்டை விட்டுத் தமிழகம் வந்து விவசாயம் பார்த்து வந்தனர். வானம் பொய்த்தக் காரணத்தால் விவசாயம் செய்துபிழைக்க வழியில்லாது போய்விட்டது. மேலும் பெற்றோருக்கு வயதாகிவிட்ட காரணத்தால் விவசாயக்கூலி வேலை பார்த்து வந்தார். பட்டினியால் வாடும் பெற்றோருக்கு உணவளிக்கவே தமிழகக் கோயில்களின்வாசல்களில் தட்டை ஏந்தி யாசம் பெற்றுத் தமது தாய் தந்தையரைக் காப்பாற்றி வந்தார்.ஒருநாள் வழக்கம்போல கோயிலின் முன் நின்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுதுவட நாட்டிலிருந்து சங்கு பூண்ட ஒரு முனிவரைக் கண்டார். அவரிடம் தன் குறைகளை எடுத்து கூறி கண்ணீர்விட்டார். முனிவர். ”யாவும் விதியின் வழித்தான் செல்லும். தாய், தந்தையரை காப்பாற்றும் பொருட்டுநீ செய்யும் செயல் மிகப்பெரியது, புண்ணியமான செயலாகும். விரைவில் உனது நிலையும், காலமும் மாறும்.சிவன்பால் சிந்தனையை நிறுத்து. கடமையைச் செய்.” என்றார்.


சட்டைமுனி மன மகிழ்ச்சிக் கொண்டார். முனிவர் கூறியது போல் மழை நல்லபடி பெய்தது. விளை நிலங்களில் நல்ல விளைச்சல் விளைந்தது. அயராத உழைப்பால் சட்டைமுனியின் வாழ்வும் மலர்ந்தது. இறைவனைஆலயம் சென்று தினம் வணங்கினார். பிச்சைக்காரகளுக்கு தன்னால் இயன்ற அளவு உதவினார். சட்டை முனிக்கு திருமணமும் நடைப்பெற்றது. இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் குடும்பம்நடத்தினார். தினம் கோயில் சென்று சிவனை வழிபடத்  தவறவில்லை. ஒருநாள் இறைவனை வணங்கிவிட்டுவெற்று உடம்போடு வெளியே வந்த சட்டை முனி தன் சட்டையை அணிய முற்பட்டார். வெளியிலிருந்துஒரு குரல் வந்தது. ‘ஏன்னப்பா உடுத்துவதில் உறுதியாய் இருக்கிறாய் போலிருகிறது. உதறிட எண்ணமில்லையா? ‘


சட்டைமுனி திடுக்கிட்டு திரும்பினார். எதிரே சங்கு பூண்ட ஒரு முனிவர் நிற்பதைக் கண்டார். அவர் காலடியில்வீழ்ந்து, ‘சாமி வழிகாட்டுங்கள்’ என்றார். ”உதற ஆயத்தமாக இருக்கிறாயா?” என்றார். ஆம்.. சாமி என்றுதாம் அணிந்திருந்த சட்டையை உதறினார். சட்டை முனியே! வாரும் எம்மோடு என்று அழைத்துச் சென்றார்.[ இவரை ‘கயிலாயச் சட்டைமுனி நாயனார்’ என்றும் எப்போதும் கம்பளி மேலாடையை அணிந்திருப்பதால் கம்பளிச் சட்டைமுனி என்றும் அழைக்கப்படுகிறார்..] சங்கு முனிவரின் கையைப் பற்றிக்கொள்ள இருவரும் கனக மார்க்கமாக ஆகாயத்தில் பறந்தனர். இந்தச் செயலைக் கண்டு சட்டைமுனி வியப்படைந்தார். இது குறித்து வினவ ‘இதில் ஒன்றும் வியப்பில்லை.இரசமணியின் சக்தியால் இவைகள் சாத்தியமாகும். உனக்கோ இது போகப்போக விளங்கும்” என்றார்.


அம்முனிவரின் உபதேசங்களைக் கேட்டு அவருடனேயே சுற்றி வந்தார், இறுதியில் போகரைச் சந்தித்துசித்தர்களின் வழியில் தம் ஞானப் பயணத்தைத் தொடர்ந்தார். போகருடன் இருந்தபோது கொங்கணச் சித்தர்,கருவூரார் போன்ற சித்தர் பெருமக்களின் இனிய தொடர்பு ஏற்பட்டது. அகத்தியரிடம் சீடராகச் சேர்ந்து, ஞானநிலையினை அடைந்தார். இவரின் விடாமுயற்சி, ஞானத்தின் உயர்நிலையை எட்டினார். இவரின் தவத்தால்கயிலாயத்தில் சிவபெருமானை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார்..ரோமசர் போன்ற சித்தர்களின் நட்பும், ஆதரவும் பெற்றுச் சிறந்து விளங்கினார்சட்டைமுனி ஆயிரத்து இருநூறு, திரிகாண்டம், சரக்கு வைப்பு, நவரத்தின் வைப்பு, நிகண்டு, வாத காவியம்,தீட்சை, ஞான விளக்கம் என பதினான்கு நூல்களையும் இயற்றியுள்ளார்.


” கயிலாய பரம்பரையில் வந்த பேர்க்குக்

கடைப்பிள்ளை ஞானத்தைப் பாடுவேனே..“


என்று இவர் பாடுவதால் கயிலாயத்தில் வாழ்ந்தவர் என உறுதிப்படுத்தியுள்ளார். அதனால் இவர்இயற்றிய பாடல்கள் மானிட உலகிற்குச் கிடைத்த மாபெரும் சொத்தாகும். இவர் இயற்றிய ஞானப் பாடல்களாகும்.


ஆமப்பா ஆசைவிடக் கருவைச் சொல்வேன்

அறிந்து கொண்டே அறிவாலே நின்று பாரு;

சேமப்பா திரோதாயி யாரென் றக்கால்

செகமெலாம் பெண்ணான வுருத்தானப்பா!

ஓமப்பா பொன்மண்வா சணைவி னாசை

ஒற்றி நின்ற விந்திரிய மயக்கத் தாசை

நாமப்பா வென்று சொன்ன ஆண்மையாசை

நல்வினைக்குத் தீவினைக்கும் வித்து மாச்சே.


[ இவ்வுலகை எல்லாம் அடக்கி ஆளும் “திரோதாயி’’ எனும் மாபெரும் சக்தி பெண் சக்தியாகும்.இவ்வுலகப் பொருள்களின் மேல் கொள்ளும் ஆசைதான் துன்பங்களுக்கு மூலகாரணம்.இதனை நன்கு அறிந்துக்கொள்ளவேண்டும். நாம் கொள்ளும் ஆசை, ஐம்புலன்கள தம் வழியேசெயல்படும்போது நன்வினைக்கும் தீவினைக்கும் வித்தாக அமைகிறது. ]


சட்டைமுனி ஒருநாள் இரவு திருவரங்கம் கோயில் கோபுரத்தை தரிசித்து “அரங்கா….. அரங்கா…”என்று குரல் கொடுக்க, வாசல் திறந்தது. கோயிலுக்குள் சென்று இறைவனை மனமுருகி வேண்டினார்.கோயில் வாயிற் திறந்திருப்பதைக் கவனித்த காவலர்கள் சட்டைமுனியைக் கோயில் நிர்வாகத்தினரிடம்ஒப்படைத்தனர். நிர்வாகிகள் அவரை அரசனிடம் அழைத்துச் சென்றனர். மன்னர் விசாரணையில் நடந்த விபரத்தினைக் கூற மன்னன் இந்த கூற்றை நம்பவில்லை.இது உண்மையா என அறிய சட்டைமுனியை மீண்டும் கோயில் வாசலில் நிறுத்தி…“எங்கே குரல் கொடு மணி அடிக்கிறதா… வாயிற் கதவு திறக்கிறதா என்று பார்ப்போம்.. என்றனர்.சட்டைமுனி மீண்டும் “அரங்கா……, அரங்கா…” என்று மூன்று முறை குரல் கொடுக்க வாயிற் கதவு தானேதிறந்து மணியும் ஒலித்தது. மன்னரும் மக்களும் அவரின் மகத்துவத்தை உணர்ந்து வணங்கி நின்றனர்.மன்னன் தான் தவறு செய்த உணர்ந்து அவரைத் தம்மோடு தங்கியிருக்க வேண்டினார். சட்டைமுனியும்திருவரங்கத்திலேயே தங்கி இறைவனுடன் கலந்தார்.


மயங்குவான் பொண்டேப் புரட்டுப் பேசி

மகத்தான ஞானமெல்லாம் வந்ததென்பான்

தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்;

சாதகமா யோகத்திற் சார்ந்தே என்பான்;

தியங்குவான் நோய்வரிற்பூ ரணமே என்பான்

செகசால் திரோதாயி சிரிப்பான் பார்த்து;

முயங்குவான் சமாதிவிட்டே னையோ வென்பான்

மூடமொற்ற ஞான்மெல்லா முலகிற் பாரே.


[ மனிதன் பொன்னையும், பொருளையும் தேடப் பொய் பேசுகிறான்.ஞானம் (மெய்யறிவு) எதுவும் பெறாமலேயே மகத்தான ஞானம்

தாம் பெற்று விட்டதாக வீண் ஜம்பம் செய்வான். யோகத்தில்என்னை ஈடுபடுத்தி கொண்டு விட்டேன் என மக்களை மயக்குவான் தனக்கு நோயோ, வேறு எந்த துயரங்களோ வருமாயின் இறைவா !எனக்கா இந்த சோதனை என்பான். செலவந்தனாக இருந்த போது இறைவனை நினையான். இதனை கண்டு மாயை [திரோதாயி]சிரிக்கிறாள் ]


பொங்குகின்ற காமமென்ன? சிவத்தின் கூறு;

பொல்லாத ஆசையென்ன? மாலின் கூறு;

மருவியந்த மூன்றாலு முலகம் பாழாய்த்

தங்கின்ற யோகம் போய் ஞானம் பாழாய்ச்

சமாதியென்ன மிந்திரியச் சார மூடித்

தொங்குகின்ற மோட்சனத்தின் தரைபோ லாகத்

சுனியமாய் ஞானமெல்லாம் தோற்றுமாறே.


[ உடலில் தோன்றுகிற ஆசையால் மனம் சுகங்களில் அலைப்பட்டுவாழ்வு வீணாகிறது. இறுதியில் வாழ்க்கை சூனியமாகிறது. அதன்பின்தான் மனிதனுக்கு ஞானமும், அறிவும் தோன்றுகிறது.இதனைத்தான் கண்ணதாசன் “ கெட்ட பின்பு ஞானி “ என்றார்.


எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்


--Geetha Sambasivam 09:23, 11 மார்ச் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 11 மார்ச் 2011, 09:36 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,077 முறைகள் அணுகப்பட்டது.