சாரதாதேவியார் - கடவுள் நமக்கு உறவினர்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


சாரதாதேவியார் - கடவுள் நமக்கு உறவினர்

                                                                                 
Tblanmegamideanews 39976137877.jpg


வாழ்க்கையில் ஆபத்துக்கள் வராது என்பது உண்மையல்ல. துன்பங்கள் எப்போதும் தொடரத்தான் செய்யும். ஆனால் அவை நிலைத்து நிற்காது. பாலத்திற்கு அடியில் என்றும் ஓடிக்கொண்டிருக்கும் நீரைப்போல அவையும் நிற்காது போய் விடுவதைக் காண்பாய்.
அஞ்சவேண்டாம்! மனிதப் பிறவி துன்பங்கள் நிறைந்தது. எனவே எதையும் தாங்கிக் கொள்வதே சிறந்தது. இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே துன்பங்களைப் பொறுமையாக சகித்துக் கொள்.


எவருமே இறைவனாக இருந்தாலும் மனித வடிவில் வரும்போது மனம், உடல் இவைதரும் துன்பங்களை ஏற்றே ஆக வேண்டும்


பொறுமை தான் சிறந்த பண்பு


  • உண்மை என்பதற்காக முரட்டுத்தனமாக சொல்வதில் பயனில்லை. மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொன்னால் தான் சொல்பவருக்கும் மதிப்பு, உண்மைக்கும் மதிப்பு என்பதை உணருங்கள்.
  • ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய குணங்களில் பொறுமை மிக முக்கியமானது. பொறுமையை விடச் சிறந்த பண்பு வேறு இல்லை.
  • மனதிற்கு அமைதி வேண்டும் என்று எண்ணுபவர்கள் முதலில் பின்பற்றவேண்டிய அடிப்படை குணம் பிறர் குற்றங்களைப் பற்றி எண்ணாமல் தன்னைப் பற்றி அறியத் தொடங்குவது தான்.












--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:20, 21 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி - தின மலர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 29 ஜூன் 2011, 03:43 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,956 முறைகள் அணுகப்பட்டது.