சங்கப் புலவர் கபிலர் ஒரு தாவரவியல் நிபுணர்மரபு விக்கி இருந்துசங்கப்புலவர் கபிலர் ஒரு தாவரவியல் நிபுணர் சு.சுவாமிநாதன் எம்.ஏ. (பிரித்தானியா)
தமிழ்ச்சங்கப்புலவர்களில் மிகவும் புகழ் பெற்றவர் கபிலர். இவர்தான் அதிகமான சங்கப் பாடல்களைப் பாடியவர். இவரை "புலனழுக்கற்ற அந்தணாளன்" என்று வேறு ஒரு புலவர் பாராட்டுகிறார். ஒழுக்கசீலர், உத்தமர், அதிகமான பாடல்களைப் பாடியவர், கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகளிரை மணம் புரிவித்து கடைத்தேற்றியவர். இவை எல்லாவற்றையும் விட பெரும் தாவரவியல் நிபுணர். (BOTANIST).
இருநூறுக்கும் மேலான பாடல்களைப் பாடிய கபிலர், குறிஞ்சிப்பாட்டு என்னும் 261 வரிகளுள்ள நீண்ட ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடிய இப்பாடல் பத்துப்பாட்டு என்னும் நூலில் இடம்பெறுகிறது. இதில் 99 தாவரங்களின் பெயர்களை வரிசையாக எடுத்துக் கூறுகிறார். வால்மீகியும் காளிதாசனும் அவர்களுடைய காவியங்களில் ஏராளமான தாவரங்களைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் கபிலர் போல 99 மரம், செடி,கொடிகளின் பெயர்களை ஒரே மூச்சில் கூறவில்லை.
--என்ற வரிகளில் கபிலர் கூறும் தாவரங்களைப் பார்க்கையில் தமிழர்களின் தாவர இயல் (BOTANY) அறிவு எவ்வளவு பரந்தது என்று தெரிகிறது.
இது மட்டுமல்ல. சம்பந்தர்-அப்பர்-சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களிலும் மாணிக்க வாசகரின் திருவாசகப் பாடல்களிலும் பன்னிரு ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடல்களிலும் நூற்றுக்கும் அதிகமான "தல விருட்சங்கள்" (கோவில் மரங்கள்) குறிப்பிடப் படுகின்றன. கண்ணனுக்கு விருப்பமான துளசியும், சிவனுக்குப் பிரியமான வில்வமும், பிள்ளையாருக்குப் பிடித்தமான அருகம்புல்லும் அபூர்வமான மருத்துவ குணங்களையுடைய தாவரங்களாகும். ஒவ்வொரு ஊர்க்கோவிலிலுமுள்ள புனித மரங்கள் (தல விருட்சம்) பல்வேறு மருத்துவப் பயன்களையுடையவை. தமிழர்களின் வாழ்வு இயற்கையோடு பின்னிப் பிணைந்தது என்பதை குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்ற நாநிலப் பிரிவிலிருந்தும் அறியலாம். குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்பன தாவரப் பெயர்கள்.
குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் தாவரங்களையும் நூற்றுக்கும் மேலான தல விருட்சங்களையும், சித்த மருத்துவ நூல்களிலுள்ள மூலிகைச் செடிகளையும் பட்டியலிட வேண்டும். அவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் தாவரவியல் (BOTANICAL GARDEN)பூங்காவில் வளர்க்க வேண்டும். அவைகளின் அபூர்வ குணங்களை விஞ்ஞான பூர்வமாக ஆராய ஒரு ஆய்வுக் கூடமும் இருக்க வேண்டும்.
ஹீலியோ டிராபிஸம் (HELIO TROPISM)
"பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான்பூ மோசிகீரனார், புறம் 155
நெருஞ்சிப் பூவானது எப்படி கதிரவனை எதிர்நோக்கியே இருக்குமோ அதுபோல பாணரது உண்கலம் கொண்கானம் கிழானது மாலையணிந்த மார்பை நோக்கியே இருக்கும் என்று மோசிகீரனார் பாடுகிறார்.
சில தாவரங்கள் பூக்காமலேயே காய்ப்பதைக் குறிப்பிடுகிறார். பெருங்கெளசிகனார் எழுதிய மலைபடுகடாமிலும் (வரி 268) இதைக் காணலாம்.
அனிச்சம் என்னும் ஒரு அதிசயப் பூவை வள்ளுவரும் கபிலரும் குறிப்பிடுகின்றனர். முகர்ந்து பார்த்தாலேயே வாடிவிடுமாம். அனிச்சம் பூ! இதை வள்ளுவர் தனது குறளில் "மோப்பக் குழையும் அனிச்சம்" (குறள் 90) என்ற உவமை மூலம் தெரிவிக்கிறார்.
தமிழ் இலக்கியம் ஒரு அறிவுக்கடல். அதில் இப்படி ஏராளமான முத்துக்கள் உள்ளன.
--Geetha Sambasivam 20:53, 8 நவம்பர் 2011 (UTC) |