கோடைக்கேற்ற குளிர்பானங்கள்..

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

உமா சண்முகம்


கிரேப் சர்பத்:


சீனி – 600கிராம்,

தண்ணீர் -300 மில்லி லிட்டர்,

சிட்ரிக் ஆசிட் – 1தேக்கரண்டி,

கிரேப் எசென்ஸ் -1தேக்கரண்டி,

சீனி, தண்ணீர், சிட்ரிக் ஆசிட், மூன்றையும் சேர்த்து சர்க்கரைப் பாகு தயாரிக்கவும்.

ஆறிய பின்பு, வடிகட்டி குளிரச் செய்யவும். குளிர்ந்த சர்க்கரைப் பாகுடன் 1 தேக்கரண்டி கிரேப் எசென்ஸ் சேர்க்கவும்.

இந்த சர்பத்துக்கு கலர் பவுடர் தேவை இல்லை. இயற்கையாகவே இருக்கும் நிறமே போதுமானது.ஒரு அளவு சர்பத்துடன் மூன்று அளவு தண்ணீர் சேர்த்து பருகவும்.


அன்னாசி சர்பத் :


கிரேப் சர்பத் தயாரிக்கும்போது செய்ததைப் போல் பாகு தயாரித்து, அதனுடன் 1 தேக்கரண்டி அன்னாசி எசென்ஸ் சேர்க்கவும்.

லெமன் எல்லோ கலர் சேர்க்கவும்.


நன்னாரி சர்பத் :


கிரேப் சர்பத் தயாரிக்கும்போது செய்ததைப் போல் பாகு தயாரித்து, அத்துடன் 2 தேக்கரண்டி நன்னாரி எசென்ஸ் சேர்க்கவும்.

லெமன் எல்லோ கலர் சேர்க்கவும்.


ஆரஞ்சு சர்பத்:


கிரேப் சர்பத் போல் தயாரிக்கும்போது செய்ததைப்போல் பாகு தயாரித்து, அத்துடன் 1 தேக்கரண்டி ஆரஞ்சு எசென்ஸ் சேர்க்கவும்.

ஆரஞ்சு கலர் பவுடர் சேர்க்கவும்.


லெமன் சர்பத்:


கிரேப் சர்பத் தயாரிக்கும்போது செய்ததைப் போல் பாகு தயாரித்து, அத்துடன் 1 தேக்கரண்டி லெமன் எசென்ஸ்சேர்க்கவும்.

லெமன் எல்லோ கலர் பவுடர் சேர்க்கவும்.


பாண்டா:


சீனி – 600கிராம்,

தண்ணீர் – 300 மில்லி லிட்டர்,

சிட்ரிக் ஆசிட் – 1 3/4 தேக்கரண்டி.

சீனி, தண்ணீர், சிட்ரிக் ஆசிட், மூன்றையும் சேர்த்து சர்க்கரை பாகு தயாரிக்கவும்.

ஒரு கொதி வந்தவுடன் குளிரச் செய்யவும்.

ஆறிய பின்பு பாகுடன், ஆரஞ்சு எசென்ஸ்1 3/4 தேக்கரண்டியும், ஆரஞ்சுக்கூழ் அல்லது எமல்ஷன் 1 3/4தேக்கரண்டியும் சேர்க்கவும்.







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:05, 24 ஆகஸ்ட் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 24 ஆகஸ்ட் 2011, 16:05 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,567 முறைகள் அணுகப்பட்டது.