கு குங்குமம் சுமந்த கழுதை மண, அறியுமா?

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சிங்கை கிருஷ்ணன் 


கு
குங்குமம் சுமந்த கழுதை மண, அறியுமா?
குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்
குடிக்கிறது கூழ், கொப்பளிப்பது பன்னீர்.
குடி வைத்த வீட்டில் கொள்ளி வைக்கலாமா?
குட்டுப் பட்டாலும் மோதிரக் கையாலே குட்டுப்படவேண்டும்.
குணத்தை மாற்ற குருவில்லை.
குணம் இல்லாத வித்தை எல்லாம் அவித்தை.
குணம் பெரிதேயன்றிக் குலம் பெரிதன்று.
குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவால்.
குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
குப்புற வீழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.
குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
குரங்கின் கையில் பூ மாலை.
குரங்குப் புத்தி சொல்லி தூக்கணாங்குருவி கண்டு இழந்தது
குரு இல்லா வித்தை பாழ்
குரு மொழி மறந்தோன் திருவழிந்து போவான்.
குரைக்கிற நாய் வேட்டையாடுமா?
குரைக்கிற நாய் கடிக்குமா? [இப்போது குரைக்கிற நாயெல்லம் கடிக்கிறது]
குணம் குப்பையிலே, பணம் பந்தையிலே
குல் வித்தை கற்றது பாதி, கல்லாமற் பாதி.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்தில்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

















--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:19, 28 செப்டெம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 28 செப்டெம்பர் 2011, 14:19 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,681 முறைகள் அணுகப்பட்டது.