கும்பாபிஷேஹம், குடமுழுக்கு விழா! தொடர்ச்சி 4

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
DSC00781அரணிஅக்னி.JPG
 

கடையப்பட்ட அரணிக்கட்டையிலிருந்து நெருப்புக் கிளம்பும் முன்னர் புகை வருகிறது.  பக்தர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்த்துவிட்டார் பெருமாள்.  சாதாரணமாகக்குறைந்தது அரை மணி நேரமாவது கடையவேண்டி இருக்கும் என்றார் பட்டாசாரியார்.  ஆனால் இப்போது பதினைந்து நிமிடங்களிலேயே அக்னி வர ஆரம்பித்தது.  அனைவரும் கோவிந்தாக் கூச்சல் போட அக்னியை யாகசாலைக் குண்டத்திற்கு எடுத்துச் செல்ல அக்னி மாற்றம் செய்யப் போகிறார் அடுத்து.
















DSC00786அக்னிமாற்றம்.JPG
அரணியால் கடையப்பட்ட அக்னியை இன்னொரு சட்டிக்கு மாற்றுகின்றனர்.  அந்தச் சட்டியில் சமித்துகள் போடப்பட்டு அக்னி வளர்க்கத் தயாராகக் காத்திருக்கிறது.  அக்னி அதற்கு மாற்றப்படுகிறது.




















DSC00788யாகாக்னி.JPG






இதோ, இந்தச் சட்டியில் யாகத்திற்காக வளர்க்கப்பட்ட அக்னி கொழுந்து விட்டு எரிகிறது.  இதை மந்திர கோஷங்களோடும், வேத முழக்கங்களோடும், யாகத்திற்குத் தலைமை வகிக்கும் பட்டாசாரியார் சுமந்து செல்லுவார்.  கூடவே மங்கலப் பொருட்களும், வழிபாட்டிற்கு வேண்டிய திரவியங்கள்,, பூக்கள்,மாலைகள், நிவேதனங்கள் அனைத்தும் பக்தர்களால் சுமந்து செல்லப்படும்.  அனைவரும் கர்பகிரஹத்தைப் பிரதக்ஷிணமாக வந்து பின்னர் யாக சாலைக்குச் செல்லுவார்கள்.












DSC00793யாகசாலைக்கு.JPG



இவர் தான் யாகத்தை நடத்திக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றிருப்பவர்.  இவர் தான் அக்னியைச் சுமந்து செல்கிறார்.  கூடவே அனைத்து பட்டாசாரியார்களும் செல்கின்றனர். 


















--Geetha Sambasivam 22:44, 3 டிசம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 3 டிசம்பர் 2011, 22:44 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,745 முறைகள் அணுகப்பட்டது.