காக்காய்க் குளியலா குளிக்கிறீங்க?

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
நம்ம மரபு விக்கியின் புகைப்படக்காரர் திரு உதயன், காக்காய் குளிப்பதை அதுங்களுக்குத் தெரியாமலேயே படம் பிடிச்சுட்டு வந்துட்டார்.  காக்காய்ங்களும் நல்லா சந்தோஷமாத் தண்ணீர் நிறையவே விட்டுக் குளிச்சிருக்குங்க.  இனி யாரும் காக்காய்க்குளியலானு கேட்க முடியாது.  இதோ நேரிலேயே பார்க்கிறோம் இல்லை??
DSC 0465kaka.jpg



இதோ வந்தாச்சு குடும்பத் தலைவியா?? முதல்லே வந்து எல்லாமும் தயார் செய்யறாங்க.  அப்புறமா எல்லாரையும் கூவிக் கூவி அழைக்கிறாங்க. கா..........கா..........கா........ அப்பாடா, தொண்டை கரைஞ்சு போகும் போலக் கரையறேன்.  எல்லாரும் எங்கே போனாங்க?


DSC 0448crows.jpg


இந்தா பசங்களா, அடிச்சுக்காதீங்க, ஒவ்வொருத்தராத் தான் குளிக்கணும், தெரியுதா?



Crow1.jpg


நீ மட்டும் ஏன் திரும்பிட்டு இருக்கே?? வெட்கமா இருக்கா?? இங்கே வா.



All crows.jpg


குளிச்சாச்சுன்னா உடம்பைத் துண்டாலே துடைச்சுக்காம இது என்ன வெயிலில் காயறே?? உடம்புக்கு ஆகாது, உள்ளே வாப்பா என் பொன் குஞ்சே!



படங்கள் எடுத்தது திரு உதயன்


--Geetha Sambasivam 04:17, 23 ஜூலை 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 23 ஜூலை 2011, 04:17 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,585 முறைகள் அணுகப்பட்டது.