கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 2
முதற்பகுதியில் உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் பார்த்தோம். இனிக் காண இருப்பவை உயிர்மெய் எழுத்துகள். பெரும்பாலும் தற்போதுள்ள எழுத்துகளை ஒத்திருப்பினும், னா, ணா, ணை, லை, ளை, னை, னொ னோ ஆகிய எழுத்துகள் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முன்பு வழக்கில் இருந்த எழுத்துகளை ஒட்டியிருப்பன. பாடம் தொடர்கிறது.
அறச்சலூர் கல்வெட்டு கி.பி. 4-ஆம் நூற்றாண்டு எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டின் மேற்புறத்தில் உள்ளது சேலம் (மா) ஓமலூர் (வ) அம்மன்கோயில்பட்டியில் உள்ள பிராமிக்கல்வெட்டு. காலம் கி.பி. 4-ஆம் நூ.ஆ. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரின் தமிழ் பிராமி கல்வெட்டுகள் நூலிலிருந்து எடுத்த படங்கள் இவை. இதன் பாடம் வருமாறு:
பரம்பன் கோகூர்கிழார் மகன் வியக்கன்
கோபன் கணதேவன் தொட சுனை
ஒளிப்படங்களைப் பாருங்கள். கணதேவன்=கண்னதேவன்;தொட=தொட்ட(தோண்டிய)