--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
[இக்கட்டுரை தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற்குழுமத்தில் கட்டுரை ஆசிரியரால் மின்தமிழில் கல்வெட்டு வகுப்பு என்ற தலைப்பில் வழங்கப்பட்ட கட்டுரை]
படிக்கும் பயிற்சியில் மேலும் ஓரிரு கல்வெட்டுகள் கீழே;
[1] இராசராசன் பள்ளிப்படைக் கல்வெட்டு.
கல்வெட்டின் பாடம்:
- ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபு4வந சக்ரவத்திகள் ஸ்ரீ கு
- லோத்துங்க சோழதேவற்கு யாண்டு நாற்ப
- த்திரண்டாவது ஸ்ரீ சிவபதசேகரமங்கலத்து
- எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவராந ஸ்ரீ
- சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
- பெரியதிருமண்டபமுன்...டுப்பு ஜீ(ர்)
- நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
- த்தார் பிடவூர் பிடவூர் வேளான் வேளிர்
- அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
- யகம் செய்துநின்ற ஜயசிங்ககுல கா
- வளநாட்டு குளமங்கல நாட்டு சா
- மங்கலத்து சாத்தமங்கலமுடை
- ன நம்பிடாரன் நாடறிபுகழுன் இ
- டன் விரதங்கொண்டு செய்தார் இ
- (ர்) பிடார்களில் ராஜேந்த்ரசோழனு
- (ட) நாயகநான ஈசாநசிவரும் தேவ
- யமந அறங்காட்டிப்பிச்சரும் ||-
குறிப்பு: பச்சைவண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.
ஜீர்நித்தமையில்-அழிவு ஏற்பட்டமையால்
[2] உடுமலை-கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டு:
கல்வெட்டின் பாடம்:
1. இருதூணி குறுணிக்கும் பூவில் எண்கல்லு பாட்டம் அளந்
2. ற்கும் குறுணி இரு நாழி அரிசி அமுதுபடி சென்றுவ(ரு)
3. . த்திரத்துக்கு ஆறுநாழி சோறும் இட்டு வருவ
4. சோழபட்டனும் கைக்கொண்ட அச்சு இரண்(டு)
[3] உடுமலை-கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டு:
கல்வெட்டின் பாடம்:
- கும் கோவணப்பொழிக்கு தெற்கும் இந்நான்கெல்லைக்கு 20 – வி. இ
- நாச்சியாற்கும் வினாயகப்பிள்ளையாற்கும்க்ஷேத்திரபாலப்பிள்(ளையா)ற்
- சனி எண்ணைக்காப்புக்கு வந்துசேவித்த ஆடுபாத்திரம் பாடு(பா)த்
- டைய சிவபிராமணன் சைய்வச்சக்கரவத்தியும் விக்கி
- ணை சாத்திவருவோம்மாகவும்
குறிப்பு: பச்சைவண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.
___________________________________________________________
து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________