--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
[இக்கட்டுரை தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற்குழுமத்தில் கட்டுரை ஆசிரியரால் மின்தமிழில் கல்வெட்டு வகுப்பு என்ற தலைப்பில் வழங்கப்பட்ட கட்டுரை]
தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளிலிருந்து சில கல்வெட்டுகளை இங்கே படித்துக்கொண்டிருக்கிறோம். மேலும் இரு கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. எழுத்துகளில் பயிற்சி முடித்தவர்கள் இவற்றையும் படியுங்கள்.
கல்வெட்டு 1
கல்வெட்டின் பாடம் கீழே தரப்பட்டுள்ளது. உங்கள் பாடத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.
கல்வெட்டின் பாடம்:
ங்குன்றி வயிர சாயலம் ஒன்று பொன் நூற்று இ
பொட்டு ஓரணை பொன் தொண்ணூற்றுக்கழஞ்
பத்து அறுகழஞ்சேய் இரண்டு மஞ்சாடியுங்
ரணை பொன் நூற்றுஐம்பதன் கழஞ்ச
ற்று நாற்பத்துநாற் கழஞ்சு திருவடிக்காரை உ
தின்கழஞ்சேகால்-பாதசாயலம் ஓரணை
கால்மோதிரம் பத்தினால் பொன் பதினாற்க
குன்றி-தைஞ்சை விடங்கர் நம்பிராட்டியார்
..க ஒன்று பொன் நானூற்று நாற்பத்து
குறிப்பு: பாதசாயலம் – கிரந்த எழுத்துகள்
கல்வெட்டு 2
கல்வெட்டின் பாடம்:
த்து ஐங்கலனே ஒருதூணிப்பதக்கு முன்னாழி-இன்னாட்டு
அரையேமூன்றுமாமுக்காணி அரைக்காணிக்கீழ் எட்டுமாவி
நிலம் இரண்டேஒருமாவரை அரைக்காணிமுந்திரிகைக்கீழ்
காணிக்கீழ் ஒன்பதுமா முக்காணிக்கீழ் முக்காலே ஒரு மாவி
நாலாயிரத்து எழுபதின் கலனே ஐங்குறுணி ஐஞ்ஞாழி
ரை அரைக்காணிக்கீழ் எட்டுமாவிலும் ஊரிருக்கையுங் கு
ல்களாலும் சுடுகாட்டாலும் இறைஇலிநிலம் முக்கா
அரைக்காணிமுந்திரிகைக்கீழ் அரைக்காணிக்கீழ் எட்டு ம
ண்டாயிரத்து ஒருநூற்றுஎண்பத்து முக்கலனே ஐங்கு
___________________________________________________________
து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________