கற்பக விநாயகர் - பிள்ளையார்பட்டிமரபு விக்கி இருந்துகற்பக விநாயகர்
வரும் ஆவணி 15ஆம் (01-09-2011) நாள் விநாயகர் சதுர்த்தி. சிறப்புக் கட்டுரை
ஒவ்வொரு ஊரிலும் பிள்ளையாருக்கு ஒவ்வொரு பெயர் உள்ளதே! பிள்ளையார் பட்டியில் கற்பகவிநாயகர் என்று பெயர் உள்ளதே!
"கற்பகம்" என்று பெண்களுக்குத்தானே பெயர்? இந்த பிள்ளையார்பட்டியில் மட்டும் "கற்பக விநாயகர்" என்ற பெயர் உள்ளதே! "இதற்குக் காரணம் என்ன? "கற்பக விநாயகர்" என்றால் பொருள் என்ன? "கற்பகம்" என்றால் கேட்பதெல்லாம் கொடுப்பவர் என்று பொருளாமே? என்று கேட்டாள்.
ஆமாம் நீ சொல்வது சரியே என்றேன்.
"நீரின்றி அமையாது உலகு" என்பது ஐயன் வாக்கு. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரும் நீர் சார்ந்ததாகவே இருக்கும். கண்மாய் அல்லது ஏரிக் கரைகளில் ஐயனார் கோயில் இருக்கும். ஐயனார் கோயில் இல்லாத ஏரியையோ அல்லது கண்மாய்க்கரையையோ காண இயலாது. ஒவ்வொரு ஊரிலிருக்கும் ஐயனாருக்கும் ஒரு வரலாறு இருக்கும். அந்த வரலாற்றின் அடிப்படையில் அந்த ஐயனாருக்குப் பெயர் இருக்கும்.
ஏரி, கண்மாய் போன்றவை அமையாத இடங்களில் இயற்கையாக குளம் அமைந்திருக்கும். அவ்வாறு இயற்கையாக குளம் இல்லாத ஊரில் செயற்கையாக ஒரு குளத்தையாகவது தமிழர் தோண்டி வைத்திருப்பர். எனவே ஊருணி இல்லாத ஊரே தமிழகத்தில் இல்லை எனலாம். "ஊருக்கு அழகு உருணியே" யாகும்.
ஆற்றங்கரையிலோ அல்லது குளத்தங்கரையிலோ அரச மரம் இருக்கும், அந்த அரசமரத்தடியில் பெண்கள் குளிக்கும் படித்துறையில் பிள்ளையார் நிச்சயமாக இருப்பார். எனவே பிள்ளையார் இல்லாத ஊரே தமிழகத்தில் இல்லை எனலாம்.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள பிள்ளையாருக்கு ஒரு வரலாறு இருக்கும். அவ்வரலாற்றின் அடிப்படையில் அந்தப் பிள்ளையாருக்கு ஒரு பெயர் வைத்திருப்பார்கள் என்றேன்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ள பிள்ளையாருக்கு "கற்பக விநாயகர்" என்று பெயர்.
கல்+பக என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து உண்டான சொல்தான் "கற்பக" என்ற சொல் உருவானது. "கல்" என்றால் "கற்பாறை" என்று பொருள். "பக" என்றால் "பகுத்தல் (பிளத்தல்)" என்றும் பொருள். "கல்பக" அதாவது "கற்பக" என்றால் பாறையைப் பிளவு படுத்துதல் என்று பொருள்.
கற்பக விநாயகர் என்றால் "பிளவு பட்ட பாறையில் உள்ள பிள்ளையார்" என்று பொருள்.
சுருங்கச் சொன்னால் "கற்பக விநாயகர்" என்றால் பாறையைப் பிளந்து, பாறையைக் குடைந்து அதன் உள்ளே உள்ள பிள்ளையார், அதாவது "குடைவரைக் கோயிலில் உள்ள பிள்ளையார்" என்று பொருள் என்றேன். பிள்ளையார் பட்டியில் மட்டுமல்ல, குன்றக்குடியிலும் இதுபோன்றதொரு பிள்ளையார் உள்ளார், திருப்பரங்குன்றத்திலும் உள்ளார், ஏனைய குடைவரைக் கோயில் உள்ள இடங்களிலும் கற்பகவிநாயகர் இருப்பார் என்றேன்.
அப்படியானால் "கற்பகம்" என்று பெண்களுக்குத்தானே பெயர் வைக்கிறார்கள்? பிள்ளையார் பட்டியில் விநாயகருக்குக் "கற்பக விநாயகர்" என்று உள்ளதே! என்று என் தங்கை கேட்டாள்!
ஆமாம் நீ சொல்வது சரிதான். "கற்பக விருட்சம்" என்று சொல்கிறோம். கற்பக விருட்சம் என்றால் கல்லை அதாவது பாறையைப் பிளந்து கொண்டு வளரும் விருட்சம் என்று பெயர்.
பொதுவாக மரஞ்செடிகொடிகள் மண்ணில்தான் வளரும்! ஆனால் மண்ணே இல்லாமல், பாறையின் இடுக்கில், பிளவுபட்ட பாறையில் மரங்கள் வளர்ந்திருப்பதை நீ பார்த்திருப்பாய். திருப்பரங்குன்றத்தில் மலைமேல் பாறைகளில் உள்ள விரிசலில் பாறைகளின் இடையே மரங்கள் முளைத்திருப்பதைக் காணலாம். இவ்வாறு கல் பிளவு பட்ட இடத்தில் வளரும் விருட்சத்திற்குத்தான் கற்பகவிருட்சம் என்று பெயர். இவ்வாறான சிறப்புப் பெற்ற விருட்சத்தின் பெயரை பெண்ணுக்கு வைத்துள்ளனர் என்றேன்.
கல்லில் ஆலமரம் வளர்கின்றதே அதைச்சொல்கின்றீர்களா? என்று கேட்டாள் என் தங்கை.
ஆமாம் கற்பகவிருட்சத்திற்கு ஆலமரம் ஓர்சிறந்த ஊதாரணம், ஆனால் ஆலமரம் போன்று பாறையில் வளரும் மரங்கள் நிறையவே உள்ளன. "கல்ஆலின்" என்ற பாடலில், கற்பாறையில் வளர்ந்துள்ள ஆல மரத்தின் நிழலில் அமர்ந்து என்று பொருள் கொள்ள வேண்டும் என்றேன்.
பேசிக்கொண்டே கோயிலை நோக்கி நடந்து சென்றோம்.
பூக்கடைக்குச் சென்றால் என் தங்கை. நானும் எனது மனைவியும் பூக்கடையருகில் நிழலில் நின்று கொண்டிருந்தோம்.
அண்ணே, என்ன மாலை வாங்க? என்று கேட்டாள் என் தங்கை. யாருக்கு என்று கேட்டேன். பிள்ளையாருக்கு என்றாள்,
அப்படியானல் வெள்ளருக்கம்பூ மாலை வாங்கு என்றேன்.
கடைக்காரர் பிள்ளையார் அளவிற்கு சம்பங்கி மாலை கட்டி வைத்திருந்தார். அதனை வாங்கிச் செல்லுமாறு கூறினார். என் தங்கை என்னிடம், அண்ணே, சம்பங்கி மாலை வேண்டாமா? என்று கேட்டாள்!
என்னிடம் கேட்டால்?
நான் சொன்னேன், பிள்ளையாருக்கு உகந்தது எருக்கமாலையே! அல்லது அரும்புல் மாலையைச் சாற்று. சம்பங்கி மாலை வேண்டாம் என்றேன். ஏன்? என்று கேட்டாள் என் தங்கை.
பிள்ளையார்பட்டியில் பிள்ளையார் வடதிசை நோக்கி அமர்ந்து வலதுகையில் சிவலிங்கத்தை வைத்துக் கொண்டு சிவபூசையில் சிவயோகத்தில் அமர்ந்து வடக்கிருக்கிறார்.
இவ்வாறு இருப்பவருக்கு உதவும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். அப்போதுதான் அவரது அருள் நமக்குக் கிட்டும். எல்லாம் துறந்து வடக்கிருக்கும் பிள்ளையாருக்கு வெள்ளெருக்கு மாலையே சாலச்சிறந்தது. மனைவியரோடு வீற்றிருக்கும் பிள்ளையாருக்கே சம்பங்கி மற்றும் மணம்தரும் மலர்களை அணிவிக்க வேண்டும். இவ்வாறு வடக்கிருந்து சிவலிங்கத்தைக் கையில்வைத்துக் கொண்டு சிவபூசை செய்துகொண்டிருக்கும் பிள்ளையாருக்கு சம்பங்கி மாலையைவிட வெள்ளெருக்கு மாலையே சாலச்சிறந்தது என்றேன்.
வெள்ளெருக்குமாலை கிடைக்கவில்லை. அருகம்புல் மாலை வாங்கிக் கொண்டாள்.
"அவள் விருப்பப்படி சம்பங்கி மாலையை வாங்கிச் சாத்தட்டுமே, அவரவர் விருப்பப்படிக்கூட செய்யவிடமாட்டார் இவர்" என்று ஆதங்கப்பட்டுக் கொண்டாள் என் மனைவி. அவரவர் விருப்பத்தைவிட அவனது விருப்பப்படியே செய்ய வேண்டும் என்றேன் நான். எனக்குப் பிடித்ததை உனக்கு வாங்கிக் கொடுப்பதை விட உனக்குப் பிடித்ததை உனக்கு வாங்கிக் கொடுப்பதே சிறந்தது. நமது விருப்பப்படி தெய்வங்களை வணங்குவதை விட தெய்வங்களின் விருப்பப்படி நாம் வணங்குவதே சாலச் சிறந்தது என்றேன்.
விளக்கம் விவகாரமாகச் செல்வதை விரும்பாத என் தங்கை என்னிடம், பிள்ளையாருக்கு சாற்றும் மாலை பற்றிச் சொன்னீர்கள். அவரிடம் கேட்டுகும் வரங்கள் பற்றிக் கூறுங்களேன் என்று கேட்டாள்.
அம்மா..... உன் மகனை பொறியாளர் ஆக்க வேண்டும் என்றால் "பொறியியல் கல்லூரிக்குச் செல்கிறாய்" உன் மகளை மருத்துவர் ஆக்க வேண்டும் என்றால் "மருத்துவக் கல்லூரிக்குச் செல்கிறாய்" என்ன தேவை! அது எங்கே கிடைக்கம்! என்று அறிந்து கொண்டு செயல்படுகிறாய். அதுபோல் என்ன வரம் தேவையோ அந்த வரம் அருளும் தெய்வம் எது? அது எங்கே உள்ளது என்று அறிந்து கொண்டு அங்கே சென்று அத்தெய்வத்திடம் அதைக் கேட்டுப் பெற வேண்டும்.
எதையும் பெறுவதற்குக் இடமும் ஏவலும் முக்கியம்.
பொதுவாகப் பிள்ளையாரிடம் காரிய "சித்தி"யையையும் நல்ல "புத்தி"யையும் வேண்ட வேண்டும். "சித்திபுத்திக்கு" அவரே நாயகன் என்றேன்.
பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் முற்றும் துறந்து முழுநேர சிவபூசையில் உள்ளார், எனவே அவரிடம் சித்தி புத்தியோடு உலக ஞானத்தை வேண்ட வேண்டும் என்றேன்.
அவர் ஒரு கற்பகம், இயல்வது கரவேல் - என்று பாடிய ஒளவைக்கு அருளியவர். எனவே தன்னிடம் இருப்பதை வஞ்சகம் இன்றி வாரி வழங்கும் இயல்பினன். கேட்டதை இல்லையென்று சொல்லமாட்டார்.
பிள்ளையார், அவரது தாய்தந்தையரான பார்வதி பரமேசுவரரை வலம் வந்து வணங்கி ஞானப்பழத்தைப் பெற்றுக் கொண்டார். எனவே நாமும் பிள்ளையாரை வலம் வந்து வணங்கி வரம் வேண்ட வேண்டும் என்றேன். பெற்ற பிள்ளை கல்வியில் சிறந்து விளங்கி நன்றாகப் படிப்பார்கள். நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். ஆனால் தாய்தந்தையரிடம் எப்படிப் பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியாதவர்களா இருப்பார்கள்! அவர்களை பிள்ளையார் பட்டிக்கு அழைத்து வந்து மலையை வலம் வந்து விநாயகரை வணங்கச் செய்ய வேண்டும். அவ்வாறு வணங்கினால், அந்தப் பிள்ளைக்கு கல்வியோடு ஞானமும் கிடைக்கும்.
பிள்ளையார் பட்டியில் பிள்ளையாரை எப்படி வலம் வருவது? மலையைச் சுற்றிவர வேண்டுமே என்று கேட்டாள். ஆமாம், மலையைச் சுற்றி வந்து வணங்கி வரம் வேண்ட வேண்டும். வேண்டிய வரம் அருளுவார் அந்தக் கற்பகவிநாயகர் என்றேன்.
கல்மலையைச் சுற்றிவந்து, அந்தக் கற்பக விநாயகரை வணங்கி வரம் பல பெற்றோம். அந்தக் கற்பகவிநாயகன் அருளால், நல்ல புத்தியைப் பெறுவோம், காரிய சித்தி அடைவோம்.
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:53, 27 ஜூலை 2011 (UTC)
|
