கம்​ப​னுக்கு முன்பே தமி​ழில் இராமா​யண நூல்​கள் உண்டு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

புல​வர் முத்து.வேங்​க​டே​சன்



தமிழ்ச் செவ்​வி​யல் நூல்​கள் பல​வற்​றில் இராமன் பற்​றிய குறிப்​பு​கள் காணப்​ப​டுவ​தால்,​​ கம்​ப​னுக்கு முன்பே வேறு
யாரா​லா​வது இராம​காதை எழு​தப்​ பட்​டி​ருக்​கி​றதா இல்​லையா?​


கம்​ப​ருக்கு முன்பே தமி​ழில் இராமா​யண நூல்​கள் இருந்​தி​ருக்​கின்​றன என்​பதை,​​ சங்​கம் மற்​றும் சங்​கம் மரு​விய நூல்​கள் வழி அறி​ய​ மு​டி​கி​றது.​


பார​தம் பாடிய பெருந்​தே​வ​னார் என்​ப​வர்,​​"பார​தம் -​ சீராமகதை" எனக் குறிப்​பி​டு​கி​றார்.​இராமா​ய​ணத்​தைச் "சீராமகதை" என்றே முன்பு வழங்​கி​னர் என்​கி​றார் பெரும்​பு​ல​வர் மு.இராக​வை​யங்​கார்.​


கம்​பர் விருத்​தப்​பா​வில் இராமா​ய​ணம் பாடி​னார்.  ஆனால்,​​வெண்​பா​வி​லும் இராமா​ய​ணம் இருந்​தது என்ற தக​வலை,​​"யாப்​ப​ருங்​கலவிருத்தி" என்​னும் யாப்​பி​லக்​கண நூல் கூறு​கி​றது.​ மேலும்,​​"பஃ​றொடை வெண்​பா​வில்" இராமா​ய​ணம்
எழு​தப்​பட்​ட​தா​க​வும் கூறு​வது நோக்​கத்​தக்​கது.​  "வீர​சோ​ழி​யம்" என்ற இலக்​கண நூல்உரை​யா​சி​ரி​யர், ​​"இரா​மா​யண வெண்பா" உண்டு என்​கி​றார்.​ வீர​சோ​ழி​யம் உரை​யில் காணப்​ப​டும் இராமா​யண வெண்பாபின் ​வ​ரு​மாறு:-​​


​"மற்​றி​வனை மாலென்று அறிந்​தால்
அவ்​வா​ள​ரக்​கன்
பெற்றிதரு​வ​தென் பேதை​யர்​காள்
மற்​றி​வன்​ தன்கண்​டான் கடைசிவத்​தற்கு
-​ உண்டோ
கட​லி​லங்கை வண்​டார் அரக்​கன்வலி​!
​இவ்​வெண்பா யாப்​பின் மூலம்,​​கம்​ப​ருக்கு முன்பு  இராமா​யண நூல் இருந்​தது என்​பதை அறி​ய​ மு​டி​கி​றது.​
புறத்​தி​ரட்​டில்,​​"ஆசி​ரியமாலை" என்ற நூலில்,​​கம்​ப​ருக்கு முன்பே இராமா​யண நூல் உண்டு என்​ப​தும் அறி​யப்​ப​டு​கி​றது.

​"ஸ்ரீபு​ரா​ணம்" என்ற ஜைன​ நூல் மூலம் முன்பே
இராமா​ய​ணம் உண்டு என்​பதை அறி​ய​லாம்.​
மணிப்​பி​ர​வாள நடை​யில் அமைந்த இந்நூ​லில்,​​இராமா​ய​ணம்
பற்​றிய நிகழ்ச்​சி​கள் எழு​தப்​பட்​டுள்​ளன.​
ஸ்ரீபு​ரா​ணத்​தில் காணப்​ப​டும் ஆசி​ரி​யப்பா வரி​கள் பின்​ வ​ரு​மாறு:​​-
​"மாற்​றி​வன் செய்தமாயா மானின்
நோற்றிலாதே நோக்​கிய நோக்​கின்
அரு​வினையேனை அரு​ளிய மனத்​தால்
மரு​விய மாயஉரு​வு​த​ரற்கு எழுந்த
மான்​மறி தொடர்ந்து செல்​வாள் அரி​போ​லக்
கான்​நெறி விடுத்​துக் கடு​வ​னம் புகுந்து
மாயாப்புணர்ப்​பின் மன்​னனை நினைந்து
ஆய​ரும் தாய​மும் தோழி​யும் இன்​றி​யோர்
நொது​மல் ஆன​வன் விதி​வழி ஒழுகி
இட​னிடையிட்ட சேய் ​மைத்தன்​றி​யும்
கட​லிடையிட்டகாப்​பிற்​றா​கிய
இலங்கை மூதூர் இடு சிறைப்​பட்டு..​!


​தமிழ்​நாடு அர​சின் கையெ​ழுத்​துப் புத்​த​கச்சாலை​யில்,​​ "பல​தி​ரட்டு" என்ற சுவ​டி​யில்,​​"இரா​மா​யண வெண்​பாக்​கள்"
உள்​ள​தை​யும் மு.இராக​வை​யங்​கார் குறிப்​பிட்​டுள்​ளார்.​ அந்த வெண்பா இது​தான்.​


​"வசிட்​ட​னும் கோசி​க​னும் மன்​ன​வ​னும் கூடி
விசித்​தி​ரமா மங்​க​லச்​சொல்விண்டு-​
சசிக்​கு​ நி​கர்
மாமு​கத்​துச் சீதைக்​கும் வாழும் உரு​மி​ளைக்​கும்
மாமு​குர்த்​தம் இட்​டார் மகிழ்ந்து!​


​​​நச்​சி​னார்க்​கி​னி​யர்,​​தொல்​காப்​பி​யப் பொரு​ள​தி​கார உரை​யில் மேற்​கோள் வரி​க​ளாக,​​


​"ஆள்​வினை முடித்த அருந்​தவ
முனி​வன்
வேள்வி போற்​றிய இரா​மன் அவ​னோடு
மிதிலைமூதூர் எய்​திய ஞான்றே
மதி​யு​டம்பட்ட மாக்​கண் சீதை
கடு​விசைவில்​ நாண்இடி ஒலிகேளா
கேட்ட பாம்​பின் வாட்​டம் எய்​தித்
துயில் எழுந்து மயங்​கி​னன் அதான்று​.


என்ற இராமா​ய​ணச் செய்​தி​க​ளைக் கூறி​யுள்​ளார்.​   வால்​மீகி இராமா​ய​ணத்​தில்,​​இராம​னும் சீதை​யும்  திரு​ம​ணத்​துக்கு முன்பு சந்​திக்​க​வில்லை என்ற குறிப்பு உள்​ளது.​  ஆனால்,​​கம்​பர் காட்​டிய இராம​னும் சீதை​யும் திரு​ம​ணத்​துக்கு முன்பே நோக்​கு​கின்​ற​னர்.


​"அண்​ண​லும் நோக்​கி​னான்,​​அவ​ளும் நோக்​கி​னாள்


என்​பது கம்​பர் வரி.​  இது தமிழ்மரபு.​


இத​னா​லேயே, மேற்​கா​ணும் நச்​சி​னார்க்​கி​னி​யர் உரை​யின்  மேற்​கோள் பாட​லும் காட்​டு​கி​றது.​ சங்க இலக்​கி​ய​மான அக​நா​னூறு,​​


​"வெல்​போர் இரா​மன்
அரு​ம​றைக்கு அவித்த
பல்​வீழ் ஆலம்போல​.


​என,​​ஆல​மர நிழ​லில் இராமன் ஆலோ​சனை செய்த தக​வல் கூறப்​ப​டு​கி​றது.​


"இந்​தத்தக​வல் அக​நா​னூறு காலத்​துக்கு முன்பே தமி​ழில்  இராமா​யண நூல் இருந்​தி​ருக்க வேண்​டும்",என்ற
உண்​மை​யைப் புலப்​ப​டுத்​து​கி​றது.​  புற​நா​னூற்​றி​லும்,​​


​"கடுந்​தேர் இரா​மன் உடன்​பு​ணர்
சீதையை
வலித்​தகை அரக்​கன் வவ்​விய
ஞான்றை
நிலஞ்​சேர்மது​ரணி கண்ட குரங்​கின்
செம்​மு​கப் பெருங்​கிளை இழைப்பொலிந்தாங்கு


என்ற வரி​கள் மூலம்,​​"இராவ​ணன் சீதை​யைக் கவர்ந்து சென்​ற​போது,​​தன் அணி​க​லன்​களை சீதை வழி​யில் போட்​டு​விட,​​அவற்றை வானர வீரர்​கள் கண்​டெ​டுத்து அணிந்த நிகழ்வைஅறி​ய​லாம்.​


இந்​நி​கழ்ச்​சி​யைக் கம்​ப​ரா​மா​ய​ணத்​தி​லும் காண​லாம்.​ சங்​கம் மரு​விய நூலான சிலப்​ப​தி​கா​ரத்​தி​லும்,​​


​"பெரு​ம​கன் ஏவல் அல்​லதுயாங்​க​ணும்
அரசே தஞ்​ச​மென்று அருங்​கான் அடைந்த
அருந்​தி​றல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர்பெரும்பே துற்​ற​தும்​.


என்​றும்,​​


​"தாதை ஏவ​லின் மாது​டன் போகிக்
காதலி நீங்​கக்கடுந்​து​யர் உழந்​தோன்
வேத முதல்​வற் பயந்​தோன் என்​பது
நீ அறிந்திலையோ நெடு​மொழி அன்றோ


​என்​றும் கூறப்​ப​ கள்,​​இராமா​ய​ணத் தக​வல்​களை எடுத்​தி​யம்​பு​கி​றது.​ தந்தை சொல் ஏற்று,​​சீதை​யைப் பிரிந்து,​​இராமன்
கான​கம் அடைந்த செய்தி இவ்​வ​ரி​க​ளில் காணப்​ப​டு​கி​றது.​ மணி​மே​க​லைக் காப்​பி​யத்​தி​லும்,​​


​"நெடி​யோன் மயங்கி நில​மி​சைத் தோன்றி
அட​லரு முந்​நீர் அடைந்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு​மலை
எல்​லாம்
அணங்​குடை அரக்​கர் வயிறுபுக்காங்கு​.


​இவ்​வ​ரி​கள்,​​இராம​பி​ரான்,​​குரங்​கு​க​ளின் துணை​யு​டன் சேது​பந்​த​னம்​(சேது​பா​லம்) ​கட்​டி​யதை எடுத்​துக்​காட்​டு​கி​றது.​
ஆழ்​வார் பாடல்​க​ளின் தாக்​க​மும்,​​கம்​பன் காவி​யத்​தில் பல இடங்​க​ளில் காணப்​ப​டு​கின்​றன.​​ எனவே,​​அக​நா​னூறு,​​புற​நா​னூறு,​​சிலப்​ப​தி​கா​ரம்,​​மணி​மே​கலை,​​ ஆழ்​வார் பாசு​ரங்​கள் ஆகி​ய​வற்​றின் மூலம் கம்​ப​னுக்கு முன்பே இராமா​யண நூல்​கள் இருந்​தி​ருக்க வேண்​டும் என்​பது தெளி​வா​கி​றது.​ கம்​ப​னுக்கு முன்​பி​ருந்த இராமா​யண நூல்​கள்  கால​வெள்​ளத்​தால் அழிந்​தி​ருக்​கக்கூடும் என்றே கரு​த​ வேண்​டி​யுள்​ளது.

--Ksubashini 17:30, 18 மே 2010 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 18 மே 2010, 17:31 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,584 முறைகள் அணுகப்பட்டது.