கப்பாக்கறி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 திருமதி. வசந்தா குகேசன்


கப்பா என்றால் மரவள்ளிக்கிழங்கு.இது இல்லாமல் கேரள மக்களுக்கு சாப்பாடே இறங்காது. கிராமப்புற மக்களுக்கு பிரதான உணவே கப்பாக்கறிதான்

.

தேவையான பொருட்கள்;-


மரவள்ளிக்கிழங்கு -500கிராம்

மஞ்சள்தூள் -1/2டீஸ்பூன்

பச்சை மிளகாய் -3

பெரிய வெங்காயம் -1

காய்ந்த மிளகாய் -2

தேங்காய் துருவல் -1/4கப்

கடுகு -1/2டீஸ்பூன்

உப்பு , கறிவேப்பிலை -சிறிதளவு

1.கிழங்கின் மேல்தோல் நடுவேரை அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து அவிக்கவும்.

2. கிழங்கு அவிந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு தனியாக வையுங்கள்

3.தேங்காய்ப்பூ பச்சைமிளகாய் வெங்காயத்தை மைபோல அரைத்துக் கொள்ளுங்கள்

4.ஒரு வாணலியில் கடுகு , காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதையும் கிழங்கையும் போட்டு லேசாக மசித்துக்கொள்ளுங்கள்.

லேசாகக் கிளறினால் கப்பாக்கறி ரெடி.











--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:48, 20 செப்டெம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=கப்பாக்கறி&oldid=8237" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 20 செப்டெம்பர் 2011, 11:00 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,704 முறைகள் அணுகப்பட்டது.