கத்திரிக்காய் மசாலாமரபு விக்கி இருந்து--பவள சங்கரி திருநாவுக்கரசு. 09:24, 19 அக்டோபர் 2011 (UTC) திருமதி வசந்தா குகேசன்
தேவையான பொருட்கள்;-
வறுப்பதற்கு எள்ளு -1 டேபில் ஸ்பூன் நிலக்கடலை -2 டேபில் ஸ்பூன் தேங்காய் -3 டேபில் ஸ்பூன் எண்ணெய் ஊற்றாமல் வெறும் வடசட்டியில் வறுக்கவும். எண்ணெயில் வறுப்பதற்கு சீரகம் -1டீஸ்பூன் பட்டை கிராம்பு கசகசா -1டீஸ்பூன் இதனை வறுத்து தனியாக அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
எண்ணெயில் 1 பெரிய வெங்காயம் பூண்டு 4 பல் இஞ்சி சிறு துண்டு வணக்கி அரைக்கவும் மிளகாய்த்தூள் 1டேபில் ஸ்பூன் ம்ல்லித்தூள் 2டேபில் ஸ்பூன் புளி - எலுமிச்சை அளவு
1. வாணலியில் எண்ணெய் ஊற்றி 1 பெரிய வெங்காயத்தை அறிந்து போட்டு வணக்கவும். 2.சிறிய கத்திரிக்காய்களை நாண்காக கீறி முழுதாக போட்டு வணக்கவும் 3.வறுத்த மசாலாக்களை ஒவ்வொன்றாக சேர்க்கவும். 4.எண்ணெய் பிரியும் வரை வணக்கவும் 5.சிறிதளவு தண்ணீர் சேர்த்து காய் வேகும்வரை பொறுத்திருந்து புளி சேர்க்கவும். புளி மசாலா அனைத்தும் ஒன்று சேர்ந்து கொதிக்கும் பொழுது சிம்ம்ரில் வைத்து எண்ணெய் பிரியும் பொழுது இறக்கவும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 09:22, 19 அக்டோபர் 2011 (UTC) நன்றி - வல்லமை . |