கடலை மாவு பர்ஃபி.

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


கடலை மாவு பர்ஃபி.

                                                         
Ins14 large.jpg

                                                  

தேவையான பொருட்கள் :


கடலை மாவு - 100 கி.
நெய் - 100 கி
சக்கரை - 1 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 5 கி
பால் - 1/2 கப் [அ] 120 மி.லி.
குங்குமப்பூ - சிறிதளவு.


செய்முறை :- 10 கி.நெய், 1/4 கப் பால், இரண்டையும் கடலை மாவில் கலந்து கொள்ளவும்.மிருதுவாக பிசைந்து, சிறிது நேரம் வைத்து விடவும். மீதமுள்ள நெய்யை சூடு செய்து அதில் கலந்து வைத்திருக்கும் மாவை பூந்தி கரண்டியில் போட்டு தேய்த்து விட்டு,குறைந்த தீயில் சிறிது நேரம் கிளறி கீழே இறக்கி குளிரச் செய்யவும்.


சக்கரை 100 கிராம் எடுத்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு, கெட்டியான பாகாக காய்ச்சிக் கொள்ளவும். மீதமுள்ள பாலையும், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ அனைத்தும் போட்டு, நன்கு கிளறி கீழே இறக்கவும்.


ஆறிய பின்பு, கடலை மாவு கலவையை எடுத்து அந்த பாகில் கலக்கவும். நன்கு கலந்த பின்பு ஒரு தட்டில் கொட்டி, செட்டாகச் செய்யவும். சிறிது நேரம் கழித்து விரும்பும் வடிவத்தில் துண்டுகள் போட்டுக் கொள்ளலாம்.


ஒரு துண்டு 450 கலோரிகள் வரை இருக்கும்.




பவள சங்கரி திருநாவுக்கரசு.

தேதி - 10 - 03 - 2011.






:

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=கடலை_மாவு_பர்ஃபி.&oldid=5143" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2011, 10:47 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,497 முறைகள் அணுகப்பட்டது.