கடலைப்பருப்பு தோசை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

திருமதி. கீதா சாம்பசிவம்



கடலைப்பருப்பில் சில தோசை வகைகள்.

முதலில் வெறும் அரிசியும் கடலைப்பருப்பும் மட்டும் போட்டுச் செய்யும் தோசைகள்.


முதல் வகை!


அரிசி ஒரு கிண்ணம், அரைக்கிண்ணம், கடலைப்பருப்பு. களைந்து ஊற வைக்கவும். கருகப்பிலை, கொத்துமல்லி, மாவில் போட.


பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு ஊற வைத்த அரிசி, பருப்பைப் போட்டு அரைக்கவும், கொரகொரப்பாகவே அரைக்கலாம். பின்னர் முட்டைக்கோஸ், காரட், வெங்காயம் போன்ற காய்களை நன்கு துருவி அவற்றில் சேர்த்து சற்றே கனமான தோசையாக வார்க்கலாம். காய்கள் சேர்க்காமலும் வார்க்கலாம், காய்கள் சேர்க்கவில்லை எனில் கொஞ்சம் கூடுதலாக அரைத்துக்கொண்டு மெல்லிய தோசைகளாகவும் வார்க்கலாம். இதைத் தான் உட்லண்ட்ஸில் வெஜிடபிள் ஊத்தப்பம் என்ற பெயரில் கொடுக்கின்றனர். இதோடு சைட் டிஷாக தேங்காய் சட்னி, பச்சைக் கொத்துமல்லிச் சட்னி, வெங்காயச் சட்னி, தக்காளிச் சட்னி ஆகியவை சேரும்.


இரண்டாம் வகை!


மேற்சொன்ன அரிசி, பருப்பு வகைகளைக் கொஞ்சம் சூடு வர வறுத்துக்கொண்டு ஊற வைத்துக்கொள்ளவும்.
மிளகாய் வற்றல், பெருங்காயம் எண்ணெயில் வறுத்துக்கொண்டு நெல்லிக்காய் அளவு புளி சேர்த்துக்கொண்டு, உப்பு சேர்த்து அரைக்கவும். இதோடும் காய்களைச் சேர்த்து வார்க்கலாம். ருசி கொஞ்சம் மாறுபடும்.


மூJன்றாம் வகை!


அரிசி, கடலைப்பருப்பு தலா ஒரு கிண்ணம், தக்காளி பழுத்துச் சிவந்தது இரண்டு, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், இஞ்சி, மிளகு, சீரகம், தேங்காய் துருவல், வெங்காயம் பொடியாக நறுக்கியது அரைக்கிண்ணம். கருகப்பிலை, கொத்துமல்லி.


அரிசி, பருப்புகளை ஊற வைத்து, அதோடு கொஞ்சம் மிளகு, சீரகமும் சேர்த்து ஊற வைக்கவும்,


பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து, அதோடு பழுத்த தக்காளியைச் சேர்த்து அரைக்கவும். தக்காளி அரைபட்டதும் அரிசி, பருப்பைப் போட்டு அரைக்கவும், சற்றே கொரகொரப்பாக அரைபட்டதும், தேங்காய் துருவல், வெங்காயத் துருவலைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றிவிட்டு எடுக்கவும். கருகப்பிலை , கொத்துமல்லி சேர்த்து தோசையாக வார்க்கவும். இவை எல்லாமே எங்க வீட்டில் ஒரு காலத்தில் அடிக்கடி செய்யப் பட்டவை. இப்போத் தான் அலுத்துப் போய் பாரம்பரிய உணவு வகைக்கு மறுபடியும் திரும்பிட்டோம்!


அடுத்து கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, கம்பு மாவு, சோள மாவில் அரிசி, கடலைப்பருப்புச் சேர்த்துச்செய்யும் வகைகள்:


அரிசி, கடலைப்பருப்பை ஊற வைத்துக் காரதோசை என்றால் பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், காரத்துக்குஏற்றாற்போல் எடுத்துக்கொண்டு உப்பு, பெருங்காயம் , தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். நல்ல நைசாகவே அரைக்கலாம். அரைத்த மாவில் உங்களுக்கு எது தேவையோ அந்த மாவைக் கலந்து கொள்ளவும்.


உதாரணம் ஒரு கிண்ணம் அரிசி, அரைக்கிண்ணம் கடலைப்பருப்பு என்றால் அரைக்கிண்ணம் கோதுமை, கேழ்வரகு, சோளம், கம்பு மாவுகளில் எதாவது ஒன்று சேர்த்துக் கலக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வார்க்கவும், இதை மெல்லிய தோசைகளாக வார்க்க முடியும்.


இதே அரிசி, கடலைப்பருப்பை உப்பு எதுவும் போடாமல் ஊற வைத்து தேங்காய் துருவல் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக்கொண்டு, வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்துக்கொண்டு மேற்சொன்ன மாவுகளில் ஏதானும் ஒன்றைச் சேர்த்து வெல்ல தோசையும் வார்க்கலாம்.


தோசைமாவாகக் கரைக்காமல் மாவைக் கெட்டியாக வைத்துக்கொண்டு, கனிந்த வாழைப்பழங்களைப் போட்டுக் கலந்து பிசைந்து கொண்டு குழி ஆப்பச் சட்டியில் ஊற்றி அப்பம் போலவும் செய்து வைத்துக்கொள்ளலாம். இம்முறையில் செய்யும் அப்பம் பதினைந்து நாட்களுக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும்.

--Ksubashini 17:09, 18 மே 2010 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=கடலைப்பருப்பு_தோசை&oldid=2163" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 18 மே 2010, 17:11 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,881 முறைகள் அணுகப்பட்டது.