ஈ ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சிங்கை கிருஷ்ணன் 



ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்
ஈட்டி எட்டும் மட்டும், பணம் பாதாளம் மட்டு.
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
ஈர நாவிற்கு எலும்பில்லை.


உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை
உடையும் வறுமையும் ஒரு வழி நில்லா
உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை
உட்கார்ந்து அல்லவா படுக்க வேண்டும்.
உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத நிலத்தில் நெல்லு.
உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.
உண்ணாச் சொத்து மண்ணாய் போகும்.
உப்பிட்ட வரை உள்ளவும் நினை
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
உடலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
உள்ளங்கைப் புண்ணுக்குக் கண்ணாடி ஏன்?
உள்ளது போகாது இல்லது வராது.
உள்ளம் தீயெரிய உதடு பழஞ்சொரிய.
உள்ளூரிலே விலைப்படாத மாடா அயலூரிலே விலைப்படும்?
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க் கலைவானேன்?














--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:54, 27 செப்டெம்பர் 2011 (UTC)














--

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 27 செப்டெம்பர் 2011, 13:54 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,268 முறைகள் அணுகப்பட்டது.