இறைவனைக் காண்போம்---உடும்புமரபு விக்கி இருந்து உடும்புப் பிடின்னு கேள்விப் பட்டிருப்பீங்களே. விடாது இறுக்கப் பிடித்துக் கொள்வதற்கு உடும்புப் பிடி என்று சொல்வதுண்டு. அப்படி என்ன விசேஷம் அந்த உடும்புப் பிடியில்?
அந்த நாள் காதல் கதைகளில் சொல்லுவார்கள். ஒரு ராஜ குமாரன் தன் காதெலியைக் காண, அந்தப்புரத்தின் உயர்ந்த மதில் சுவற்றைத் தாண்டிட உடும்பின் இடுப்பில் கயிற்றினைக் கட்டி அதைத் தூக்கி சுவற்றின் மீது எறிந்து அது கெட்டியாகச் சுவற்றைப் பிடித்துக் கொள்ள கயிற்றைய்ப் பிடித்துக் கொண்டு அவன் சுவற்றின் மீது ஏறினான் என்று. உடும்பின் கால்களும் அதன் கூரிய நகங்களும் அவ்வளவு வலுவானவை. உடும்பு (இதை ஆங்கிலத்தில் Monitor lizard என்று அழைப்பார்கள்) ஊர்வனவான பல்லி, ஒணான், முதலை இனத்தைச் சேர்ந்தது. உடும்புகளில் சுமார் நூறு வகையான உடும்புகள் உள்ளன. சுமார் 8 அங்குல (20 சென்டி மீடர்) நீளமுள்ள உடும்பில் இருந்து பத்தடி (3 மீட்டர்) வரை நீளமுள்ள உடும்பு இனங்கள் வரை உள்ளன.
உடும்பின் நாக்கு பாம்பின் நாக்கினைப் போன்றே நுனியில் பிளந்திருக்கும். அவ்வப்போது நாக்கை வெளியே துருத்தி இந்தப் புறமும் அந்தப் புறமுமாக ஆட்டிப் பின் உள் இழுத்துக் கொள்ளும். இது அப்படிச் செய்வது பாம்பினைப் போலவே தன் இரை சென்றதை நுகர்ந்து கண்டறிவதற்காக இருக்கலாம். அல்லது மணம் செய்திடத் தக்க பெண் அவ்வழிச் சென்றிருக்கிறாளா என்பதைக் கண்டறிவதற்காக இருக்கலாம். உடும்பு என்னும் பிராணி, ஓணான், பல்லி இவற்றின் இனத்தைச் சேர்ந்தாலும் இவற்றின் இல்வாழ்க்கை அவற்றைப் போல பலாத்கார வாழ்க்கை அல்ல. இன்பக் காதல் வாழ்க்கை. அரணை போன்றே, ஆண் உடும்பு பெண் உடும்பின் கூடவே சென்றிடும். பெண் உடும்பு சற்று ஓய்வெடுத்தால் ஆண் உடும்பு பெண் உடும்பின் உடலருகேயே தானும் படுத்துக் கொண்டு தலையோடு தலை வைத்துக் கொள்ளும். அவ்வப்போது நாவினால் பெண்ணின் கழுத்தையும் தலையையும் நக்கிக் கொடுக்கும். (முத்தம் கொடுத்திடுதோ?) மனையாள் இசைந்த பின் புணரும். பின் சில நாட்களுள், பெண் உடும்பு இரண்டு மூன்றடி ஆழமுள்ள ஒரு குழி தோண்டி அதனுள் சுமார் இருபத்தி ஆறு முட்டைகள் வரை இட்டு. குழியை மண்ணால் மூடி விடும். முட்டைகளில் உள்ள கரு முதிர்ந்து குட்டியான உடன் அவை மண்ணைத் தள்ளிக் கொண்டு வெளியேறிடும். உடும்புகளை வீட்டில் வளர்ப்பவர்களும் உண்டு. கீழுள்ள படத்தில் ஒருவர் தான் வளர்த்த உடும்பின் காயத்திற்கு வைத்தியம் செய்திட அதை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வதைப் பாருங்கள்.
(படம் விக்கிபீடியா இணைய தளத்தில் இருந்து)
(பாலைவனத்து ஓணான் – படம் ந.க.)
--Geetha Sambasivam 09:11, 17 செப்டெம்பர் 2012 (UTC) |



