ஆரண்யேஸ்வரர் திருக்கோவில்மரபு விக்கி இருந்து
அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோவில் தல விருட்சம் : பன்னீர் மரம் ஆகமம்/பூஜை : காமிகம் பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர் : திருக்காட்டுப்பள்ளி மாவட்டம் : நாகப்பட்டினம் மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
தேவாரப்பதிகம்
தோலுடையான் வண்ணப் போர்வையினான் கண்ணவெண்ணீறு துதைத்திலங்கு -திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 12வது தலம்.
இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைபு. இந்த அமைப்பை குறிப்பிட்டு சம்பந்தர், ""தன்னருகே தசலிங்கம் கொண்ட உடையர்என்றுபாடியிருக்கிறார். இத்தலத்தில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் நவக்கிரக தலங்களில் புதன் தலமான திருவெண்காடு இருக்கிறது. தலபெருமை:
சுவாமி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். இவர் "ராஜயோக தெட்சிணாமூர்த்தி' என்று அழைக்கப்படுகிறார்.
உயர்ந்த பொறுப்பில் இருந்து பதவி இழந்தவர்கள், நியாயமாக செயல்பட்டும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் ஆரண்யேஸ்வரருக்கும், தெட்சிணாமூர்த்திக்கும் வஸ்திரம் அணிவித்து, பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதனால் இழந்த பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோர் பிரகாரத்தில் இருக்கின்றனர்.
நண்டு விநாயகர்: இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வனால் வழிபடப்பட்டவர் இவர். எனவே இவர் "நண்டு விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பு. பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூசிக வாகனமும் இங்கு கிடையாது. நண்டு, இவருக்கு வாகனமாக இருப்பதால் மூசிக வாகனம் இல்லை என்கிறார்கள்.
சிறப்பம்சம்: ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது.
அவரது பெயரால் சுவாமி ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுவதாவும் சொல்கிறார்கள். கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது தல வரலாறு:
தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க குருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான்.
அடர்ந்த வனத்தின் மத்தியில் சிவன், சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக்கண்ட அவன், சிவபூஜை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், ""நியாயத்திற்காக செய்யும் செயல் எத்தகையதாக இருப்பினும் அதற்கு பாவபலன் கிடையாது,என்று சொல்லி அருள் செய்தார். இவரே இங்கு ஆரண்யேஸ்வரராக காட்சி தருகிறார்.
சிறப்பம்சம்:
திருவிழா: .
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:07, 13 ஏப்ரல் 2011 (UTC) நன்றி - தின மலர்.
. |

