ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோவில்மரபு விக்கி இருந்து
அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோவில்
மூலவர் : ஆதிரத்தினேஸ்வரர்
பாடியவர்கள்: தேவாரப்பதிகம்
டவனவனவனவனவனவனவன வனவன வெந்த நீறணி மார்பில்தோல் புனை அந்தமில்லவன் ஆடானை கந்தமாமலர் தூவிக்கை தொழும் வலங்கொள்வார் வினை மாயுமே. -திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத்தலங்களில் இது 9வது தலம்
தல சிறப்பு: அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தல முருகனை, "சிற்றின்பம் கலக்காமல் பேரின்ப நிலையில்' பாடியுள்ளார்.
அம்மன் சிநேகவல்லி, அன்பாயிரவல்லி. தீர்த்தம் சூரியபுஷ்கரிணி, வருண, வாருணி, மார்க்கண்டேய, அகத்திய, காமதேனு தீர்த்தங்கள். அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றபின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், ""திருவாடனைக்கு வா சொல்லித் தருகிறேன்என்றார். அதன்படி அர்ஜுனனும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தெரிந்து கொள்கிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இங்குள்ள சோமாஸ்கந்தரை அர்ஜுனன் ஸ்தாபித்தான் என்பது ஐதீகம். சூரியனின் கர்வம் போக்கிய தலம்: ஒரு முறை சூரியனுக்கு தான் மிகவும் பிரகாசமுடையவன் என்ற கர்வம் ஏற்பட்டது. இறைவனின் சிரசில் சூரிய ஒளி பிரகாசிக்க நந்தியினால் அந்த ஒளி இழுக்கப்பட்டு, சூரியனுக்கு சுய ஒளி போய்விட்டது. மனம் வருந்திய சூரியன், நந்தியிடம் பரிகாரம் கேட்டார். சுயம்பு மூர்த்தியாக திருவாடானையில் வீற்றிருக்கும் இறைவனை நீல ரத்தினக்கல்லில் ஆவுடை அமைத்து வழிபட்டால் சாபம் நீங்கும் என கூறினார். ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என பெயர் வந்தது. இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார். சுக்கிரனுக்குரிய அதிதேவதை: அம்மன் சிநேகவல்லி சுக்கிரனுக்குரிய அதிதேவதை ஆவார். இத்தலம் சுக்கிரனுக்குரிய சிறப்புத்தலம்.
தல வரலாறு: துர்வாச முனிவர் கோபத்துடன், ""வாருணி! நீ வருணனின் மகனாக இருந்தும், பொருந்தாத காரியம் செய்து விட்டாய். எனவே பொருந்தாத தோற்றமான, ஆட்டின் தலையும் யானையின் உடலுமாக மாறுவாய்,என சாபமிட்டார். ஆடு+ஆனை என்பதால் இத்தலம் வடமொழியில் அஜகஜபுரம் ஆனது. தன் தவறை உணர்ந்தான் வாருணி. இவனது நிலை கண்ட மற்ற முனிவர்கள், சூரியனுக்கு ஒளி கொடுத்த தலம் பாண்டி நாட்டில் உள்ளது. அத்தலத்து இறைவனை வழிபாடு செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று வாருணியிடம் கூறினர். அதன்படி வாருணியும் இத்தலத்தில் தன் பெயரால் குளம் அமைத்து தினமும் ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினார். இறைவனும் இவனது சாபம் நீக்கி, என்ன வரம் வேண்டும் எனக்கேட்க, கலிகாலம் முடியும் வரை இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும் என வரம் பெறுகிறான். அத்துடன் பெரியவர்களிடம் மரியாதைக் குøறாவாக நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கேட்கிறான். இறைவனும் அதற்கிசைந்து இத்தலத்தை "அஜகஜக்ஷத்திரம்' ஆடு+ஆனை+புரம் என வழங்க அருள்புரிந்தார். இதுவே காலப்போக்கில் "திரு' எனும் அடைமொழியோடு "திருவாடானை' என ஆனது.
சிறப்பம்சம்:
திறக்கும் நேரம்:
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:38, 23 ஏப்ரல் 2011 (UTC) நன்றி - தின மலர்.
|
