ஆடிக்கிருத்திகையின் சிறப்பு! முருகனுக்குரிய விரதங்கள் 1மரபு விக்கி இருந்துமுருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக்கிழமையும், நக்ஷத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு. முருகன் பிறந்தது விசாக நக்ஷத்திரம் என்று சொல்லப் பட்டாலும், அவனைப் பாலூட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை. கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்னிப் பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப் பட்டான். அவன் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப் படுகிறது. இப்படிச் சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கான நாமம் “சரவணபவ” என்னும் ஆறெழுத்தே ஆகும். நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது இந்த முருகனே என்பதே அருணகிரியார் கூற்று.
கார்த்திகை விரதமே கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும்விதமாக ஏற்படுத்தப் பட்ட ஒன்று எனக் கூறுவார்கள். சூரனை வதைக்க வேண்டி ஆறுமுகன் தோன்றியதும், அவனைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிப் போற்றி வளர்த்ததும், குமரன் வளர்ந்ததும், அவனை அணைத்து ஒன்று சேர்க்க உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தியதோடு, இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால், “கார்த்திகேயன்” எனவும் அழைக்கப் படுவான் என்று சொன்னார். இதைக் கந்த புராணம்,
கார்த்திகை விரதம் இருப்பது பற்றிக் கந்த புராணத்தில்,
கார்த்திகை விரதம் இருந்தாலும், இருக்கமுடியாவிட்டாலும் கீழ்க்கண்ட இரு திருப்புகழ்ப் பாடல்களை மட்டுமாவது படிக்கலாம் என்றும் சொல்லுகின்றனர். இவை மனதுக்கு நிம்மதியையும், சகல செல்வங்களையும் அருளிச் செய்யும் என வாரியார் ஸ்வாமிகள் கூறி இருக்கிறார்.
“அதிருங் கழல்பணிந்து னடியேனுன் எதிரங்கொருவரின்றி நடமாடும் சரணகமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில் தருணமிதையாமி குத்தகனமதுறு நீள் சவுக்ய அருணதள பாத பத்ம மதுநிதமுமேது திக்க
விரதம் பற்றிய செய்தி அறிந்து கொள்ளுவோருக்கு உதவியாய் இருக்கும் என்பதால் இன்றே பதிவு வெளிவருகிறது. இந்த விரதங்கள் பற்றித் திருவள்ளுவரும் சொல்லி இருக்கார் தெரியுமா?
"இலர் பலர் ஆகிய காரணம்-நோற்பார்
சிலருக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனாலும் மன நிம்மதி அரிதாகவே இருக்கும். சிலருக்கு வீடு, வாசல் இருக்காது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப் படுவார்கள். ஆனாலும் அவங்களுக்கு இருக்கும் ஆனந்தம் மற்றவரிடம் காண முடியாது. ஆனாலும் பணம், காசு இல்லாதவர்கள் என்று மட்டுமே பொருள் கொள்ளாமல், கணவன் சரியாய் இல்லாதவங்க, மனைவி சரியாய் அமையாதவர்கள், நன்கு படித்தும் அறிவு சரியாகப் பயன்படுத்தத் தெரியாம இருக்கிறவங்க, குழந்தைகள் இல்லாதவங்க, குழந்தைகள் இருந்தாலும் அவர்களால் துன்பம் அனுபவிக்கிறவங்க என்று வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்னை இருந்தே தீரும். இல்லாமல் இருக்காது.
ஆகையால் இத்தகைய பிரச்னைகளுக்குக் காரணமே வள்ளுவர் சொல்லுகின்றார். நோற்பார் சிலர், நோலாதவர் பலர் " என்று. அநேக உரைகளிலும் இந்த நோற்பு என்பதைத் தவம் என்ற பொருளில் எடுத்துக்கொண்டாலுமே, அதுவும் இங்கே பொருந்தி வருவதைக் காண்கின்றோம். நாள், கிழமை, விரதம் என நோன்பு நோற்பவர்கள் வர வரக் குறைந்து கொண்டே தான் வருகிறது. பலரும் இதில் உள்ள உடல் சிரமத்தைக் கண்டு நோன்பு, விரதம் என்று இருப்பதில்லை. உலகிலே தீவினைகள் அதிகம் ஆவதற்கே இதுவே காரணம் என்று சொல்லுகின்றார் வள்ளுவர். ஆகவே இந்த இடத்தில் விரதம் என்றும் வைத்துக் கொள்ளலாம். மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். --Geetha Sambasivam 08:18, 25 ஜூலை 2011 (UTC) |