அழிவில் உண்மை
மூலமும் உரையும்: முனைவர் கி. லோகநாதன், 1997
உரைக்கு காண்க:
https://sites.google.com/site/ulagansbooks/azivil-unmai-tamil-arum
இறைவாழ்த்து
அகில மெலாமாடி அறிவினி லுமாடி
அசுத்தம் போக்கி சுத்தம் புகுத்தி
முத்திநெறி பகரும் மோனவன் போற்றி
அவையடக்கம்:
சிந்திப்பார் கொள்வர் சீர்மை செருக்கொடு
நிந்திப்பார் இஇலர் நேர்மை நீசத்தின்
நொந்திப் பார்அலர் நுவலேன் யாதும்.
ஆரண காண்டம்:
முதலாம் அதிகாரம் : அநாதிபொருளியல்
படலம் ஒன்று : பதியுண்மை
சூத்திரம் 1 : பதியுண்மை
அறிவின் திறனும் அவாவின் போக்குந்நூன்
னெறியி னாய்வர் நுழைவுகட் பெற்று
பெயராப் பெயர்க்கும் பெரும்பொருள் காண்பர்
பெய்யருள் பெருக்கின் பேணின் பிழையாது
சூத்திரம் 2 : பசுவுண்மை
நோக்கி னெழுவது நுதல்வ தனைத்தும்
பார்க்கி னங்கு பரனொடு பாசத்தளையின்
பலவா றியங்கும் பாழிற்பசு பாராது
பரனே தானெனப் பயின்று பரிந்து
சூத்திரம் 3 : பாசவுண்மை
சுட்டறிவி னான்மா சுட்டறி பெற்றிமை
உற்றிடல் பரனினெதிரா உயிரோ டனாதியே
நிற்றிடல் நீக்கரு பண்பின் பாசம்
விட்டிடல் வேண்டும் விருப்பும் தேற்றி
இரண்டாம் அதிகாரம்: இலக்கணவியல்
படலம் இரண்டு :பசுவியல்
சூத்திரம் 4. பசுவுவின் முமுட்சுத்துவம்
கற்றிடு மான்மாக் கருமலம் போக்கி
வெற்றிட வம்பலத்து வீடுபேறு உற்றிட
கட்டிலா இஇறைவன் காட்டும் வழிப்பற்றி
விட்டிலா விழைவின் மெய்யறிவு விரும்பி
சூத்திரம் 5. தொழும்பியம்
அழித்திடும் இஇயல்பிற்று ஆணவ வலுப்பிடி
துமித்திடு திறனிற் தொல்லிருள் ஆன்மா
விரும்பிடு மிறைவனை வென்றிட வீழ்ச்சி
தொழும்பாய் நின்று துதித்தேப் போற்றி
சூத்திரம் 6: தெய்வீகத்துவம்
இஇருத்திக் கற்றளிகள் ஏன்றபல புகட்டி
தேற்றித் தெளிவு திரிபையம் போக்கி
காட்டித் தனைப்பதி கருத்தில் வளர்வான்
காணாவியல் புகட்பல கண்டுத் தெளிய
படலம் முன்று : பதியியல்
சூத்திரம் 7: சிவஞானச் சிவன்
சத்தறிவி னிறைவன் சதசத் தான்மாவைச்
சுத்தமதாச் சூழ்ந்து சோதிவடிவிற் காய்ந்து
சித்தமலங் கெடுத்துச் சிவமாக் குவன்
செம்மைச் சிவஞானம் சேரப் பூட்டி
சூத்திரம் 8. அமையப்ப இறைவன்
அம்மையோ டிணைந்து அயர்விலா தாடியருளின்
புன்மை யெலாம்போக்கிப் புனிதமே வளர்ந்து
நன்மை யெலாந் தருவன் நாடினார்க்கு
இஇன்பமெலாந் தூய்த்தினி தாற்றி இஇயல
சூத்திரம் 9: மோனத்தின் பரசிவன்
ஆணையின் இஇருவினையின் அல்லற்பட வைத்து
மோனவுட் குரலின் முனியவைத்துப் பாசங்கள்
சோனைச்சிவ கங்கையின் சோர்வும் போக்குவன்
அத்துவா வாகப்பல ஆமென அறிவித்து
படலம் நான்கு :பாசவியல்
சூத்திரம் 10 பந்தத் தோற்றம்
ஆணவத்தி னிருள் திரோகத்தின் அஞ்ஞானம்
கட்டுண் டப்பசு கன்மங்கள் ஈட்டுவதின்
உற்றிட உடம்பும் அதனினோர் உலகுமென
பெற்றிடும் தனதாய் பிழையறிவின் மாயம்
.
சூத்திரம் 11. மாயைக் கழற்சி
மூலக்கற்றளி முட்டிமுடித்து அறிவினா திட்டான
மடைந்துமணி பூரகம் உற்றிடும் மாண்புடை யான்மா
கண்டிடு முலகிற் கருநிலை யாடல்கள்
வென்றிடு மாய்மை வீழுமிறை யருளின்.
சூத்திரம் 12: மலக் கழற்சி
அநாகத மழிக்குமே கன்மம் யதன்பின்
அருளின் விசுக்தியும் ஆக்ஞையு மகற்றும்
அரியதா மணுவம் ஆதவன் புகுத்தி
மறைப்பின் திரோதகம் மலமாய் எஞ்சிட
பூரண காண்டம்
முன்றாம் அதிகாரம் :சாதனாவியல்
படலம் ஐந்து: இல்லறச்சாதனம்
சூத்திரம் 13: காமத்து இல்லறம்
கானற்பால் காமப்பால் கலங்கா வுண்டிடும்
ஞானத்து வான்மா நலமே வளர்ந்து
மோனத்துப் பெருவெளி முயலா நுழைந்து
காலத்துப் படாஅக் கழற்கதி உற்றிடும்.
சூத்திரம் 14: அறத்தில் சிறத்தல்
நாதவிந்து நர்த்தனம் சிக்கி நலனுண்டு
பேதங்கட் போக்கிப் பெய்யருட் பெருக்கி
மாதவத் துறுதியின் மயக்கங் கெடுத்து
ஆதவன் தானாகும் அயர்வில் லான்மா
சூத்திரம் 15 : அருளின் உகவாழ்க்கை
அன்பேத் தானாகும் ஆசுவில் ஆன்மப்
பண்பே பசுவின் பாழிலா யிருப்பு
துன்பேத் தோற்றாத் தூயநல் வடிவின்
இஇறைவனோ டியாண்டு மிணங்கிடு மியல்பு
படலம் ஆறு: சமயச் சாதனம்
சூத்திரம் 16: சிவஞானவொழுக்கம்
கழற்றிச் சரியையொடுக் கிரியாயோக ஞானங்கள்
கருதிச் சிவனைக் காதலின் கண்ணீர்மல் கக்கசிந்து
அற்றுமெய் யறிவின் அனைத்துப் பற்றுக்கள்
அரனடிச் சேர்தல் அன்பர்கட் கடனே
சூத்திரம் 17: நல்லறவொழுக்கம்
அறம்பிழையா அகத்திணை புறத்திணை யார்ந்துசிவ
புரந்தரும் உகத்திணை மெய்யினுவந் துயர்ந்து
வரந்தரும் சிவநடம் வழாதுநினைந் தயராது
அருளேக்கண் ணாவானந்த நடமாடிடல் வேண்டும்.
சூத்திரம் 18 : அருளொழுக்கம்
செய்யும் செயலெல்லாஞ் சிவச்செய லேயாக
துஞ்சலின் கண்ணும் தோன்றா தகம்பாவம்
அஞ்சுதலின்றி அரனடியே ஓர்பார்க்கு அவனியில்
எஞ்சுதல் இஇலாவகை எழுந்தருள் வானிறை
நான்காம் அதிகாரம்: பயனியல்
படலம் ஏழு : தொண்டு வாழ்க்கை
சூத்திரம் 19: மனநிறைவின் தொண்டு
இச்சையின் வரூஉமெவ் வினையின் இஇன்பமும்
துச்சமதாத் தொலைத்து தொலையாத் திருத்தொண்டின்
நித்திய வானந்தம் நேரிதாய்த் தூய்த்து
எச்சமில் நிறைவின் இஇனிமை நுகர்ந்திடும்
சூத்திரம் 20: பொதுமையின் உவகை
சாதிச்சழக்காடு சமயவெறி சமையா நெடுவாதங்கள்
ஓதாவொண்மைச் சிவஞானம தொளிர்ந்திட உலகெலாம்
ஒன்றென வுன்னுதல் ஓங்குதற்றரு சிவத்துவம்
உணர்த்திடு முலகிற்கு உண்மைநல் லுபதேசத்தில்
சூத்திரம் 21: நந்நயப் புசிப்பு
நன்றென தீதென நலிந்திடுஞ் சிந்தைபோக்கி
அருளென மருளென அவத்தை களும்போக்கி
நித்திய சத்திய நெடுவெளிதிரு சிற்றம்பலத்தின்
ஒழியா ஞானகற்ப முண்டிடயாண் டுமுதவுவர்
படலம் எட்டு :சிவவாழ்க்கை
சூத்திரம் 22: சாதனை வாழ்க்கை
ஆதியுமந் தமுமிலா அரனடி சேர்வார்க்கு
ஓதியும் வாராவுறுதித் தலைப்பட உகந்து
சாதனைகட் பலசெய்து சகத்தினை உயர்த்தி
வேதனையெ லாம்போக்கி விமலம் வளர்ப்பர்
சூத்திரம் 23: அருட்போர் வாழ்க்கை
அருட்போர் தொடுத்தணு வம்போக்கி அயர்வின்றி
மறுப்போர் வென்று வாய்மையிற் படுத்தி
விருப்பொடு வெய்கனல் மெய்யுலகுப் புக்கிட
நடிப்பர் நாதனுடன் நலியா திணைந்து
சூத்திரம் 24: ஆனந்த நட வாழ்க்கை
அஞ்சுவதுயா தொன்றுமிலை அஞ்சவருவது மிலையென்றே
அஞ்சாநெஞ் சத்தினயரா துழைத்துமெய் யன்பின்
அருளேத் திருமேனியாய் அரனேத் தானாய்
ஆனந்தத் திருகூத்தின் அகிலம் புரப்பர்.
படலம் ஒன்பது: ஏரணவியல்
சூத்திரம் 25. நூலிய அறிவியல்
அறிவிற் படுவதனைத்தும் ஆயவருந் நூல்
பொருளை இஇரட்டுருவிற் காட்டி யகத்தே
இஇலங்கிடு மறியாமை இஇருளைப் பாரிடும்
ஏதமில் லுத்திகள் எழுப்பிடு திறத்தன.
சூத்திரம் 26: ஏரணவுறுப்பியம்.
புகுந்துவுட் பொருள் பொருந்துத்தி யினறிந்து
சிறந்துச் செம்பொருட் டுணிவுநற் சூத்திரத்துப்
பகர்ந்து பரனுமொத்திடப் பல்லேதுவின் மேற்கோள்
காட்டிக் கருளிரிய கண்திறப் பிப்பதுவே
சூத்திரம் 27: மெய்யியம்
பல்லோ ரொத்திடப் பகர்ந்திடா தெதுவும்
மெய்யெனக் கொளவாரா விருப்பின் கற்பனை
பொய்யென வுமாகும் புரிந்கொள வழியில்லை
உண்மையெனு முணர்வின் உறுதி விளையாதலின்
முற்றும்